Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 24 மே, 2015

குழந்தை தவறினால் எளிதில் கண்டுபிடிக்க இணையதளம்: அரசின் புதிய முயற்சி!

குழந்தை தவறினால் எளிதில் கண்டுபிடிக்க, அரசு  புதிய வலைத்தளத்தை தொடங்கியுள்ளது .

www.khoyapaya.gov.in என்ற இணையத்தளத்தை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தி தொலைந்த குழந்தை குறித்த விவரங்களையும், புகைப்படத்தையும் பதிவேற்றலாம். இந்த இணையத்தளத்தை பெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி அமைச்சகமும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம் துறையும் இணைந்து நிறுவியுள்ளது.
 
அந்தந்த ஊரில் உள்ள காவல்துறையினர் மற்றும் குழந்தைகள் நலன் மற்றும் மீட்பு மையம் உதவியுடன் இந்த இணையதளம் செயல்படும். லட்சக்கணக்கான மக்களை இணைக்கும் இந்த இணையதளத்தின் மூலம் குழந்தைகளின் படங்களை வைத்து மிகவும் எளிதாக குழந்தைகளை கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைக்க முடியும் என நம்பப்படுகிறது. தற்போது இந்த இணையதளம் ஆங்கிலத்தில் உள்ளது. மிகவிரைவில் ஹிந்தி மற்றும் இதர பிராந்திய மொழிகளிலும் வரவுள்ளது.

1 கருத்து: