Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 24 மே, 2015

ஒரு வரலாற்று கடமை – தொடர் 6

குதிரை வண்டியிலிருந்து விழுந்த அனுபவம்!
 
1929-ஆம் ஆண்டில் பம்பாய் அரசாங்கம் தீண்டத் தகாதவர்களின் குறைகளைக் கேட்டறிந்து விசாரணை செய்ய ஒரு கமிட்டியை நியமித்தது. அக்கமிட்டியில் நானும் ஓர் அங்கத்தினராக நியமிக்கப்பட்டேன். தீண்டத்தகாதவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி, ஒடுக்குமுறை, கொடுமை பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்க இந்தக் கமிட்டி இராஜதானி முழுவதும் பயணம் செய்ய வேண்டியிருந்தது. கமிட்டி உறுப்பினர்கள் குழுவாகப் பிரிந்து பயணம் செய்ய வேண்டியிருந்தது. கமிட்டி உறுப்பினர்கள் குழுக்களாகப் பிரிந்து பயணம் செய்ய முடிவு செய்தோம். எனக்கும் மற்றொரு உறுப்பினருக்கும் கண்மேஷ் பகுதியின் இரண்டு மாவட்டங்கள் ஒதுக்கப்பட்டன. நானும் என் சகதோழரும் எங்களது பணி முடிந்தபின் பிரிந்து சென்றோம். யாரோ ஓர் இந்து சாமியாரைக் காண அவர் சென்றார். பம்பாய் செல்ல நான் ரயிலில் புறப்பட்டேன்.


துலியா அரகே உள்ள ஒரு கிராமத்தில் தீண்டத்தகாதவர்களின் மீது மற்ற ஜாதி இந்துக்கள் அறிவித்திருந்த சமூகப் புறக்கணிப்பு வழக்கு பற்றி விசாரிக்கச் செல்வதற்காக சாலிஸ்கான் இரயில் நிலையத்தில் நான் இறங்கினேன். சாலிஸ்கானைச் சேர்ந்த தீண்டத்தகாதவர்கள் இரயில் நிலையத்துக்கு வந்து அன்றிரவு அவர்களுடன் தங்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். இந்தச் சமூகப் புறக்கணிப்பு வழக்கை விசாரித்து விட்டு நேரடியாகப் பம்பாய் செல்வது என்பதுதான் எனது திட்டமாக இருந்தது. ஆனால் வந்தவர்கள் நான் தங்க வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டியதால் இரயில் தங்க ஒப்புக் கொண்டேன். அந்தக் கிராமத்திற்குச் சென்ற நான் அங்கு நிலவும் சூழ்நலையைப் பற்றி அறிந்து கொண்டு அடுத்த இரயிலிலேயே சாலிஸ்கானுக்குத் திரும்பிவிட்டேன்.

சாலிஸ்கான் இரயில் நிலையத்தில் தீண்டத்தகாதவர்கள் எனக்காகக் காத்திருப்பதைக் கண்டேன். எனக்கு மாலை அணிவிக்கப்பட்டது. அவர்களின் வீடுகள் உள்ள மஹர்வாடா என்ற இடம் இரயில் நிலையத்திலிருந்து இரண்டு மைல் தொலைவில் இருந்தது. அந்த இடத்தை அடைய ஓர் ஆற்றைக் கடந்து செல்லவேண்டும். ஆற்றின் குறுக்கே ஒரு பாலம் இருந்தது. மஹர் வாடா நடந்து செல்லும் தூரத்திலேயே இருந்தது. உடனடியாக நான் அங்கு அழைத்துச் செல்லப்படுவேன் என்று எதிர்பார்த்திருந்தேன். ஆனால் என்னை உடனே அழைத்துச் செல்வதாகத் தெரியவில்லை; ஏன் என்னைக் காக்க வைத்தனர் என்பதை என்னால் அறிந்துகொள்ள முடியவில்லை. அரை மணி நேரத்திற்குப் பின்னர் ஒரு குதிரை வண்டி இரயில் நடைமேடைக்கு அருகே கொண்டுவரப்பட்டு நான் அதில் ஏறிக் கொண்டேன். வண்டி ஓட்டியும் நானும் மட்டும்தான் அந்த வண்டியில் இருந்தோம். மற்றவர்கள் ஒரு குறுக்கு வழியே நடந்து சென்றனர். 200-அடி தூரம் அந்தக் குதிரை வண்டி சென்றபோது ஒரு மோட்டார் காருடன் அது மோதப் பார்த்தது. தினமும் சவாரிக்கு வண்டி ஓட்டிச் செல்லும் வண்டிக்காரர் இவ்வளவு அனுபவமற்றவராக இருக்கிறாரே என்று நான் வியப்படைந்தேன். அங்கே இருந்த போலீஸ்காரர் உரக்க கத்தியதால், காரின் ஓட்டுநர் காரைப் பின் வாங்கியதால், விபத்து ஏற்படுவது தவிர்க்கப்பட்டது.

ஒருவாறாக ஆற்றின் மீது உள்ள பாலத்தின் அருகில் நாங்கள் வந்தோம். பாலங்களின் மீது உள்ளது போன்று அதன் மீது ஓரத்தில் தடுப்புச் சுவர் எதுவுமில்லை. அந்தப் பாலம் நாங்கள் வந்த கொண்டிருந்த பாதையிலிருந்து செங்குத்தாக இருந்தது. பாதையிலிருந்து பாலத்திற்கு வரும்போது வளைவில் திரும்ப வேண்டும். ஆனால் பாலத்தின் முதல் பக்கவாட்டுக் கல் அருகே வரும் போது, நேராகச் செல்வதற்குப் பதில் குதிரை திரும்பி ஓடியது. குதிரை வண்டியின் சக்கரம் பக்கவாட்டில் இருந்த கல்லின் மீது வேகமாக மோதியதால் நான் தூக்கி எறியப்பட்டு, பாலத்தின் மீதிருந்த கல் தரையில் வந்து விழுந்தேன். குதிரையும் வண்டியும் பாலத்திலிருந்து ஆற்றில் விழுந்துவிட்டன. வேகமாக நான் விழுந்ததால், அசைய முடியாமல் இருந்தேன். ஆற்றின் அக்கரையில் மஹர்வாடா இருந்தது. என்னை அழைக்க இரயிலடிக்கு வந்திருந்தவர்கள் எனக்கு முன் அங்கு வந்து சேர்ந்திருந்தனர். அழுகை மற்றும் புலம்பலுக்கிடையில் மஹர்வாடாவுக்குக் கொண்டு சென்றனர். கீழே விழுந்ததில் எனக்குப் பலத்த காயங்கள் ஏற்பட்டிருந்தன. எனது கால் எலும்பு முறிந்து பல நாட்கள் என்னால் நடக்க முடியாமல் போனது. இவையெல்லாம் எப்படி நடந்தன என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. தினமும் அந்தப் பாலத்தில் முன்னும் பின்னும் சென்று வந்து கொண்டிருந்த குதிரை வண்டி, அதற்கு முன் வண்டியை பாலத்தில் பாதுகாப்புக்காகக் கொண்டு செல்ல எப்போதும் தவறியதேயில்லை.

விசாரித்தபோது, எனக்கு உண்மைகளைச் சொன்னார்கள். இரயிலடியில் ஏற்பட்ட தாமதத்திற்குக் காரணம் தீண்டத்தகாத ஒரு பயணியைத் தனது வண்டியில் அழைத்த வர குதிரை வண்டிக்காரன் விரும்பாததுதான். அது அவனது கவுரவத்திற்குக் குறைவானதாம். நான் அவர்களிடம் இருப்பிடத்திற்கு நடந்து வரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டதை மஹர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அதனால் ஒரு சமரசம் செய்து கொள்ளப்பட்டது. குதிரை வண்டிக்காரன் வண்டியை வாடகைக்குத் தருவது என்றும் ஆனால் வண்டியை அவன் ஓட்டி வரமாட்டான் என்பதும் ஒப்புக் கொள்ளப்பட்டது. மஹர்களால் வண்டியை வாடகைக்கு எடுக்க முடிந்ததே தவிர, அதனை ஓட்ட முடியாது என்பதால் வேறு ஒருவரை வண்டி ஓட்டச் செய்யலாம் என்று அவர்கள் எண்ணினார்கள். இதுதான் சரியான தீர்வு என்று அவர்கள் கருதினார்கள். என்றாலும், பயணியின் கவுரவத்தை விட அவரது பாதுகாப்புதான் முக்கியமானது என்பதை மஹர்கள் மறந்துவிட்டார்கள் போலும்.

பாதுகாப்புதான் முக்கியம் என்று அவர்கள் நினைத்திருந்தால், என்னைப் பாதுகாப்பாக அழைத்துச் செல்ல இயன்ற வண்டி ஓட்டியைக் கொண்டு வந்திருப்பார்கள். உண்மையைக் கூறுவதானால் அவர்களில் எவர் ஒருவராலும் அந்த வண்டியை ஓட்ட முடியாது; ஏனென்றால் அது அவர்கள் தொழிலல்ல. எனவே அவர்களுள் ஒருவரை வண்டி ஓட்டி வரும்படி கேட்டிருக்கிறார்கள். வண்டியில் குதிரையின் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்ட அவருக்கு வண்டி ஓட்டுவதில் சிரமம் எதுவுமில்லை என்று நினைக்கத் தொடங்கிவிட்டார். ஆனால் புறப்பட்ட பின்னர்தான் தன் பொறுப்பை உணர்ந்த அவர் குதிரையைக் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பதற்றம் அடைந்துவிட்டார். என் கவுரவத்தைக் காப்பாற்ற முயன்ற சாலிஸ்கான் மஹர்கள் என் உயிருக்கே ஆபத்து ஏற்படும்படி செய்துவிட்டார்கள்.

அனைத்து தீண்டத்தகாதவர்களையும் விட, அவர் பார்-அட்-லாவாக இருந்தாலும் சரி, தானே உயர்ந்தவன் என்று, ஒரு வேலைக்காரனைவிட மேலானவன் அல்லாத அந்தக் குதிரை வண்டிக்காரனான இந்து நினைத்திருந்தான் என்பது பின்னர் எனக்குத் தெரிய வந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக