வெள்ளி, 30 ஆகஸ்ட், 2013
புதன், 28 ஆகஸ்ட், 2013
விவாதத்திற்குள்ளான பெண் ஜனாஸா......
வ.களத்தூரில் நடந்த இந்த மய்யத் அடக்கம் தொடர்பான சலசலப்பு!
இரண்டு வருடங்களுக்கு முன்பு வ.களத்தூரில் குலாம் என்பவர் வபாவதர்க்கு முன்பு அவர் தான் மய்யத் ஆன பின் என்னை சொந்த இடத்தில அடக்கம் செய்ய வேண்டும் கூறினார் .அதனால் அவரை தன் சொந்த இடத்திலேயே அடக்கம் செய்ய அனுமதி வழங்கியது.
ஆனால் இன்று தன்னை குரான்,ஹதிஸ் (தௌஹீத் ஜமாஅத் ) முறைப்படி தான் அடக்கம் செய்ய வேண்டும் என்று கடிதம் எழுதி மய்யத் ஆன இவரை எதிர்ப்பது ஏன்?
திங்கள், 26 ஆகஸ்ட், 2013
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு விட்டது-தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் பேட்டி!
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு விட்டது-தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் பேட்டி!
ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2013
சனி, 24 ஆகஸ்ட், 2013
மீண்டும் சந்திப்போம் - கொல்லப்பட்ட மகளுக்கு தந்தையின் கண்ணீர் கடிதம்!
எகிப்தில் பதவியிலிருந்து முர்ஸி விலக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு அவசர நிலை பிரகடணப் படுத்தப்பட்டுள்ளது.
எகிப்து ராணுவம் நடத்திய கொடூரத் தாக்குதலில் முர்ஸியின் கட்சியின் பொதுச் செயலாளர் முஹம்மது பெல்தாகியின் மகள் அஸ்மா கொல்லப்பட்டார்.
சிறையில் இருக்கும் முஹம்மது பெல்தாகி தன் மகளுக்கு கவிதை வடிவில் ஒரு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இக்கடிதம் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட துருக்கி பிரதமர் எர்துகானிடம், வாசித்துக் காட்டப்பட்டது. கடிதத்தை படிக்கும் போது கவனமாக கேட்ட எர்துகானின் கண்கள் கண்ணீரால் நிரம்பின. சில நிமிடங்கள் மவுனமாக இருந்த எர்டோகன், பின்னர் கண்ணீரை துடைத்து விட்டு நிகழ்ச்சியை தொடர்ந்தார்.
வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013
என்று ஒழியும் இந்தக் குழந்தை தொழிலாளர் முறை?
நம்முடைய இந்தியத் திருநாட்டில் எல்லா விதமான வளங்களும், செல்வங்களும் இருந்தும் அதை சிறப்பாக செயல்படுத்த முடியாத நிலையே நீடித்து வருகிறது. நம்முடைய நாட்டின் மிகப் பெரிய வளமாக குழந்தைகள் காணப்படுகின்றனர். ஒவ்வொரு நாட்டின் வளர்ச்சியும் அதனுடைய சந்ததிகள்தான் என்று சொன்னால் மிகையாகாது.
அப்படிப்பட்ட குழந்தைகள் தங்களுடைய உரிமைகளும், கடமைகளும் பறிக்கப்பட்டு வீதியில் விளையாட வேண்டிய பிஞ்சகள் வேலை செய்து கொண்டு டீ கடைகளிலும், ஹோட்டல்களிலும், செருப்பு கடைகளிலும் இன்னும் பல துறைகளிலும் வேலை பார்த்து வருகின்றனர்.
குறிப்பாக, கல்லுப்பட்டறை, மேன்ஷன்கள், தீப்பெட்டி தொழிற்சாலைகள், வீட்டு வேலைகள் போன்ற இடங்களில் கூலிக்கு மாரடிக்கின்றனர். இந்த நிலை மாற வேண்டும். அப்பொழுதுதான் நம் இந்தியத் திருநாடு வல்லரசு என்ற கனவை நிகழ்த்திக் காட்ட முடியும்.
இந்தியாவின் பங்கு
மாவட்ட அளவில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் நமதூர் மாணவி இரண்டாம் இடம்....
பெரம்பலூர் புனித தேமினிக் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் புதன்கிழமை நடைபெற்றது.
போட்டியில், பெரம்பலூர் மாவட்டப் பள்ளிகளை சேர்ந்த 70க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் முனைவர் சு. தம்புசாமி முன்னிலையில் நடைபெற்ற கவிதைப் போட்டியில் வாலிகண்டபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி இரா. கலைவாணி முதல் இடத்தையும், பெரம்பலூர் ரோவர் மேல்நிலைப்பள்ளி மாணவி ப.ஷெக்கிலா குல்மான் இரண்டாம் இடத்தையும் பிடித்தனர். கட்டுரைப் போட்டியில் வி. களத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி ஷா. நஜிமுன்னிஷா முதல் இடத்தையும், லப்பைக்குடிகாடு அரசு
புதன், 21 ஆகஸ்ட், 2013
இந்திய நிர்வாக சேவை (The Indian Administrative Service)
இந்திய நிர்வாக
சேவை (The Indian Administrative Service) (ஐஏஎஸ் என சுருக்கமாக administrative civil service of the Government of India) இந்திய அரசின் நிர்வாக உள்நாட்டு சேவை
ஆகும். இந்திய நிர்வாக சேவை அதிகாரிகள் மத்திய அரசு, மாநில அரசுகள் மற்றும் பொதுத்துறை முக்கிய பதவிகள மூன்று .
இந்திய நிர்வாக
சேவை Indian Administrative Service I A S
இந்திய காவல்
சேவை Indian Police
Service I P S
இந்திய வன சேவை Indian Forest
Service I F S
ஐஏஎஸ் அதிகாரிகள்
ஒன்றியத்தின் அரசாங்க சேவை ஆணைக்குழு (Union Public Service Commission (UPSC) பரிந்துரையின் பேரில் அரசு அதிகாரிகள்
தேர்ந்தெடுத்தது பல்வேறு மாநில அரசாங்கங்கள் கீழ்
செவ்வாய், 20 ஆகஸ்ட், 2013
வெளிநாட்டிலிருந்து கொண்டுவரும் டிவி.,க்கு 36.05% வரி! ஆகஸ்ட் 26 முதல் அமல்!
வெளிநாடுகளிலிருந்து இனி டிவி கொண்டு வந்தால் வரி செலுத்தும் புதிய நடைமுறை வருகிற 26-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இந்திய ரூபாயின் மதிப்பு குறைவதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று ரூ.64.30 ஆக உள்ளது. எனவே தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வரும்
திங்கள், 19 ஆகஸ்ட், 2013
டாக்டர் அப்துல்லாஹ் அவர்கள் இஸ்லாத்திற்கு வந்தஉடன் சவூதி அரோபியாவில் எடுத்த நேர்காணல்
மின்னஞ்சல் மூலமாக
அப்துல் ஹமீது
அப்துல்லாஹ் பெரியார்தாசன் மறைவு: அறிவுக் கருவூலத்தை இழந்தோம்!
அப்துல்லாஹ் பெரியார்தாசன் மறைவு………..!!
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்….
இறைவனிடமிருந்தேவந்தோம் அவனிடமே திரும்பி செல்பவர்களாக இருக்கிறோம்…..
சகோதரர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்)இறையடி சேர்ந்து விட்டார்..
அன்னாரின் மக்ஃபிரத்துக்காக துஆ செய்வோம்…..
அறிவுக் கருவூலத்தை இழந்தோம்!
————————– ——————-
சேசாசலம் எனும் இயற்பெயர் கொண்டபெரியார் தாசன் 1949 ஆகஸ்ட் 21 ஆம் நாள் சென்னை பெரம்பூரில், வீராசாமி – சாரதாம்பாள் தம்பதியருக்கு
ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013
வெளிச்சத்தைக் கண்டு அஞ்சி ஓடும் இந்தியக் கட்சிகள்
காங்கிரசிலிருந்து பா.ஜ.க வரை. இந்துத்துவவாதிகளிடமிருந்து இடது கம்யூனிஸ்டுகள் வரை கைகோர்த்துக் கொண்டு ஒரு காரியத்தை வெற்றிகரமாகச் சாதித்துள்ளனர். அதுதான் தகவல் அறியும் உரிமைச் சடடத்திலிருந்து தங்களுக்குத் தாங்களே விலக்களித்துக் கொள்வது.
ஜனநாயகத்தில் வெளிப்படைத்தன்மை குறித்து வாய்கிழியும் அரசியல் கட்சிகள் தங்களுக்குத் தாங்களே வழக்குரைஞர்களாகவும், நீதிபதிகளாகவும், ஜூரிகளாகவும் இருந்து தன்னிச்சையாக ஆர்.டி.ஐ சட்டத்தைத் திருத்தியுள்ள அவலத்தைச் சாடுகின்றனர் அருணா ராயும் நிகில் டேயும்.
ஜனநாயக ஆளுகையில் தகவல் அறியும் உரிமை என்பது ஒரு மிகப் பெரிய புரட்சி எனலாம். ஒரு எம்.பியைக்காட்டிலும் ஒரு குடிமகளை அதிகாரமுள்ளவளாக ஆக்கியுள்ளது இச்சட்டம். எம்.பிக்களே நாடாளுமன்றத்தில் பேசுவதற்கான தகவல்களை ஆர்.டி.ஐ மூலம் பெறக்கூடிய நிலை உள்ளது.
புதிய தலைமுறை பச்சமுத்து – பாஜக கூட்டணிக் கனவுகள் !
புதிய தலைமுறை பச்சமுத்து – பாஜக கூட்டணிக் கனவுகள் !
“இந்திய ஜனநாயகக் கட்சியும், பாஜகவும் மூன்று ஆண்டுகளாக தோழமையோடு இருந்து வருகின்றன. இவ்விரண்டு கட்சிகளின் கொள்கைகளும், நோக்கங்களும் ஒன்றுதான்.
அக்டோபரில் நடைபெறவுள்ள, எங்கள் கட்சியின் நான்காவது ஆண்டு தொடக்க விழாவுக்கு பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கை அழைப்பதற்காக தில்லி வந்தேன்” இவைதான் பச்சமுத்து கூறிய கருத்துக்கள்.
இதன் மூலம் இவர்கள் சாதிக்க நினைப்பது.
சனி, 17 ஆகஸ்ட், 2013
பெண்கள் பலிகடாக்களா?
பெண்கள் பலிகடாக்களா?
ஹிஜ்ரி 20ல் முஸ்லிம்கள் எகிப்தைக் கைப்பற்றினர். அதன் கவர்னராக இருந்த அம்ர் பின் அல் ஆஸ் (ரலி) அவர்களிடம் அங்குள்ள கிறிஸ்தவத் தலைவர்கள் வந்து ஒரு முக்கியப் பிரச்னையைக் கூறினர். எகிப்தின் பொருளாதாரம் பெருமளவு நைல் நதியையே சார்ந்துள்ளது. நதியைத் திருப்திப்படுத்துவதற்காகவும், அதன் நீர் வற்றாமலிருக்கவும் அங்குள்ள மதச் சம்பிரதாயப்படி ஒவ்வொரு வருடமும் நைல் நதிக்கு ஒரு மனிதப் பலி கொடுக்கப்படும். ஆதலால் ஒவ்வொரு வருடமும் ஜூன் 12 அன்று இரவு ஒரு கன்னிப் பெண்ணைத் தேர்ந்தெடுத்து, மணப்பெண் போல் அலங்கரித்து நைல் நதியில் வீசி எறிந்து விடுவர். இப்படிச் செய்யவில்லையெனில் அந்த நதி வற்றிக் காய்ந்து விடும் என்று கவர்னரிடம் அந்தக் கிறிஸ்தவக் குழுவினர் கூறினர்.
வளர்பிறை - 3
வாழ்வின் பாதிநாள் அடுப்படியும், மீதி நாள் அடுப்புப் புகையுமே ஹாஜராம்மாக்கு கதி என்று ஆகி விட்டதால் கொஞ்சம் கொஞ்சமாய் வறட்டு இருமல் வந்து போனது. முஸ்தஃபா பல முறை டாக்டரிடம் போய் காண்பிக்கலாம் வாங்க என்று கூப்பிட்டும் ஹாஜராம்மா மறுத்து விட்டார். “சரியாகிடும்பா… இதுக்குலாமா ஆஸ்பத்திரி போவாங்க?” என்று சொல்லி நாட்களைத் தள்ளிப் போட்டுக்கொண்டே போய்விட்டார்.
அன்றைக்கு ஒரு நாள் அதிகமாக இருமல் இருந்ததால் முஸ்தஃபா “வாங்க போகலாம்” என்று கையோடு அழைத்துப் போய் டாக்டரிடம் பரிசோதனை
வெள்ளி, 16 ஆகஸ்ட், 2013
புதன், 14 ஆகஸ்ட், 2013
பெரம்பலூர் மாவட்ட மனித வள அறிக்கை தயாரித்து வழங்க, முன் அனுபவமுள்ள நிறுவனங்களிடமிருந்து கருத்துரு வரவேற்கப்படுகிறது - மாவட்ட ஆட்சியர்
பெரம்பலூர் மாவட்ட மனித வள அறிக்கை தயாரித்து வழங்க, முன் அனுபவமுள்ள நிறுவனங்களிடமிருந்து கருத்துரு வரவேற்கப்படுகிறது என்றார் மாவட்ட ஆட்சிர் தரேஸ் அஹமது.
இதுகுறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் வளர்ச்சியடைந்த நாட்டிற்குச் சரி சமமாகவும், இந்தியாவில் முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றியமைக்க தமிழ்நாடு பார்வை 2023 வெளியிடப்பட்டுள்ளது. மாவட்டங்களில் பல்வேறு பிரச்னைகளை வெளிக்கொணர்வதற்கும், அந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கும் உறுதுணையாக இருக்கும் வகையில் மாவட்ட மனிதவள அறிக்கை தயாரிக்க, மாநில திட்டக்குழுவால் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
திங்கள், 12 ஆகஸ்ட், 2013
ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2013
எங்கள் குன்னம் தொகுதியின் ஒரே பேரூர் “லப்பைக்குடிக்காடு”.
எங்கள் குன்னம் தொகுதியின் ஒரே பேரூர் “லப்பைக்குடிக்காடு”.
முழுதும் இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதி. இந்த ஊரை அரபு நாடுகளின் "மினியேச்ச" என்றே சொல்லாம். காரணம் வீட்டுக்கு ஒருவர் அரபு நாடுகளில் பணியில் இருப்பார்கள், அதே போல வெளிநாட்டு பொருட்கள் எளிதாக, உண்மையானதாக கிடைக்கும் என்பதாலும்.
பணிபுரிய செல்பவர்கள் அந்தந்த நாட்டின் குடிமகன்கள் போலவே ஆகிவிடுவார்கள். ஆனால் வருடம் ஒரு முறை ஊர் வந்து தங்கள் பங்களிப்பை செய்ய தவறமாட்டார்கள், வீட்டுக்கு மட்டுமல்ல, ஊருக்கும்.
எது மகிழ்ச்சி??
எது மகிழ்ச்சி??
கண் பார்வை இல்லாத சிறுவன் ஒருவன் வீதியில் இருக்கும் ஒரு மாடிப் படிக்கட்டில் அமர்ந்துக் கொண்டு பிச்சை எடுக்கிறான். அவன் அருகே " நான் குருடன், உதவுங்கள் " என்ற வாசகம் எழுதப்பட்ட பலகை ஒன்றும் காசு போடுவதற்கான பாத்திரம் ஒன்றும் இருக்கிறது.
அவ்வழியே செல்லும் யாரும் அவனுக்கு பெரிதாக உதவியதாக தெரியவில்லை. பாத்திரத்தில் சில்லறைகள் விழுந்தபாடும் இல்லை. அந்த வழியை கடந்த ஆண் ஒருவன், சிறுவனுக்கு உதவினான்.
பாக்கெட்டில் இருந்து சில்லரைகள் எடுத்து பாத்திரத்தில் போட்டான்.
பின், அருகில் இருந்த பலகையைப் பார்த்தான். இரண்டு நிமிடங்கள் சிந்தித்து விட்டு, பலகையை எடுத்து அதில் இருந்த வாசகத்தை மாற்றினான்.
சனி, 10 ஆகஸ்ட், 2013
வியாழன், 8 ஆகஸ்ட், 2013
தமிழகத்தில் பார்ப்பணுத்துவம்
பார்ப்பனத்துவ ஆதிக்கம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த தமிழகத்திலும், சமூக-அரசியல்-கலாச்சார நிலைமை தலைகீழாக மாறிக்கொண்டிருக்கிறது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தெளிவான, உறுதியானக் கொள்கையை அந்தக் கட்சியின் துவக்க விழாவில் செப்டம்பர் 18, 1949 அன்று அறிஞர் அண்ணா அழகாக படம்பிடித்துக் காட்டினார்: “திராவிடர் கழகமாகட்டும் – திராவிட முன்னேற்றக் கழகமாகட்டும் படை வரிசை வேறு என்றாலும் கொள்கை ஒன்றுதான். கோட்பாடு ஒன்றுதான், திட்டமும் வேறு அல்ல, என்ற நிலை இருந்தே தீரும். படைவரிசை இரண்டு பட்டுவிட்டது என்று எக்காளமிடும் வைதீகபுரிக்கும், வட நாட்டு ஏகாதிபத்யத்துக்கும் சம்மட்டியாக விளங்க வேண்டும். இரு கழகங்களும் இரு திக்குகளிலுமிருந்து வட நாட்டு ஏகாதிபத்யத்தை ஒழித்து, வைதீகக்காட்டை அழித்துச் சமதர்மப் பூங்காவை திராவிடத்தைச் செழிக்கச்
புதன், 7 ஆகஸ்ட், 2013
முக்கிய அறிவிப்பு
முக்கிய அறிவிப்பு
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ)
திங்கள், 5 ஆகஸ்ட், 2013
ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013
சனி, 3 ஆகஸ்ட், 2013
தெலுங்கானா-முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம்!
தெலுங்கானா-முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம்!
ஊருக்கு ஒரு ராஜாவாக இருந்த ஒரு பெரும் நிலபரப்பை இந்தியா என்ற ஒற்றை தேசமாக்கிய முஸ்லிம்கள் எங்கே பெரும்பான்மை ஆகிவிடுவார்களோ என்ற அச்சத்தின் விளைவான சூழ்ச்சி தான் இந்தியா பாகிஸ்தானாக பிளவு பட்ட சம்பவம்.
அதே நோக்கம் தான்…தற்போது ஆந்திராவிலும் நடைபெற்று இருக்கிறது.ஆனால் எதிர்மறை திட்டம் தீட்டப்பட்டு தெலுங்கானா என்ற பெயரில் இன்று மீடியாக்களில் தலைப்பு செய்தியாகி இருக்கும் ஆந்திர மாநில பிரிவினை.
அதாவது நாட்டை பிளவுபடுத்தி சிறுபான்மை ஆக்கினார்கள்.இங்கே பிரிந்து இருந்ததை ஒன்று படுத்தி சிறுபான்மை ஆக்கியிருக்கிறார்கள்.
வெள்ளி, 2 ஆகஸ்ட், 2013
சிறந்த இஸ்லாமிய ஆளுமைக்கான விருதுடன் தனக்கு கிடைத்த ஒரு மில்லியன் ஐக்கிய அரபு அமீரக திர்கத்தை நன்கொடையாக வக்பு செய்த ஜாகிர் நாயக்...
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் அரசு ஒவ்வொர் ஆண்டும் முஸ்லிம்களின் புனித மாதமான ரமலானில் அவ்வாண்டுக்கான சிறந்த இஸ்லாமிய ஆளுமைக்கான விருதை கடந்த 17 ஆண்டுகளாக வழங்கி வருகின்றது. இந்த வருடம் துபாய் அரசு வழங்கும் சிறந்த இஸ்லாமிய ஆளுமைக்கான விருது இந்தியாவைச் சார்ந்த பிரபல இஸ்லாமிய பிராச்சாரகர் ஜாகிர் நாயக்குக்கு வழங்கப்பட்டது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)