Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 7 ஆகஸ்ட், 2013

முக்கிய அறிவிப்பு

               முக்கிய அறிவிப்பு
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ)
 
06-08-2013 அன்று மாலை சுமார் 6.30 மணிக்கு  நமதூர் பிலால் தெருவில் (பிலால் பள்ளி அருகில்) சென்று கொண்டிருந்த நமதூர் பெண்கள் இருவரில் ஒருவர் கையில் வைத்திருந்த சிறிய பையை (small bag with money and mobile phone)பின்னால் இருந்து மொபட்டில் வேகமாக வந்த அடையாளம் தெரியாத ஒருவன் பறித்துக்கொண்டு சென்று விட்டான். இவர்கள் இருவரும் கத்தியபடி சிறிது தூரம் ஓடியும், நோன்பு திறக்கும் நேரம் என்பதால் ஆட்கள் அதிகம் நடமாட்டம் இல்லாததால் உடனே அவனை விரட்டி சென்று பிடிக்க முடியாமல், சிறிது நேரம் தாமதத்தில் சென்ற நம் பையனால் அவனை பிடிக்க முடியவில்லைஅவன் வந்த மொபட்டில் நம்பர் பிளேட் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
          பெண்களிடம் அதுவும் மாலையில் கையில் உள்ள பையை பறித்து சென்ற சம்பவம் இதுவே முதன் முறையாகும். நோன்பு திறக்கும் நேரம் ஆட்கள் அதிகம் நடமாட்டம் இருக்காது என்று தெரிந்துக்கொண்டு கைவரிசையை காட்டியுள்ளான். பல பொருட்களை கையில் எடுத்து செல்லும், நமதூர் பெண்கள் , பிள்ளைகளின் பாதுகாப்பு தற்பொழுது கேள்விக்-குறியாகி உள்ளது. நகரங்களில் மட்டுமே நடந்து கொண்டுள்ள இது போன்ற திருட்டுகள் நமதூருக்கும் வந்து விட்டது. இனி தெருக்களில் கையில் பையுடன் நடமாடும் பெண்கள் மிகுந்த கவனமுடன் இருப்பது நலம்.
1.சிறுவர், சிறுமிகளிடம் பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை கொடுத்தனுப்புவதை தவிர்க்கவும்.
2.சாலையில் செல்லும் பெண்கள் இடதுபுறமாக செல்லவும்,கையில் உள்ள பொருட்களையும் இடது புறமாகவே பிடிக்கவும். பணம், செல்போன் போன்ற பொருட்களை வெளியில் தெரியாமல் எடுத்து செல்வது நலம்.
3. டி எம் லிருந்து பணம் எடுத்து வரும் போது உள்ளேயே எண்ணிப்பார்த்து பாதுகாப்பாக வைத்துக்கொண்டு பிறகு வெளியில் வருவது நலம். தேவை-யில்லாமல் உதவிக்கு வருவது போல் அருகில் வரும் அறிமுகம் இல்லாத நபர்களை அனுமதிக்காதீர்கள்.
4.தெருக்களில் செல்லும் போது பின்னால் வரும் இருசக்கர வாகனங்களுக்கு வழி விட்டு நம்மை கடந்து சென்ற பிறகு செல்வதும், மிகுந்த எச்சரிக்கை-யோடு இருப்பதும் நலம்.
5.எக்காரணம் கொண்டும் சிறிய பிள்ளைகளுக்கு தங்க நகைகளை அணிவிப்பதும், பெண்கள் தாங்கள் அணிந்துள்ள நகைகள் வெளியே தெரியும் படி நடப்பதும் கூடாது.
6.தெருக்களில் அளவுக்கதிகமான வேகத்தில் செல்லும் அடையாளம் தெரியாத இருசக்கர வாகன ஓட்டிகளை கண்டிப்பதும், தேவைப்பட்டால் அவர்களை விசாரிப்பதும், அருகில் உள்ள ஒவ்வொரு ஆண்கள் மற்றும் இளைஞர்களின் கடமை என்பதை மறவாதீர்கள்.
 பொதுநலம் கருதி வெளியிடுவோர்

Y.Rafi Ahamed, B.sc ; D.pharm.

1 கருத்து:

  1. இதில்லிருந்து என்ன தெரிகிரது,நமதூர் தர்சமயம் பாதுகாப்பு அற்ற சூல்நிலை உருவாகிக் கொன்டு வருகிரது.ஒவ்வொருவரும் கவனமாக இருக்க வேண்டும்.ஊர் ரில்உள்ள மக்கள் புதியதாக நடமாடுவர்களை கன்கானிக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு