Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 20 ஆகஸ்ட், 2013

வெளிநாட்டிலிருந்து கொண்டுவரும் டிவி.,க்கு 36.05% வரி! ஆகஸ்ட் 26 முதல் அமல்!

வெளிநாடுகளிலிருந்து இனி டிவி கொண்டு வந்தால் வரி செலுத்தும் புதிய நடைமுறை வருகிற 26-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இந்திய ரூபாயின் மதிப்பு குறைவதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று ரூ.64.30 ஆக உள்ளது. எனவே தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வரும்
ரூபாயின் மதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
முன்னதாக மத்திய அரசின் நடவடிக்கையின் அங்கமாக தங்கம், பிளாட்டினம் மற்றும் வெள்ளி நகைகளுக்கு இறக்குமதி வரியை 10 சதவீதம் அதிகரித்து கடந்த வாரம் நடவடிக்கை எடுத்தது.
இந்நிலையில் வெளிநாட்டிலிருந்து கொண்டு வரப்படும் எல்.சி.டி., எல்.இ.டி. மற்றும் பிளாஸ்மா வகை டெலிவிஷன்களுக்கு வரி விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு நேற்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
அதன்படி வெளிநாட்டிலிருந்து கொண்டு வரப்படும் டெலிவிஷன்களுக்கு 35 சதவீதம் சுங்கவரியும், அந்த வரியில் 3 சதவீதம் கல்வி வரியாக கூடுதலாக விதிக்கப்படும். மொத்தத்தில் 36.05 சதவீதம் இறக்குமதி வரி செலுத்த வேண்டும். இந்த வரிவிதிப்பு முறை வரும் 26-ந் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது.
மத்திய அரசின் இந்த முடிவு குறித்து நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறுகையில்; ‘ரூபாய் மதிப்பு வீழ்ச்சியை தடுப்பதற்காக அத்தியாவசியமற்ற பொருட்களுக்கு இறக்குமதி வரி விதிக்க வேண்டியது அவசியமாகிறது.’ என்றார்.
தற்போது வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகள் தங்கள் சொந்த தேவைக்காக கொண்டு வரும் டெலிவிஷன்களுக்கு எந்த வித வரியும் செலுத்த வேண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
துபாய், சிங்கப்பூர், பாங்காங், கோலாலம்பூர் ஆகிய இடங்களிலிருந்து வரும் விமானங்களில் குறைந்தது 48 பேர் டிவி.,க்களை கொண்டுவருவதாக விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவிக்கிறார்.
இந்தியாவில் 46" டிவி ஒன்றின் விலை 72 ஆயிரம் ரூபாய், அதே டிவியின் விலை துபாயில் 38 ஆயிரம் ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. அதேப்போல் சிங்கப்பூர் மற்றும் கோலாலம்பூரில் 14 ஆயிரத்திற்கு விற்கப்படும் 32" டிவி இந்தியாவில் 26 ஆயிரத்திற்கு விற்க்கப்படுகிறது.
இக்காரணத்தினால் வெளிநாடுகளில் வேலை செய்பவர்கள், சுற்றுலா செல்பவர்கள் ஒவ்வொரு தடவையும் இந்தியா வரும்போது டிவியை வாங்கி இந்திய விலையை விட குறைத்து விற்பனை செய்கின்றனர் என்கிறார் பிரபல எலக்ட்ரானிக்ஸ் நிறுவன மேலாளர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக