Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013

என்று ஒழியும் இந்தக் குழந்தை தொழிலாளர் முறை?

நம்முடைய இந்தியத் திருநாட்டில் எல்லா விதமான வளங்களும், செல்வங்களும் இருந்தும் அதை சிறப்பாக செயல்படுத்த முடியாத நிலையே நீடித்து வருகிறது. நம்முடைய நாட்டின் மிகப் பெரிய வளமாக குழந்தைகள் காணப்படுகின்றனர். ஒவ்வொரு நாட்டின் வளர்ச்சியும் அதனுடைய சந்ததிகள்தான் என்று சொன்னால் மிகையாகாது.
அப்படிப்பட்ட குழந்தைகள் தங்களுடைய உரிமைகளும், கடமைகளும் பறிக்கப்பட்டு வீதியில் விளையாட வேண்டிய பிஞ்சகள் வேலை செய்து கொண்டு டீ கடைகளிலும், ஹோட்டல்களிலும், செருப்பு கடைகளிலும் இன்னும் பல துறைகளிலும் வேலை பார்த்து வருகின்றனர்.
குறிப்பாக, கல்லுப்பட்டறை, மேன்ஷன்கள், தீப்பெட்டி தொழிற்சாலைகள், வீட்டு வேலைகள் போன்ற இடங்களில் கூலிக்கு மாரடிக்கின்றனர். இந்த நிலை மாற வேண்டும். அப்பொழுதுதான் நம் இந்தியத் திருநாடு வல்லரசு என்ற கனவை நிகழ்த்திக் காட்ட முடியும்.

இந்தியாவின் பங்கு

உலக அளவில் 25 கோடி குழந்தைத் தொழிலாளர்கள் (14 வயதுக்குட்பட்டோர்) உள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதில் நமது நாட்டில் 7 கோடி முதல் 8 கோடி குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

குழந்தைப் பருவம்

ஐக்கிய நாடுகள் சபை 18 வயதிற்கு உட்பட்டவர்களை குழந்தைகள் என்று குறிப்பிட்டுள்ளது.
இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவும், 1996ம் ஆண்டு குழந்தைத் தொழிலாளர் முறை ஒழித்தல் மற்றும் முறைப்படுத்துதல் சட்டமும் 14 வயதிற்கு உட்பட்டவர்கள் குழந்தைகள் என்று கூறுகிறது.
இப்படி, உலக நாடுகளின் மத்தியில் குழந்தைகள் கவனத்தை ஈர்த்துள்ளன. குழந்தைகளுக்கென்று தனிச் சட்டமும், முறையான திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

1991ம் ஆண்டு கணக்கின்படி 5.78 லட்சம் குழந்தைத் தொழிலாளர்கள் (5 முதல் 14 வயது வரை) உள்ளனர். தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டம், அனைவருக்கும் கல்வி இயக்கம், தொண்டு நிறுவனங்கள் மூலம் தமிழ்நாட்டில் குழந்தைத் தொழிலாளர்களை ஒழிக்கும் நடவடிக்கையில் அரசு இறங்கியுள்ளது.

2003ம் ஆண்டின் அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்ட கணக்கெடுப்பின் படி 70,344 குழந்தைத் தொழிலாளர்கள் இருந்தனர். இது 2008ம் ஆண்டு  25,589 ஆகக் குறைந்துள்ளது.
உலகில் 2 கோடி குழந்தைகள் ஆபத்தான பணிகளில் ஈடுபட்டுள்ளன. சர்வதேச தொழிலாளர் அமைப்பு கூறியுள்ள தகவலின்படி உலகம் முழுவதும் 2.15 கோடி குழந்தைகள் ஆபத்தான தொழில்களில் ஈடுபடுகின்றனர்.
உலகம் முழுவதும் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு தினம் ஜூன் 12ம் தேதி கொண்டாடப்படுகிறது.

கண்ணாடி தொழிற்சாலையில்

60,000 குழந்தைகள் கண்ணாடி தொழிற்சாலைகளிலும், வளையல் நிறுவனங்களிலும் வேலை பார்த்து வருகின்றனர்.

தீப்பெட்டி தொழிற்சாலையில்

2,00,000 குழந்தைகள் தீப்பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகின்றனர். இதில் 35% சதவீதம் குழந்தைகள் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள். 12 மணி நேரம் வேலை.

கார்ப்பரேட் தொழிற்சாலையில்

4,20,000 குழந்தைகள் கார்ப்பரேட் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகின்றனர்.
குழந்தை தொழிலாளர் (தடை மற்றும் சீரமைப்பு) சட்டம் 1986.
நாடு முழுவதும் உள்ள குழந்தைத் தொழிலாளர்கள் மூலமாக, ஆண்டுக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் கறுப்புப் பணம் உற்பத்தி செய்யப்படுகிறது என சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இது குழந்தைகள் உரிமை நல அமைப்பு “பச்பன் பச்சாவ்” வெளியிட்ட தகவல்.
அந்த அமைப்பின் வெளியீடான, “கேப்பிட்டல் கர்ரப்ஷன் சைல்ட் லேபர் இண்டியா” இந்தத் தகவலை கூறுகிறது.
இந்த தகவல்களின்படி வயது முதிர்ந்த வேலையாட்களை வைத்து வேலை செய்வதற்கு பதிலாக குழந்தைகளை வைத்து வேலை வாங்குகின்றனர். இதன் மூலம் வயது முதிர்ந்தவர்களுக்கு ஒரு நாள் வீதம் 100 ரூபாய் சம்பளம் என்றால், குழந்தைகளுக்கு ஒரு நாள் வீதம் 15 ரூபாய் கொடுத்தால் போதும்.
மேலும், இந்த அறிக்கை தெரிவிப்பது என்னவென்றால் நாடு முழுவதும் 6 கோடி குழந்தைத் தொழிலாளர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். சிறார் தொழிலாளர் முறை முற்றிலுமாக தடுக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் மத்திய அரசு 1995ல் தேசிய சிறார் தொழிலாளர் திட்டத்தை ஏற்படுத்தியது.
இந்தத் திட்டம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள சிறப்பு பள்ளிகளில் கல்வி மற்றும் தொழிற்பயிற்சி அளிக்கப் படுகிறது. இந்தத் திட்டம் தமிழகத்தில் 17 மாவட்டங்களில் செயல்படுத்தப்படுகிறது.
இதன் கீழ் 54 பள்ளிகளில், 25,000 சிறார்கள் பயின்று வருகின்றனர்.
இந்த சிறார் பள்ளிகளில் குழந்தைகள் தொழில்கல்வி, சுய முன்னேற்றம் சம்பந்தமான கல்வியை கற்று வருகின்றனர். இதற்கான செலவுகளை மத்திய அரசு ஏற்று வருகிறது.
இதன் மூலம் குழந்தைத் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவது தடுக்கப்படுகிறது. ரெயில், பேருந்துகள், பஸ் ஸ்டாண்டுகள், சாலையோரங்கள் என்று எங்கு பார்த்தாலும் குழந்தைகள் கஷ்டப்படும் நிலையை பார்க்கிறோம்.
58,000 குழந்தைகள் பள்ளி செல்லவில்லை. இது கணக்கெடுப்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கணக்கெடுப்புக்காக பணியில் 6 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இவர்கள் எடுத்த கணக்கெடுப்பின் விவரம் வருமாறு:
மாவட்டங்கள் 30.
பள்ளியில் இடையில் நின்ற குழந்தைகள் 51,644.
பள்ளியில் இதுவரை சேர்ந்தவர்கள் 7214.
வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்தவர்கள் 13,348.
தமிழ்நாட்டில் சமச்சீர் கல்வி குறித்து இன்று எழுந்துள்ள விவாதம், நடுவண் அரசால் நிறைவேற்றப் பட்டுள்ளது. இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் வரவேற்கப்பட்டாலும், கூடவே அது குறித்த கவலைகளும், விமர்சனங்களும் எழுந்துள்ளன.
இச்சட்டம் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டபோது, மொத்தம் 250 உறுப்பினர்களில் 54 பேர்தான் அவையில் இருந்தனர்.
எந்த விவாதமும் இன்றிக் குரல் வாக்கு மூலம் இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்திய ஜனநாயகம் தன் குழந்தைகளுக்கு கல்வி அடிப்படை உரிமை என்று ஏற்றுக் கொள்ளவே செய்கிறது. இத்தனை காலம் சென்றிருக்கிறது. 1993ல் உச்சநீதிமன்றத்தின் பெரும் மைல்கல்லான உன்னிகிருஷ்ணன் வழக்குத் தீர்ப்பு “கல்வி 14 வயதிற்கு உட்பட்ட அனைத்துக் குழந்தைகளின் அடிப்படை உரிமை” என்று அறுதியிட்டது.
அதன்பின் ஒன்பது ஆண்டுகள் கழித்து நடுவண் அரசு 2002ல் 86ன் அரசியல் சாசனத் திருத்தம் 21 மூலம்  அதை ஏற்றுக்கொண்டது.
அதற்கு 7ஆண்டுகள் சென்று, கல்வி உரிமையை நடைமுறைப்படுத்தும் இச்சட்டம் நிறைவேற்றப் பட்டிருக்கிறது.

குழந்தை மேம்பாட்டுக்கான அரசியலமைப்பு சட்ட உத்திரவாதம்

அரசியலமைப்பு சட்டத்தின் அரசுக் கொள்கை வழிகாட்டிக் கோட்பாடுகள் 21, 24 மற்றும் 39 வது பிரிவுகள் குழந்தைகளின் மேம்பாடு குறித்து உறுதி செய்துள்ளன.

பிரிவு 21

கல்வி உரிமை 6 வயதிலிருந்து 14 வயது வரையிலான அனைத்துக் குழந்தைக்கும் கல்வி கட்டாயக் கடமை என்கிறது.
“காற்றுள்ள போதே தூற்றிக் கொள்” என்பது  நம்முடைய தமிழகத்தில் அதிகமாக பயன்படுத்தும் பழமொழியாகும். ஆம்! நம்முடைய நாட்டில் அரசினால் நலத் திட்டங்கள் கொண்டு வந்தாலும் அதைப் பயன்படுத்தி மக்கள் முன்னேறுவதில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
வரக்கூடிய காலங்களில் இந்த நிலையை மாற்றி கல்வியறிவு பெற்ற சமூகமாக மாறவும், வேலைகளில் குழந்தைகள் இல்லை என்ற நிலையை உருவாக்கவும் பாடுபடுவோம். இதுவே நம் நாட்டின் வளர்ச்சிக்கு வழி வகுக்கும் என்பதை கருத்தில் கொண்டு அனைத்துக் குழந்தைகளையும் பள்ளிக்கு அனுப்புவோம்.

நன்றி தூது ஆன்லைன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக