வாழ்வின் பாதிநாள் அடுப்படியும், மீதி நாள் அடுப்புப் புகையுமே ஹாஜராம்மாக்கு கதி என்று ஆகி விட்டதால் கொஞ்சம் கொஞ்சமாய் வறட்டு இருமல் வந்து போனது. முஸ்தஃபா பல முறை டாக்டரிடம் போய் காண்பிக்கலாம் வாங்க என்று கூப்பிட்டும் ஹாஜராம்மா மறுத்து விட்டார். “சரியாகிடும்பா… இதுக்குலாமா ஆஸ்பத்திரி போவாங்க?” என்று சொல்லி நாட்களைத் தள்ளிப் போட்டுக்கொண்டே போய்விட்டார்.
அன்றைக்கு ஒரு நாள் அதிகமாக இருமல் இருந்ததால் முஸ்தஃபா “வாங்க போகலாம்” என்று கையோடு அழைத்துப் போய் டாக்டரிடம் பரிசோதனை
பண்ணும்போது, “இது ஒருவேளை சைனஸ் பிரச்னையாகக் கூட இருக்கலாம். இந்த மருந்து வாங்கி சாப்பிடுங்க… புகைல நிக்குறத தவிர்க்கப் பாருங்க” என்று சொல்லி அனுப்பினார்.
வீட்டுக்கு வந்ததும் முஸ்தஃபா, “நீங்க இனி அடுப்படி பக்கமே போகக் கூடாது… சொல்லிட்டேன்” என்றான்.
ஹாஜராம்மா: அது எப்படிப்பா போகாம முடியும்
ஹாஜராம்மா: அது எப்படிப்பா போகாம முடியும்
முஸ்தஃபா: இனி எல்லா வேலைகளையும் ஆயிஷாவும் நானும் பாத்துக்குறோம்.
ஹாஜராம்மா: ஆயிஷாதான் இப்போதும் எனக்கு உதவியா இருக்கா. அவளையே முழுக்க முழுக்க செய்ய சொல்ல முடியாதுப்பா. அவ கல்யாணம் பண்ணி வேற வீட்டுல போய் வாழ வேண்டிய பொண்ணு. தாய் வீட்டுல அவளுக்கு ரொம்ப கஷ்டம் கொடுக்கக் கூடாது. எனக்கு ஒண்ணுமில்ல. எப்போதும் போல நான் பாத்துக்கிறேன். நீ படிப்புல மட்டும் கவனம் செலுத்து.
“நீங்க இப்படித்தான்… நான் என்ன சொன்னாலும் கேக்க மாட்டீங்க” என்று அலுத்துக்கொண்டு முஸ்தஃபா படுக்கைக்குச் சென்றான்.
சிந்தனை பல விதமாய் சிதறியது. வாப்பாவைப் போன்று உம்மாவுக்கும் ஏதாவது நடந்து விட்டால்… ஐயோ… அதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. அப்படி ஒரு தாங்கிக்கொள்ள முடியாத இரணத்தை இறைவன் ஒரு போதும் நமக்குத் தரமாட்டான். “யா அல்லாஹ்! என்னை பெற்ற தாய்க்கு ஆரோக்கியமான வாழ்வையும், நீண்ட ஆயுளையும் தந்தருள் புரிவாயாக” என்று பிரார்த்தனை செய்து கொண்டே புரண்டு புரண்டு படுத்தான். கனத்த இதயமும் கலங்கிய கண்ணும் முஸ்தஃபாவை உறங்க விடவில்லை விடியும் வரை.
என்னதான் செய்ய? என்னதான் தீர்வு? என்று நினைக்கும்பொழுது….
(இன்ஷா அல்லாஹ் தொடரும்…)
(இன்ஷா அல்லாஹ் தொடரும்…)
நன்றி தூது ஆன்லைன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக