Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

சனி, 3 ஆகஸ்ட், 2013

தெலுங்கானா-முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம்!


தெலுங்கானா-முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம்!

ஊருக்கு ஒரு ராஜாவாக இருந்த ஒரு பெரும் நிலபரப்பை இந்தியா என்ற ஒற்றை தேசமாக்கிய முஸ்லிம்கள் எங்கே பெரும்பான்மை ஆகிவிடுவார்களோ என்ற அச்சத்தின் விளைவான சூழ்ச்சி தான் இந்தியா பாகிஸ்தானாக பிளவு பட்ட சம்பவம்.
அதே நோக்கம் தான்…தற்போது ஆந்திராவிலும் நடைபெற்று இருக்கிறது.ஆனால் எதிர்மறை திட்டம் தீட்டப்பட்டு தெலுங்கானா என்ற பெயரில் இன்று மீடியாக்களில் தலைப்பு செய்தியாகி இருக்கும் ஆந்திர மாநில பிரிவினை.

அதாவது நாட்டை பிளவுபடுத்தி சிறுபான்மை ஆக்கினார்கள்.இங்கே பிரிந்து இருந்ததை ஒன்று படுத்தி சிறுபான்மை ஆக்கியிருக்கிறார்கள்.

தெலுங்கானா என்பது உண்மையில் முஸ்லிம்களின் பிரச்சனை தான்.

சென்னை மாகாணத்தில் இருந்து ஆந்திரம் பிரிந்த பொழுது தெலுங்கானா என்பது தனி ராஜ்ஜியம் தான்.

இன்னும் விரிவாக அலசினால் இந்தியா சுதந்திரம் பெற்ற பொழுது தெலுங்கானா பகுதி தனி நாடு தான்.இந்தியாவில் வலுக்கட்டாயமாகத்தான் இணைக்கப்பட்டது என்பது கூடுதலாக நாம் அறிய வேண்டிய வரலாறு.

இப்பொழுது இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள வரைபடத்தை சற்று கூர்ந்து பாருங்கள்.அதில் உள்ள மாவட்டங்களின் பெயர்களை கவனித்து விட்டு பதிவில் தொடருங்கள்.

இன்றைக்கு உருவாகி இருக்கும் தெலுங்கானாவின் 9 மாவட்டங்களில் 5 அல்லது 6 மாவட்டங்களில் பெரும்பான்மை சமூகமாக அன்றைக்கு இருந்தது முஸ்லிம் சமுதாயமே.அதற்காகவே வரைபடத்தில் உள்ள மாவட்டங்களின் பெயர்களை படிக்க சொன்னேன்.

ஆதிலாபாத்,நிஜாமாபாத்,கரீம் நகர்,ஹைதராபாத்,மஹ்பூப் நகர் ஆகிய பெயர்களே சாட்சி சொல்லும் இது முஸ்லிம்கள் வாழ்ந்த பகுதி என்பதை.

அன்றைக்கு நேருவும்,பட்டேலும் ஒரு முஸ்லிம் மாநிலம் உருவாவதை அல்லது இயற்கையாகவே இருப்பதை விரும்பாததால் தான் தெலுங்கானா பகுதி சென்னை மாகாணத்தில் இருந்து பிரிந்த ஆந்திராவுடன் இணைக்க பட்டது என்பது மறக்கடிக்கப்பட்ட அல்லது மறைக்கப்பட்ட முஸ்லிம்களின் வரலாறுகளில் ஒன்று.

பின்பு மெல்ல மெல்ல இது ஆந்திர மக்களின் பிரச்சனையாக திசை திருப்பப்பட்டது.அந்த திட்டத்தில் அரசியல் வாதிகளும்,மீடியாக்களும் திறம்பட செயல்பட்டு தெலுங்கானாவின் உண்மை நிலை முற்றிலுமாக மாற்றப்பட்டது.

இந்த திட்டம் நிறைவேற்ற எடுக்கப்பட்ட காலங்களில் மெல்ல மெல்ல ஆந்திர மற்றும் ராயல சீமா மக்களை மேற்சொன்ன 5 மாவட்டங்களில் கச்சிதமாக குடியேற்றினர்.இதன் விளைவாக மெல்ல மெல்ல முஸ்லிம்கள் சிறுபான்மை நிலையை அடைந்து விட்டனர்.

இப்படி கொஞ்சம் கொஞ்சமாக சூழ்நிலை மாற்றப்பட்டு பிரச்சனை முழுதுமாக மாற்றப்பட்ட பின்பே மிக தைரியமாக இப்பொழுது தெலுங்கானாவின் பிரிவினையை அறிவித்து இருக்கிறார்கள்.

இதுதான் தெலுங்கானா என்ற இன்றைய பிரச்சனையின் உண்மை நிலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக