பெண்கள் பலிகடாக்களா?
ஹிஜ்ரி 20ல் முஸ்லிம்கள் எகிப்தைக் கைப்பற்றினர். அதன் கவர்னராக இருந்த அம்ர் பின் அல் ஆஸ் (ரலி) அவர்களிடம் அங்குள்ள கிறிஸ்தவத் தலைவர்கள் வந்து ஒரு முக்கியப் பிரச்னையைக் கூறினர். எகிப்தின் பொருளாதாரம் பெருமளவு நைல் நதியையே சார்ந்துள்ளது. நதியைத் திருப்திப்படுத்துவதற்காகவும், அதன் நீர் வற்றாமலிருக்கவும் அங்குள்ள மதச் சம்பிரதாயப்படி ஒவ்வொரு வருடமும் நைல் நதிக்கு ஒரு மனிதப் பலி கொடுக்கப்படும். ஆதலால் ஒவ்வொரு வருடமும் ஜூன் 12 அன்று இரவு ஒரு கன்னிப் பெண்ணைத் தேர்ந்தெடுத்து, மணப்பெண் போல் அலங்கரித்து நைல் நதியில் வீசி எறிந்து விடுவர். இப்படிச் செய்யவில்லையெனில் அந்த நதி வற்றிக் காய்ந்து விடும் என்று கவர்னரிடம் அந்தக் கிறிஸ்தவக் குழுவினர் கூறினர்.
கவர்னர் அவர்கள் எந்தத் தயக்கமும் காட்டாமல், “இந்த மூடப்பழக்கப் பலியை நான் ஒருபொழுதும் அனுமதிக்க மாட்டேன்” என்று அந்தப் பலியைத் தடை செய்தார்கள். இந்த வருடம் யாரைத் தேர்ந்தெடுக்கப் போகிறார்களோ, ஒருவேளை அது நாமாக இருக்குமோ என்று மரண பயத்தில் தத்தளித்துக்கொண்டிருந்த எகிப்திய கன்னிப் பெண்கள் அன்றுதான் விடுதலைப் பெருமூச்சு விட்டனர். இஸ்லாம் அங்கே காலூன்றி அந்தப் பெண்களைக் காப்பாற்றியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக