Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

வெளிச்சத்தைக் கண்டு அஞ்சி ஓடும் இந்தியக் கட்சிகள்

காங்கிரசிலிருந்து பா.ஜ.க வரை. இந்துத்துவவாதிகளிடமிருந்து இடது கம்யூனிஸ்டுகள் வரை கைகோர்த்துக் கொண்டு ஒரு காரியத்தை வெற்றிகரமாகச் சாதித்துள்ளனர். அதுதான் தகவல் அறியும் உரிமைச் சடடத்திலிருந்து தங்களுக்குத் தாங்களே விலக்களித்துக் கொள்வது.

ஜனநாயகத்தில் வெளிப்படைத்தன்மை குறித்து வாய்கிழியும் அரசியல் கட்சிகள் தங்களுக்குத் தாங்களே வழக்குரைஞர்களாகவும், நீதிபதிகளாகவும், ஜூரிகளாகவும் இருந்து தன்னிச்சையாக ஆர்.டி.ஐ சட்டத்தைத் திருத்தியுள்ள அவலத்தைச் சாடுகின்றனர் அருணா ராயும் நிகில் டேயும்.

ஜனநாயக ஆளுகையில் தகவல் அறியும் உரிமை என்பது ஒரு மிகப் பெரிய புரட்சி எனலாம். ஒரு எம்.பியைக்காட்டிலும் ஒரு குடிமகளை அதிகாரமுள்ளவளாக ஆக்கியுள்ளது இச்சட்டம். எம்.பிக்களே நாடாளுமன்றத்தில் பேசுவதற்கான தகவல்களை ஆர்.டி.ஐ மூலம் பெறக்கூடிய நிலை உள்ளது. 

பல ஊழல்கள் இச்சட்டத்தின் உதவியுடன் வெளிப்படுத்தப்பட்டன. உச்சநீதிமன்ற நீதிபதிகள் தாமாகவே முன்வந்து தம் சொத்துக் கணக்கை வெளியிட வேண்டிய நிர்ப்பந்தத்தை இச்சட்டம் உருவாக்கியது.

கருப்புப் பணம், வெள்ளைப் பணம், கார்ப்பரேட் பணம் எல்லாம் அரசியலைக் குட்டிசுவராக்கியுள்ளன எனப் புலம்பும் அரசியல்வாதிகள் ஆர்.டி.அய் சட்டத்தின் மூலம் அடைந்துள்ள இந்தப் பொன்னான வாய்ப்பை ஏன் இத்தனை வெறித்தனத்துடன் எதிர்த்து வெற்றிப் புன்னகை புரிகின்றனர்? ஏன் மக்களைக் கண்டி இப்படி இவர்கள் அஞ்சி நடுங்கவேண்டும்? 

இவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு எல்லோரும் பதில் சொல்ல வேண்டுமாம்? ஆனால் இவர்கள் மக்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல மாட்டார்களாம். எல்லோரும் ஆர்டி.அய் சட்டத்திற்குள் வருவார்களாம். Representation of the People Act க்குக் கீழுள்ளவர்கள் மட்டும் வரமாட்டார்களாம். என்ன நியாயம் இது?

மேலும் விபரங்களுக்கு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக