Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வெள்ளி, 16 ஆகஸ்ட், 2013

வி.களத்தூரில் அனுமதி இன்றி சுதந்திரதின பொதுக்கூட்டம் நடத்திய பாப்புலர் ப்ரண்ட் அமைப்பினர் கைது!

வி.களத்தூரில் இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு சுதந்திரதின பொதுக்கூட்டம் நடப்பதாக பாப்புலர்  ப்ரண்ட் ஆப் இந்திய அமைப்பினர் அறிவிப்பு கொடுத்து இருந்தனர் அவர்களின் அறிவிப்பின்படி கூட்டம்
மாலை 7.15 மனியக்ளவில் வி.களத்தூர் கௌசர் பானு திடலில் (நடுத்தெரு) நடைபெறுவதாக இருந்தது. ஆனால் இக்கூட்டம் நடத்த போலீஸ் தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது ஆகையால் தடையை மீறி
பொதுகூட்டம் நடத்த முயற்சி செய்த பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்திய அமைப்பினரை சேர்ந்த சுமார் 25 பேரை போலிசார் கைது செய்தனர்.


மின்னஞ்சல் மூலமாக
அப்துல் ஹமீது


2 கருத்துகள்:

  1. ஒரு காலம் இருந்தது !!
    ***********
    ஒரு ஊருக்குள் போலிஸ் வரவேண்டுமானால் ஊர் தலைவர் அல்லது ஜமாஅத்களிடம் முறையாக தகவல் சொல்லி, இன்னாரை விசாரிக்க வேண்டும் என்று அனுமதி பெறுவார்கள் காவல்துறையினர்.

    அந்த காலமெல்லாம் போய்,திறந்த வீட்டில் எதோ நுழைவதைப் போன்று சாதரணமாக நுழைந்து அத்துமீறுகிறார்கள்.

    அந்த காலத்தில் இப்படி பல இயக்க கூட்டமைப்புகள் இல்லை.

    ஆனால் இன்று....! மிகப்பெறும் கவலை அளிக்கிறது.

    இந்த உம்மதின் கண்ணியம் இன்னும் ஒரு படிமேல் எப்படி இருந்தது என்று பாருங்கள்.

    முற்காலத்தில் காரைக்காலை அடுத்துள்ள நிரவி என்ற ஊரில் நடக்கும் கோவில் ஊர்வலத்தில் கலவரம் நடந்துள்ளது. அதில் இஸ்லாமியர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இது அப்போது இருந்த துருக்கி கலீஃபாவுக்கு தெரியவர, அவ்வூர்வலத்திற்க்கு தடை விதித்து அங்கிருந்து அரசு ஓலை இங்கு அனுப்பிய
    வரலாறு உண்டு.

    இன்று இந்த உம்மத்தின் நிலை........?

    பதிலளிநீக்கு
  2. இஸ்லாமியர்கள் சுதந்திர்க்காக போராடியதை எங்க இவர்கள்
    அறிந்டுடுடுவிடுவார்களோ என்ற அச்சம் தான் இவர்களுக்கு .

    ஹமீது

    பதிலளிநீக்கு