பெரம்பலூர் மாவட்ட மனித வள அறிக்கை தயாரித்து வழங்க, முன் அனுபவமுள்ள நிறுவனங்களிடமிருந்து கருத்துரு வரவேற்கப்படுகிறது என்றார் மாவட்ட ஆட்சிர் தரேஸ் அஹமது.
இதுகுறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் வளர்ச்சியடைந்த நாட்டிற்குச் சரி சமமாகவும், இந்தியாவில் முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றியமைக்க தமிழ்நாடு பார்வை 2023 வெளியிடப்பட்டுள்ளது. மாவட்டங்களில் பல்வேறு பிரச்னைகளை வெளிக்கொணர்வதற்கும், அந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கும் உறுதுணையாக இருக்கும் வகையில் மாவட்ட மனிதவள அறிக்கை தயாரிக்க, மாநில திட்டக்குழுவால் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு, பெரம்பலூர் மாவட்ட மனிதவள அறிக்கை தயார் செய்யும் பணியை மேற்கொண்டு வருகிறது.
இந்த அறிக்கையை தயார் செய்வதில் தகுதியுள்ள, முன் அனுபவமுள்ள நிறுவனங்களின் பணியை பயன்படுத்திக் கொள்ள மாநில நிதிக்குழுவால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, மாவட்ட மனிதவள அறிக்கையை தயார் செய்வதில் முன் அனுபவமுள்ள நிறுவனங்களிடமிருந்து கருத்துருக்கள் வரவேற்கப்படுகின்றன. பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட நிறுவனம் தங்களது வரைவு அறிக்கையை நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க வேண்டும்.
விருப்பமுள்ள நிறுவனங்கள், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மாவட்ட திட்டமிடும் அலுவலகத்திலிருந்து வரையறைகள் மற்றும் நெறிமுறைகளை பெற்றுக் கொள்ளலாம்.
ஆக. 24-க்குள் தங்களது கருத்துருக்களை, மாவட்ட திட்டமிடும் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றார் அவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக