அமீரகத்தில் நமது நிருபர் துபாயில் நைஃப் ரோட்டில் உள்ள ஈத்கா எனப்படும் பெருநாள் திடலுக்கு சென்றிருந்தார். அப்பொழுது வழக்கம் போல் தொழுகை முடிந்தவுடன் பீரங்கி
கொண்டு வெடி வெடிப்பது வழக்கம். அந்த பீரங்கி துப்பாக்கி முன் சில பாகிஸ்தான் ஆட்கள் நின்று போட்டோ எடுத்துகொண்டு இருந்தனர் அப்பொழுது நமது அமீரக நிருபரின் நண்பர் அந்த பாகிஸ்தான் மனிதரிடம் கேட்டார் எதற்காக நீங்கள் இதுபோல் இந்த பீரங்கி முன் நின்று போட்டோ எடுத்து கொண்டு இருக்கீர்கள் என்றார். அதற்க்கு அவர் நாங்கள் எங்கள் நாட்டு மக்களிடமும் எங்கள் நாட்டு காவல் துறை அதிகாரிகளிடமும் காட்டுவோம். இதன் மூலம் எங்களுடைய வீரம் அவர்கள் மத்தியில் வெளிப்படும் என்றார்.
பின்பு அவர் சிறிது நேரம் கழித்து உங்கள் காவல் துறை அதிகாரிகளிடமும் இது போன்று போட்டோ எடுத்து நீங்கள் காட்டுவீர்களா? என்றார் அதற்க்கு இதுபோன்று விளையாட்டாக கூட ஏதாவது செய்தாலும் எங்களை தீவிர வாதின்னு முத்திரை குத்தி விடுவார்கள் என்று அங்கிருந்து விலகி விட்டார்.
அவர் விளையாட்டாக சொன்னாலும் அப்படிப்பட்ட சூழ்நிலைகள் தான் இன்று நமக்கும் நம்முடைய சமுதாயத்திற்கும் நிலவிவருகிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.
இந்த இரண்டு புகைப்படம் முக நூலில் இருந்து பெறப்பட்டது
அமீரகத்தில் இருந்து நமது நிருபர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக