வழக்கம் போல் அன்றும் அனைவரும் இஷா தொழுகைக்காக வந்திருந்தனர். யாரும் எதிர்பார்ததில்லை. இமாமின் கருத்தை கேட்ட அங்கிருந்த சுன்னத்துவல் காரங்க ஒரு கணம் புரியவில்லை. என்ன செல்லுராறு இமாம். இதற்கு முன் இருந்த இமாம் யாரும் இதை போன்ற கருத்தை சென்னதில்லையே ? இவரும் தொப்பி , ஜிப்பா
அணிந்திருக்கிறார் ஆனால் செல்ல கூடிய கருத்து நாம் இது வரைக்கும் கேள்வி பட்டதும் இல்லை இதற்கு முன் இருந்த எந்த இமாமும் இதை போன்ற கருத்தை சொன்னதில்லை. என்று ஒரு சலசலப்பு ஏற்பட்டது நமது மேற்கு மஹல்லாவில் சரி விசயத்திற்கு வருவோம்.
31.07.2013 அன்று இரவு இஷா தொழுகை முடிந்ததும் மேற்கு பள்ளிவாசல் இமாம் மறியாதைற்குறிய நவாப் ஹஜ்ரத் அவர்கள் ஒரு கருத்தை தெரிவித்தார்கள். அது என்ன கருத்து என்றால் வித்ரு தொழுகை என்பது இரவின் கடைசி தொழுகைதான் வித்ரு. ஆனால் இங்கு தராவிஹ் தொழுகை முடிந்து வித்ரு தொழுகை நடத்துவது எந்தவித ஆதாரமும் இல்லை ஏன் இப்படி அவர் சொன்னார் என்றால் ரமலானில் கடைசி பத்து இரவுகளில் நடைபெறும் தஹ்ஜத் தொழுகை நடைபெறுவதால் அது முடிந்து வித்ரு தொழுகையை தொழுவது தான் சுன்னத்து. ஆனால் இங்கு நடைபெறும் நிகழ்வு மார்க்கத்திற்கு புறம்பான காரியம் என்றார்.
இந்த கருத்தை கேள்வி பட்ட அங்குள்ளவர்கள் இமாமின் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் சிறிது நேரம் பரபரப்பாக ஆனது. இமாமை பார்த்து சிலர் இவர் என்ன நமது ஜமாத் கருத்துக்கு சமந்தமில்லாமல் வேறு ஜமாத்து போல தவ்ஹீத் வாதிபோல் (குர்ஆன் ஹதீஸ் பின்பற்றுபவர்கள் அனைவரையும் குறிக்கும்) பேசுகின்றார் என்றனர். சிறிது நேரத்தில் வழக்கம் போல் நிர்வாகிகள் நாங்கள் பார்த்து கொள்கிறோம் என்று தனியாக இமாமை அழைத்து கொண்டு சென்று விட்டனர்.
ஆனால் இமாம் சென்ன இந்த ஒரு கருத்து மார்க்க சிந்தனையாளலர்கள் யாரும் மறுப்பு சொல்ல இயலாது. காரணம் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு விசயத்தில் முடிவு செய்து விட்டால் அதற்று மாற்று கருத்து சொல்ல யாருக்கும் அருகதை கிடையாது. என்பது எம்போன்றோறுக்கு பெரியவர்கள் மற்றும் மார்க்க சிந்தனையாலர்கள் கற்றுக்கொடுத்த பாடம்.
முடிவாக நமது இமாம் கூறிய கருத்து
இது தான் ஆதாரம் முடிந்தால் என்னை வைத்து கொள்ளுங்கள் இல்லை என்றால் அனுப்பி விடுங்கள் என்றார்.
நாம் நம்முடைய இம்மை மறுமை வாழ்க்கையை அல்லாஹ்வும் அல்லாஹ்வின் தூதர் காட்டி தந்த வழிமுறையில் நாம் அமைத்தால் தான் நாம் வெற்றியடைய முடியும். அதனால் தான் ஹஜ்ரத் அவர்கள் அப்படி கூறினார்கள்.
மேலும் வித்ரு தொழுகையை பற்றி காணெலியை பார்க்கவும்..
நமது நிருபர்
சொல்ல வந்த கருத்தை யார் மனதையும் புண்படுத்தாமல் தெரிவிக்கவும். இன்ஷா அல்லாஹ் வெகு விரைவில் அவர்களும் குரான் மற்றும் ஹதீஸை மட்டுமே பின்பற்றும் நன் மக்களாக மாறுவார்கள் . நாமும் அவர்களுக்காக அதிகம் அதிகம் துவா செய்வோமாக
பதிலளிநீக்குஇவரும் தொப்பி , ஜிப்பா அணிந்திருக்கிறார் ஆனால் செல்ல கூடிய கருத்து நாம் இது வரைக்கும் கேள்வி பட்டதும் இல்லை இதற்கு முன் இருந்த எந்த இமாமும் இதை போன்ற கருத்தை சொன்னதில்லை
அ. சையது முஸ்தபா
ithu poiyana thagaval..
பதிலளிநீக்குpoiyana seithiyai parapathirgal..
marumaiyil neengalum allah vidathil bathil koora vendum..
"உங்களில் எவரேனும் இரவில்(பின் நேரத்தில்)தொழமுடியாது என அஞ்சினால் வித்ரை தொழுது விட்டு உறங்குங்கள்.இரவின் கடைசியில் எழலாம் என்று எவருக்கு நம்பிக்கையுள்ளதோ அவர் இரவின் கடைசியில் வித்ரைத் தொழட்டும்"என நபி(ஸல்)அவர்கள் கூறியுள்ளார்கள்.
பதிலளிநீக்குஅறிவிப்பவர்:ஜாபிர்(ரலி)
நூற்கள் :முஸ்லிம்,திர்மிதி.
மார்க்கத்தில் இரண்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.
பதிலளிநீக்குஸஹாபாப் பெருமக்களில் ஹஜ்ரத் அபூபக்கர், ஹஜ்ரத் உதுமான் ரலியல்லாஹு அன்ஹுமா ஆகியோர் இஷா தொழுதபின் உடனே வித்ரையும் தொழுது விடுவார்கள். ஹஜ்ரத் உமர், ஹஜ்ரத் அலி ரலியல்லாஹு அன்ஹுமா ஆகியோர் உறங்கி எழுந்து, பிறகு வித்ரைத் தொழும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். இந்த விபரத்தை பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செவியேற்றதும் 'அபூபக்கர் பேணுதல் உடையவர். உமர் தன்னம்பிக்கை உடையவர் என இரு செயல்களையும் புகழ்ந்துரைத்தனர்(இமாம் பைஹகி(ரஹ்),இமாம் அபூதாவுத்(ரஹ்) இதை ஆதாரபூர்வமான ஹதிஸாக தனது கித்தாபில் பதிவு செய்துள்ளார்கள்,
தயவு செய்து மார்க்கத்தை கூறு போடாதீர்கள், மேற்கு பள்ளி இமாம் இருந்தாலும் ஹதிஸ்களை அரைகுறைவாக படித்து விட்டு பதில் சொல்ல வேண்டாம், உமர்(ரலி) அவர்கள் 23 ரக்கத்து ரமலான் மாதம் தொழவைத்தார்கள் என்று இமாம் பைஹகி(ரஹ்), இமாம் அபிஷைபா(ரஹ்), இமாம் திர்மதி(ரஹ்),இமாம் மாலிக்(ரஹ்) ஆதாரபூர்வமாக பதிவு செய்துள்ளார்கள்,
உமர்(ரலி) அவர்கள் பின்பற்றலாம் என்று நபி(ஸல்) அவர்களின் பொன்மொழி
உங்களில் எனக்குப் பின்னால் யார் வாழ்கிறார்களோ அவர்கள் சமுதாயத்தில் அதிகமான கருத்து வேறுபாடுகளைப் பார்ப்பார்கள். அப்போது என்னுடைய வழிமுறையையும், எனது வழிமுறையை எடுத்து நடந்து நேர்வழி சென்ற கலீபாக்களின் வழி முறையையும் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். மேலும் அந்த வழிமுறைகைளை நீங்கள் உங்கள் கடவாய்ப் பற்களால் கவ்விக் பிடித்துக் கொள்ளுங்கள்.(அபூதாவுத்,அஹமத்)