Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

புதிய தலைமுறை பச்சமுத்து – பாஜக கூட்டணிக் கனவுகள் !


புதிய தலைமுறை பச்சமுத்து – பாஜக கூட்டணிக் கனவுகள் !


பத்திரிகையாளர் சந்திப்பில் பச்சமுத்து உதிர்த்த கருத்துக்களைப் பார்ப்போம்.



“இந்திய ஜனநாயகக் கட்சியும், பாஜகவும் மூன்று ஆண்டுகளாக தோழமையோடு இருந்து வருகின்றன. இவ்விரண்டு கட்சிகளின் கொள்கைகளும், நோக்கங்களும் ஒன்றுதான்.
அக்டோபரில் நடைபெறவுள்ள, எங்கள் கட்சியின் நான்காவது ஆண்டு தொடக்க விழாவுக்கு பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கை அழைப்பதற்காக தில்லி வந்தேன்” இவைதான் பச்சமுத்து கூறிய கருத்துக்கள்.

இதன் மூலம் இவர்கள் சாதிக்க நினைப்பது.

பச்சமுத்து அவர்கள் அம்பானி வரிசையில் வருவார். மோடியின் கிச்சன் கேபினட்டிலும் நுழைவார்.
இப்பேற்பட்ட சதுரங்க ஆட்டத்தில்தான் பச்சமுத்து பாஜக கூட்டணி மகிமை மறைந்திருக்கிறது. இந்த கூட்டணி தமிழகத்தில் வெல்லாமல் போனாலும் வேறு கோணங்களில் ஆதாயங்களை நிறையவே அடையும். அடுத்த பாராளுமன்ற தேர்தலில் ஒருக்கால் பாஜக கூட்டணி வென்று மோடி பிரதமரானால் என்ன நடக்கும்? இந்தியா முழுவதும் எஸ்ஆர்எம் கல்லூரிகள், போக்குவரத்து, குடிநீர், சினிமா, டிவி என அனைத்து தொழிலும் பச்சமுத்து அன் கோவினால் பரந்து விரிக்கப்படும். பிறகு பச்சமுத்து அவர்கள் அம்பானி வரிசையில் வருவார். மோடியின் கிச்சன் கேபினட்டிலும் நுழைவார்.
அதே போல தமிழகத்து பாஜகவிற்கு புதிய தலைமுறை டிவி, புதிய தலைமுறை வார இதழ் இரண்டும் கட்சிப் பத்திரிகை போல செயல்படும். மாவட்ட, மைய அளவில் உள்ள பாஜக தலைவர்களுக்கு எஸ்.ஆர்.எம் சீட்டுக்கள் கோட்டா முறையில் இலவசமாய் ஒதுக்கப்படும். தற்போது புதிய தலைமுறை பத்திரிகைக்கு சந்தா கட்ட நிர்ப்பந்திக்கப்படும் மாணவர்கள் இனி விஜயபாரத்திற்கும் (ஆர்.எஸ்.எஸ் வார இதழ்) கட்டுமாறு ‘அன்புடன்’ கேட்டுக் கொள்ளப்படுவார்கள். இப்படி பரஸ்பர ஆதாயம் இரு தரப்பிற்கும் ஏராளம் இருக்கின்றன.
இப்போதே தமிழக பாஜக தலைவர்கள் அனைவரும் முறை வைத்து புதிய தலைமுறை தொலைக்காட்சியில் தினமும் பேசும் வாய்ப்பினை பெற்றிருக்கிறார்கள். இனி பாஜக, இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ் பரிவாரங்கள், அரவிந்தன் நீலகண்டன் போன்ற ‘ஆய்வாளர்கள்’ அனைவரும் புதிய தலைமுறையை இந்துத்துவ தலைமுறையாக மாற்றுவார்கள். இது போல வார இதழிலும் மாலன் அவர்கள் பிய்த்து உதறுவார். பச்சமுத்து தனது இந்திய நிறுவனங்களை மேற்பார்வையிட சொந்தமாக விமானமே வாங்குவார்.
அடுத்த மாதம் பச்சமுத்து கட்சியின் நான்காண்டு தொடக்க விழாவிற்கு ராஜ்நாத் சிங் வரும் போது இவையெல்லாம் டீலாக பேசப்படவும் வாய்ப்பிருக்கிறது. இதில் எஸ்ஆர்எம் அறக்கட்டளை பாஜகவிற்கு அளிக்கும் தேர்தல் நன்கொடை கணக்கில் கொள்ளப்படாது.
பாஜக மற்றும் இந்திய ஜனநாயகக் கட்சியின் கொள்கையும், நோக்கமும் ஒன்றுதான் என்று பச்சமுத்து கூறியிருப்பதுதான் முக்கியம். அதன்படி ராமர் கோவில், இசுலாமியர் உள்ளிட்ட சிறுபான்மையினர் வெறுப்பு, அமெரிக்க அடிமைத்தனம், மதவெறிக் கலவரங்கள், இந்து ராஷ்டிரக் கனவு அனைத்திலும் பச்சமுத்து ஒன்றுபடுகிறார். நடுத்தர வர்க்கத்தின் தாலியறுத்து அவர் சேர்த்திருக்கும் சில பல ஆயிரம் கோடிகள் கொண்ட தொழிலும் அப்படி தொழில் செய்யும் முனைப்பும் பாஜகவிற்கு பொருத்தமானவையே.
ஆகவே உண்மையை உடனுக்குடன் அளிக்கும் புதிய தலைமுறை டி.வி, வார இதழ் போன்ற காவி ஊடங்களை இனியும் நடுநிலைமையான ஊடகங்கள் என்று கருதப் போகிறீர்களா, இல்லை செருப்பால் அடிக்கலாம் தப்பில்லை என்பீர்களா?

நன்றி;வினவு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக