Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 12 மார்ச், 2015

நாம் ஒரு மதத்தினர் இரண்டு பிரிவாக வாழ்கின்றோமா?

இது வி.களத்தூருக்கு மட்டும் இல்லை நமதூருக்கும் தான்

சுற்றுப்புற கிராமங்களுக்கு தீர்ப்புகளையும், தீர்வுகளையும் சொல்லி கொடுத்த முன்னோர்கள் வாழ்ந்த ஊர் வி.களத்தூர். ஆனால் இன்று நமக்குள் ஒற்றுமையில்லை என்று நினைக்கும் போது வேதனையாக இருக்கிறது. யாரோ செய்தால் அவர்களுக்கு மார்க்கம் தெரியவில்லை அதனால் செய்கிறார்கள் என்று நினைத்து ஒதுங்கிக்கொள்ளலாம். மூச்சுக்கு முன்னூறு தடவை ஒற்றுமை என்னும் கயிற்றை பற்றி பிடித்துக் கொள்ளுங்கள் என்று ஒற்றுமைப்பற்றி பேசும் நாமே இப்படி நடுத்தெருவில் அடித்துக்கொண்டால் என்ன சொல்வது. இந்த கபரஸ்தான் பிரச்சனையில் வெற்றிகண்டு யாரை திருப்தி படுத்தப்போகிறோம். இறைவனையா? இயக்கத்தையா? இல்லை மூதாதையர்களையா?

எனக்கு இப்பிரச்சனையின் அடிப்படையில் வி.களத்தூர் TNTJ வினரிடுமும் நமது ஜமாத்தார்களிடமும் சில சந்தேகங்கள் கேட்க தோன்றுகிறது.
நடந்த, நடக்கின்ற பிரச்சனைகள் உண்மையாகவே மார்க்க காரியங்கள் சரியாக கடைப்பிடிப்பதற்காகத்தான் நடக்கிறதா? காரணம் இறந்து போனவரின் ஜனாசா அடக்கம் செய்யும் காரியத்தில் மட்டும்தான் மார்க்க நெறிகளை ஜமாத்தார்கள் மீறுகிறார்களா? கல்யாண காரியங்களிலும், மற்ற காரியங்களில் நீங்கள் சொல்லும் முறைகளில்தான் நடத்தப்படுகிறதா? அப்போதெல்லாம் இந்த வேகமும், கோபமும், போராட்டமும் இல்லையே.
பேரித்தம் பழத்தை வைத்து கல்யாணம் நடத்த சொன்னாலும் ஜமாத்தார்கள் நடத்த தயாராகத்தான் இருக்கிறார்கள். ஆனால் அப்படி ஒரு எழிமையான திருமணம்தான் நடப்பதில்லை. அப்படியென்றால் TNTJ மர்கஸ் கட்டி தொழுகை நடத்த ஆரம்பித்த பிறகு நமதூரில் எந்த ஒரு தவ்ஹீது வாதிகளின் வீட்டிலும் கல்யாணமே நடக்கவில்லையா? ஊரில் கல்யாணத்தின் பெயரால் நடக்கும் அனைத்தும் சரியென்று நான் சொல்லவரவில்லை. கல்யாணத்தில் காட்டாத அக்கரை இன்று மைய்யத்தில் காட்டவேண்டிய அவசியம் என்ன? என்பதுதான் என் சந்தேகம்.
நாங்கள் செய்யும் முறையில்தான் அடக்கம் செய்வோம் என்று முடிவு செய்துவிட்டால் தொழுகைக்காக எப்படி தனித்து ஒரு இடத்தை வாங்கி அதில் மர்கஸ் என்று ஆரம்பித்து பின்பு தொழுக ஆரம்பித்தோமோ அதேபோல் கபரஸ்தானுக்கும் ஒரு இடத்தை வாங்கி அடக்கம் செய்யலாமே. இது ஒரு வாதத்திற்காகத்தான் சொல்கிறேன். தனியாக பிரிந்து செல்லவேண்டும் என்று நான் சொல்லவில்லை. 2001ல் வி. களத்தூர் பெரிய பள்ளியில் தொழுதுவிட்டு வந்தபோது பள்ளிவாசல் படியில் நின்றுக் கொண்டிருந்த லப்பைக்குடிக்காட்டை சார்ந்த ஒருவர் அங்கிருந்த சிலரிடம் ”என்ன உள்ளே ஒருத்தன் அந்த முறையில் தொழுகிறான் எப்படி நீங்கள் அனுமதிக்கிறீர்கள்” என்று கூறிக் கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த சிலர் அப்படியாவது அல்லஹ்வுக்காக தொழுக வருகிறானே என்று சந்தோஷப்படுங்கள். அதைவிட்டு  விட்டு அதை பெரிய குறையாக சொல்லி தொழுகவிடாமல் செய்யாதீர்கள் என்று கூறி எச்சரித்து அனுப்பினார்கள்.
இப்படித்தான் இன்றும் இருக்கிறது நமதூர். நெஞ்சில் கையைகட்டியும், ருகுவிற்கும், சுஜுதிற்கும் செல்லும் முன்பு கை உயர்த்தியும், இருப்பில் இருக்கும் போது விரலை அசைத்தும், அசைக்காமல் தூக்கி நிருத்தியும், பள்ளி நிறைய தொப்பி இருந்தாலும் அதை போடாமல் தொழுபவர்கள் நமதூர் பள்ளிவாசல்களில் தொழுதுக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களை யாரும் தடுக்கவில்லை.
தவ்ஹீது கொள்கையை பின்பற்றுபவர்கள் தனியாக பள்ளிவாசல் கட்டி தொழுது கொள்ளுங்கள் என்று ஊர் ஜமாத்தோ, நிர்வாகமோ எப்போதுமே  சொன்னதில்லை. ஆனால் நாமாகத்தான் மர்கஸ் கட்டி தொழுக ஆரம்பித்தோம். அதன் அடிப்படையில்தான் கபரஸ்தானுக்கும் தனியாக இடத்தை வாங்கிகொள்ள சொன்னேன்.
அதே போல் ஜமாத்தினரடமும் எனக்கு சில கேள்விகள் இருக்கத்தான் செய்கிறது. அடக்கம் செய்ய கேட்டது ஒரு இஸ்லாமிய ஜனாசாவைத்தானே? அதற்கு ஏன் இத்தனை முட்டுக்கட்டைகள்? அவர்களும் மார்க்கத்தில் உள்ளதை தானே சொல்கிறார்கள். அவர்கள் தொழுக வைத்தால் தொழுக வைக்கட்டும், அவர்களே அடக்கம் செய்யட்டும், அங்கே அவர்கள் துவா கேட்கவில்லையென்றால் கேட்காமல் போகட்டும். அதனால் நமக்கென்ன நஷ்டம்?  இதனால் நமக்கென்ன கவுரவம் குறைந்துவிடப்போகிறது.
உடன்பாடு இருந்தால் நாமும் செல்வோம் இல்லையென்றால் ஒதுங்கி கொள்ளலாமே. அதைவிடுத்து பிரச்சனைகளை ஏன் இவ்வளவு பெரிதாக்க நாமும் காரணமாக இருக்க வேண்டும். நமதூரில் நமது பராமரிப்பில் உள்ள பள்ளிவாசல்களில் உள்ள இமாம்களே எதிர்க்கும் தர்கா வழிபாடும் அதனை தொடர்ந்த சந்தனக்கூடும், பாட்டுக்கச்சேரிக்கும் ஏதோ சில காரணத்திற்காக அனுமதியளிக்கும் நாம் இந்த ஜனாசாவை அடக்கம் செய்யும் விசயத்தில் இவ்வளவு எதிர்ப்பு ஏன் காட்டவேண்டும்.
தொழுகை என்னும் விசயத்தை தவிர்த்து மற்ற எல்லாவிசயங்களிலும் நம்முடன்தானே இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த கபரஸ்தானில் உரிமை இல்லையா? இஸ்லாமிய பெயரை மட்டும் வைத்துக் கொண்டு பள்ளிவாசலுக்கும் வராமல் குடியும், கூத்தியாவுமாக சுற்றி திரிந்தவர்களையும், திரிபவர்களையும்  அந்த கபரஸ்தானில் அடக்கம் செய்துக் கொண்டுதானிருக்கிறோம். காரணம் அவர்களின் செயல்களுக்கான கூலியை படைத்த இறைவன் பார்த்துக் கொள்வான் என்ற எண்ணத்தில்தானே. அதே எண்ணம் இந்த விசயத்தில் நமக்கு ஏன் வரவில்லை அவர்களும் மார்க்கத்தில் உள்ளதைதானே சொல்கிறார்கள். பிறகேன் நாம் தடுக்கவேண்டும். அவர்களின் செயல்களுக்கு அவர்கள் இறைவனிடத்தில் பதில் சொல்லட்டுமே.
இனிமேலும் வி.களத்தூரில் ஒரு மதத்தைச்சேர்ந்தவர்கள் இரண்டு பிரிவாக வாழ்கிறார்கள் என்று செய்தித்தாள்களில் செய்திகள் வர வேண்டாமே.
பேசினால் தீராத பிரச்சனை ஏதும் இல்லை. ஆனால் அந்த  பேச்சானது கவுரவத்திற்காகவும், அமைப்புக்காகவும், இயக்கத்திற்காகவும் இல்லாமல் ஒற்றுமைக்காக மட்டுமே இருக்கும்படி பார்த்துக் கொள்ளவேண்டியது நம் அனைவரின் பொறுப்பு. சுமூகமாக பேசி ஒற்றுமை என்னும் கயிற்றை நாம் அனைவரும் பற்றிபிடித்துக் கொள்வோமே.
J. முஹம்மது அலி 
நன்றி கல்லாறு.காம்

7 கருத்துகள்:

  1. Mr. J. Muhammad Ali,

    இது பேசி திறக்கூடிய பிராசன்னை இல்லை. மனசல் தீர குடிய பிராக்ஷனை. TNTJ ஆட்கள் என்று nan muslim விசேசத்திருக்கு செல்லும் போது சகோதரத்துவம் பேணுவதாக சொல்லும் அவர்கள், தங்களுடைய உடன் பிறப்பு விசேசத்திருக்கு மட்டும் ஷிர்க் என்று நினைக்கிறார்களோ அது வரையிலும் இது தீர கூடிய பிராசன்னை இல்லை என்று கணிப்பு.

    Ungal Nalam Virumbi.

    பதிலளிநீக்கு
  2. அவர்களுக்கு இந்த கபரஸ்தானில் உரிமை இல்லையா?

    இல்லை.

    For the reason that they (Tawhid) are using their own mosque, jamath and maintained by their own cost.
    Now a day’s burial place has been maintained by other jamath (sunnath).

    They (Tawhid) are not paying any tariff to maintaining the burial place and others as well.

    How we have to anticipated from those people (sunnath) may accept for their maintaining property.

    This is truthfully they (tawhid) are intention are like as Israel.

    If you need a solution, they have to buy a new place for them burial purpose. No one hunk for them.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அஸ்ஸலாமு அழைக்கும்

      நாங்கள் தவ்ஹீத் கொள்கையை ஏற்று கொள்வதற்கு முன்பு வரை சுன்னத் ஜமாஅத் சொத்துக்கள் வாங்கவும் பள்ளிகட்டவும் பொருளாதார உதவிகள் செய்துள்ளோம். நாங்கள் தவ்ஹீத் கொள்கையை ஏற்றப் பின் பள்ளியில் தொழுக சென்றால் தினமும் பிரச்னை ஏற்பட்டது. இருபாலர் களின் தொழுகையும் வீணாக விரும்பாமல் எங்களின் பொருளாதரத்தை மட்டுமே கொண்டு தனிப்பள்ளி அமைத்து எங்களின் மார்க்கப் பணிகளை செய்துவருகிறோம். நாங்கள் தனியாக பிரியும் போது உங்களிடம் (சுன்னத்) சொத்துரிமை கொண்டாடவில்லை. கபரஸ்தான் எங்களின் பிறப்புரிமை இதை எவராலும் மறுக்க இயலாது நமது நாட்டு சட்டமும் அதைதான் சொல்கிறது. தெருவுக்கு தெரு பள்ளிவாசல் கட்டலாம் கபர்ஸ்தான் கட்ட முடியாது. அடக்கஸ்தலம் என்பது ஊருக்கு ஒன்றோ அல்லது இருக்கலாம். பொது கபரஸ்தானில் எங்களுக்கு அடக்க அனுமதி இல்லை என்றால், அதில் ஒரு பகுதியை உரிமை கொண்டாடி பெற்றுகொள்வோம். கபரஸ்தானை நாங்கள் பரமரிகிறோம் எங்களுக்குத்தான் முழு உரிமை என்று சொல்லவேண்டாம். செலவுகளை பகிர்ந்து கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம். எங்களின் வழிமுறை குரான் மற்றும் நபிவழிக்கு கட்டுப்பட்டது எங்கள் மீது குரான் மற்றும் நபிவழிக்கு மாற்றமானதை திணிக்க வேண்டாம். யாருடைய கொள்கை இஸ்ரேலுடன் ஒத்துள்ளது என்பதை தீர்ப்பு நாளில் அறிந்து கொள்வீர்கள். அல்லாஹுக்கு அஞ்சிகொள்ளுங்கள்

      நீக்கு
    2. Dear Mr. Syed Musthafa,
      Thanks for your prompt reply.
      நாங்கள் தவ்ஹீத் கொள்கையை ஏற்றப் பின் பள்ளியில் தொழுக சென்றால் தினமும் பிரச்னை ஏற்பட்டது. இருபாலர் களின் தொழுகையும் வீணாக விரும்பாமல் எங்களின் பொருளாதரத்தை மட்டுமே கொண்டு தனிப்பள்ளி அமைத்து எங்களின் மார்க்கப் பணிகளை செய்துவருகிறோம்.
      Please read the above sentence from your elevation twice or numerous.
      My queries have, during your burial’s no one dig up harm.
      If, your answer is yes means, why don’t you go to detach burial place for you own.
      If, your answer is no means, you may well acquire a cow but we don’t have to acquire a rope for rush up a cow.
      பொது கபரஸ்தானில் எங்களுக்கு அடக்க அனுமதி இல்லை என்றால், அதில் ஒரு பகுதியை உரிமை கொண்டாடி பெற்றுகொள்வோம்.
      Can you inform us, which one is public burial place WEST or EAST?
      Yet again, this is truthfully they (tawhid) are intention are like as Israel.
      And I would like to inform that every one fearing a GOD.


      நீக்கு
    3. Dear Mr. Syed Musthafa,

      கபரஸ்தான் எங்களின் பிறப்புரிமை இதை எவராலும் மறுக்க இயலாது நமது நாட்டு சட்டமும் அதைதான் சொல்கிறது.
      Furthermore, have you endorsed Nan Muslim Janahza at your be in possession of burial place as per above your statement (as per our country jurisdiction)? If, answer is YES means, no dispute or no prolongation and your JAMMATH is an enormous.

      நீக்கு
  3. பொதுவானவன் பெயரில் ஒரு பக்க கருத்து.

    இன்றைய நிலையில், நாளை பொது ஜமாஅத்தில் ஒரு மையத்து ஏற்பட்டால் பொது இடத்தில் அடக்கம் செய்ய முடியாமல் போகும் கேவலம் வரும்.

    உங்கள் இருவருக்குமான பொது எதிரிக்கு அது நல் வாய்ப்பாக இருக்கும்.
    கூடுதலாக உள்ள ஆட்களை ஒன்றும் செய்ய இயலாது. ஆனால் குறைவான ஆட்களை அவர்கள் தம் பக்கம் இழுக்க நெடு நாள் ஆகாது. அடிக்க அடிக்க அம்மியும் நகரும்.

    அவர்கள் போக மாட்டார்கள் என்றே நீங்கள் நினைத்தாலும்....

    போய் விட்டால்....... அடிபட போவது பொதுவில்தான்.

    அடிபட்டும் திருந்த மனமில்லை.

    பதிலளிநீக்கு
  4. Mr. ஒற்றுமை,

    ஒற்றுமை பெயரில் privukuriya கருத்து.

    பதிலளிநீக்கு