Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

சனி, 28 மார்ச், 2015

ஊடகத்தை உயிர்ப்பிப்போம் – நெல்லை ஆதில்

இன்று சாதாரன மக்களுக்கு ஊடகம் என்பது ஒரு எட்டாக் கனியாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக விளிம்புநிலை சமூக மக்கள் ஊடகம் ஒரு மிகப்பெரிய பிம்பம் என கற்பனை செய்து வைத்துள்ளனர். ஊடகத்தில் நமது பங்களிப்பு ஏன் இல்லை என்று நம்மை நாமே மீளாய்வு செய்ய கடமைப்பட்டுள்ளோம்.ஊடகத்தில் நம்முடைய பங்களிப்பு இல்லை என கூக்குரலிடுவதை விட அதை எவ்வாறு ஈடுகட்டுவது என சிந்திப்பதுதான் சாலச்சிறந்தது.

முஸ்லிம் சமூகம் சந்திக்க்கூடிய பிரச்சனைகள்,இச்சமூகத்தின் இடற்பாடுகள்,முன்னேற்றங்கள் என அனைத்தையும் பொது தளத்தில் வெளியிட ஊடகங்கள் மறுக்கின்றன இதற்கான காரணத்தை நாம் பார்த்தால் வழக்கம்போல ஃபாசிஸவாதிகள் என்று சொல்லிவிட்டு ஒதுங்கி விடுகிறோம். ஆனால் இதற்கு நாமும் தெரிந்தோ தெரியாமலோ ஒரு காரணமாகத்தான் இருந்துவருகிறோம்.
ஆம் இன்று முஸ்லிம்கள் ஊடகத்துறையில் அதிகம் ஒடுக்கப்பட்டுவிட்டார்கள் என்ற வார்த்தையை பயன்படுத்தும் மக்களுக்கு ஒதுங்கிவிட்டதால் தான் ஒடுக்கப்பட்டோம் என்பது நினைவுக்கு அல்ல கனவுக்கு கூட வருவதில்லை.
தமிழகத்தில் இருக்கக்கூடிய முஸ்லிம் ஆளுமைகள் இன்று மக்கள் பிரச்சனைகளைப்பற்றி தனது பேச்சிலோ,எழுத்திலோ காட்டுவது இல்லை. இங்கு மக்கள் பிரச்சனை என்பது சாதி,மதம்,இனம் கடந்த மக்களின் பிரச்சனைகள், இஸ்லாம் போதிப்பதும் அதைத்தான்,மனித இனத்திற்கு தீங்கு விளைவிப்பதை எதிர்த்து போராட கடமைப்படுத்தியுள்ளது மார்க்கம்.
உலக மக்களுக்கு ஓர் அருட்கொடையாகத்தான் அண்ணல் நபி( ஸல்) அவர்கள் திகழ்ந்தார்களே தவிர முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல. ஆனால் மார்க்கத்தை கடைபிடிக்கிறோம் என்று மார்தட்டிக்கொண்ட மக்கள் இந்த விஷயத்தில் மண்ணைக்கவ்வியதால் தான் பொது சமூக நீரோட்டத்தில் நாம் கலக்காததற்கு மிக முக்கிய காரணம்.
அணு உலை பற்றியோ,மீத்தேன் திட்டம் பற்றியோ,நியூட்ரினோ பற்றியோ முஸ்லிம் சமுதாய மக்களுக்கு மட்டுமல்ல அவர்களின் ஆளுமைகளுக்கும் குறிப்பாக உலமாக்களுக்கும் அதனைப்பற்றிய விழிப்புணர்வு குறைவாகவே இன்றளவிலும் இருந்து வருகிறது. இதைப்போன்று ஒட்டுமொத்த மக்களுக்கும் பாதிப்பு ஏற்படுகின்ற பிரச்சனைகளை கையில் எடுத்தால் தான் பொது நீரோட்டத்தில் நமக்கு ஒரு சிறு இடமாவது அளிக்கப்படும்.
அடுத்தபடியாக விவாத அரங்குகளில் சமூக ஆர்வலர்,பொருளாதார வள்ளுநர்,கல்வியியலாளர் என்ற இடத்தில் இது வரை ஊடக வரலாற்றில் முஸ்லிம்கள் பங்காற்றியது இல்லை. சமூகம் குறித்த,பொருளாதாரம் குறித்த தொலைதூரப்பார்வை முஸ்லிம்களிடத்தில் இல்லை. அதனால் தான் அந்த இடமும் காவிகளை நோக்கி செல்கிறது.
விவாதங்களை நடத்தும் அர்னாப் கௌசாமி போன்றவர்களை பார்த்து இச்சமூகம் மலைத்து நிற்கிதே தவிர தங்களிடமிருந்து ஒரு அர்னாபையோ அல்லது பாண்டேவையோ உருவாக்கவேண்டும் அல்லது நாம் உருவாக வேண்டும் என்ற எண்ணம் நம்மிடம் இல்லை.நம் எண்ணத்தைக்கொண்டுத்தான் நம் செயல்கள் நம்மிடம் எண்ணமே இல்லையென்றால் செயல் எவ்வாறு இருக்கும்.
இதற்கான தீர்வை நாம் எவ்வாறு பெறுவது என்ற கேள்வி பலருடைய உள்ளத்திலும் விம்மி எழுகிறது.அதற்கான விடையாக தனித்தொலைக்காட்சி என்பது மிகவும் வேடிக்கையானது ஏற்கனவே பொது நீரோட்டத்தில் கலக்காமல் பிரிந்து ஓரங்கட்டப்பட்ட சமுதாயத்தை மீண்டும் பிரித்து ஓரங்கட்டக்கூடிய வழிமுறைத்தான் இது. அதற்கான அவசியம் இருக்கின்றது என்றாலும் நேரம் இதுவல்ல என்பது பல ஊடகவியலாளர்களின் கருத்து.
பின்னர் நாம் என்ன செய்ய வேண்டும் என்ற வினா நம்முள் எழுகிறது. முதலில் வாசிக்க வேண்டும் இன்று வாசிப்பு என்பது மாத்திரைகளைப்போல கசப்பாக இருக்கிறது. அது கசப்பாக இருந்தாலும் இந்த நோய்க்கு குணமளிப்பது வாசிப்பு. நாளுக்கு நாள் நடைபெறக்கூடிய அன்றாட நிகழ்வுகளை நம் விரல் நுணியில் வைத்திருக்க வேண்டும். கேள்விக்கு பதிலளிக்கவும்,கேள்விகளை தொடுக்கவும் நம்மைத்தயார் படுத்தி கொள்ள வேண்டும். இதையெல்லாம் பரிவாரங்கள் செய்ததால்தான் அவர்கள் இன்று சமூக ஆர்வரலாக,கல்வியாளராக அந்த இருக்கையில் அமர்த்தப்படுகிறார்கள்.
இன்னும் முஸ்லிம் ஆளுமைகள் தங்கள் சிந்தனைகளை குறுகிய வட்டத்தினுள் சுருக்காமல் பரந்து விரிக்க வேண்டும் அதில் தான் இச்சமூகத்தின் பிரதிநிதித்துவம் மறைந்திருக்கிறது.வாசிப்போம் வளம்பெறுவோம்.
- நெல்லை ஆதில்

3 கருத்துகள்:

  1. சகோதரர் நெல்லை ஆதிலின் ஆதங்கம் வரவேற்கத்தக்கது.

    அதே சமயம் நாம் இன்னொரு பார்வையும் கவனம் செலுத்த வேண்டும்.

    இஸ்லாத்தின் எதிரிகள் முஸ்லிம்களை அவர்களின் உண்மை இலட்சியத்திலிருந்து திருப்பி அவர்கள் வகுத்திற்கும் திட்டத்தின் பின்னால் ஓடக்கூடியவராக மாற்றுகின்றனர்.

    சிறுது காலம் முன்பு, ”நாம் கல்வியில் பின் தங்கி உள்ளோம். ஆகவே முஸ்லிம் குழந்தகளை சிறந்த கல்விமான்களாக உருவாக்க வேண்டும்” என்ற கோஷம் தூக்கி நிறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து இன்றுவரை அதன்பின்னால் நம்முடைய தாய்மார்களும், குழந்தைகளும் மூச்சிறைக்க ஓடிக்கொண்டிருக்குன்றனர். பாவம்.

    இப்போது மீடியா, மீடியா என்கின்றனர். இப்போது ஓட தயாராகி இருக்கின்றோம்.

    என்னுடைய ஆதங்கம்: நாமாக ஓட வேண்டும், பிறர் காட்டும் திசையில் ஓடக்கூடாது.



    பதிலளிநீக்கு
  2. முஸ்லிம் சமூகம் சிந்திக்குமா, நிச்சயம் சிந்திக்கும் இன்ஷா அல்லாஹ்.

    பதிலளிநீக்கு
  3. முஸ்லிம் சமூகம் சிந்திக்குமா, நிச்சயம் சிந்திக்கும் இன்ஷா அல்லாஹ்.

    பதிலளிநீக்கு