Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 2 மார்ச், 2015

யாரை யெமாத்த இந்த பேச்சுகள் ! இது எல்லோருக்கும் தான்

யாரை யெமாத்த இந்த பேச்சுகள் ! இது எல்லோருக்கும் தான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தையும் சகோதரர் பீஜே யையும் வசைபாடுவதன் மூலம் நமதூர் மக்களின் குறிப்பாக உண்மையான சுன்னத்துவல் ஜமாத் காரர்களின் மனங்களை கவர்ந்துவிடலாம் என
மனப்பால் குடிக்கிறார் மதிப்பிற்குறிய இமாம் சைபுதீன் ரஸாதி ஹஸ்ரத் அவர்கள். ஆம் கடந்த வெள்ளி கிழமை கிழக்கு சுன்னத்துவல் ஜமாத் பள்ளி வாசலில் நடைபெற்ற ஷரீத் விளக்க பொதுக்கூட்டத்தில் ஹஜ்ரத் அவர்களின் பேச்சு நாம் மேலே குறிப்பிட்ட வரிகளை தான் தனது முழு பேச்சிலும் காணமுடிந்தது.


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மீதும் சகோதரர் பீஜே மீதும் அவர்களுடைய ஜமாத்தின்மீதும் அப்படியொன்றும் நமதூர் சுன்னத்துவல் ஜமாத் மக்கள் அந்த அளவுக்கு பாசம் கொண்டுள்ளார்களா ? என்றால்  அப்படியொன்றும் நமதூர் மக்களை வசப்படுத்தக்கூடிய அளவுக்கு நமதூரிலே தவ்ஹீத் ஜமாத்தின் செல்வாக்கு தற்போது இல்லை என்பதை சொல்வதற்கு ஆராய்சி அறிவு தேவை இல்லை. ( ஏனெனில் அவர்களே இரண்டாக பிரிந்து தற்போது அவர் அவர்களின் வேலையை செய்து வருகின்றனர். )

யதார்த்தம் இப்படி இருக்கையில் ஹஸ்ரத் சைபுதீன் ரஷாதீ அவர்கள் எதன் அடிப்படையில் இதுபோன்ற பழங்கதை கூறுவதும் பசப்புமொழி பகர்வதுமான வேலைகளில் இறங்குகிறார் என்பது நடுநிலையான சுன்னத்துவல் ஜமாத் காரர்களுக்கு புதிராத புதிராக உள்ளது.


ஹஜ்ரத் அவர்களின் பயானில் கூறிய குற்றச்சாட்டு
1.    30 தஜ்ஜால்களில் இவர் ஒரு தஜ்ஜால் இதை அல்லாஹ் இவர் பெயரை மட்டும் குறிப்பட வில்லை.

2.    இரட்டை பேச்சு கொண்ட பிஜே ( 1.கண் திருஸ்டி இருக்கு – பலமான ஹதீன் இது முன்பு – 2. கண் திருஸ்டி இல்லை – ஆராச்சிக்கு பிறகு )

3.    பீஜே பத்துவா - செய்வினை கண் திருஸ்டி இருக்கிறது என்றால் அவன் முஸ்ரிக் இது இவர்களுக்கும் பொருந்தும் ( மக்கா இமாம் , ஹதீஸ் இமாம்கள் )

4.    சகாபாக்களும் , ஸல் (அலை) (நவூதுபில்லாஹி) அவர்களும் நுனுக்கமான இணை வைப்பு செய்தார்கள் என்றார் பீஜே.  

மேலே கூறிய இந்த வர்த்தைகள் சகோதரர் பீஜே பற்றி சைபுதீன் ரஷ்சாதி கூறிய குற்றச்சாட்டுக்கள். இன்னும் இது போன்ற பல குற்றச்சாட்டுகளை கூறினார். இனி என்ன நடக்கும் இவர்கள் அதாவது தவ்ஹீத் ஜமாத் ஒரு மீட்டிங் போடுவார்கள். அதில் அவர்களுக்கு செல்லவே தேவையில்லை. ஏனெனில் அவர்களுடைய பேச்சு எப்படி இருக்கும் என்று யாவரும் அரிவர்.

அல்லாஹ் கூறுகிறான்.

உண்மையான நம்பிக்கையாளர்கள் யாரென்ரால், அல்லாஹ்வை (அவர்கள் முன் ) நினைவு கூறப்பட்டால் அவர்களுடைய உள்ளங்கள் பயந்து நடுங்கிவிடும். அல்லாஹ்வுடைய வசனங்கள் அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால் அவர்களுடைய நம்பிக்கை (மென்மேலும்) அதிகரிக்கும். அவர்கள் தங்கள் இறைவனையே முற்றிலும் நம்பியிருப்பார்கள். ( அல்குர்ஆன் 8:2 )

ஏனெனில் இதற்கு முன் நமதூருக்கு வந்து பேசிய இவரின் கடந்த கால பயான்கள் நமதூர் மக்களிடம் செல்ல பேனால் எங்களிடமும் நல்ல வரவேற்பு இருந்தது என்று சென்னால் அது மிகையில்லை. ஆனால் தற்போது ஹஜ்ரத் அவர்களின் பயான் ஒரு குறிப்பிட்ட சரார்களை மட்டுமே சார்ந்து இருந்தது. இது போன்ற பேச்சுக்கள் நமதூரில் உள்ள ஜமாத்துகளில் உள்ள பிளவுகள் (விரிசல்களை) இன்னும் அதிகரிக்கதான் செய்யுமே தவிர ஒரு போதும் இணக்கம் வராது.


மேகங்கள் சூல் கொண்டு ஒரு திசையில் ஒதுங்குகின்றன. இதனால், அடுத்த 15 நிமிடத்துக்குள் மழை பொழியும் என நாம் நினைக்கிறோம். அந்த மழையும் பெருமழையாய் அமையும் எனக் கருதுகிறோம். ஆனால் , நடப்பவை வேறாக இருக்கின்றன. பெருங்காற்று வீசுகின்றது. எந்தத் திசையிலிருந்து என்பது நமக்குத் தெரிய வில்லை. அத்தனை மேகத்தையும் அழைத்துச் சென்றுவிடுகின்றது. அந்த மழைக்கு என்ன தேவைப்பட்டது ? ஒரு குறிப்பிட்ட சீதோஷ்ண நிலை. ஒரு குறிப்பிட்ட அளவு உஷ்ணம். இவை இந்த மேகங்களோடு இருந்திட வேண்டும். அப்போதுதான் அந்த மேகக்கூட்டம் மழையைப் பொழியும்.

இது போல தான் இன்று நமதூரின் நிலை. நாம் எல்லோரும் சிந்திக்க வேண்டிய தருணம் இது. 

நமது நிருபர்

1 கருத்து:

  1. PJ said things you mentioned are very danger ,to be definitely opposed and remove this kind of throughts from muslims
    Hajrath well said , well done good job , zazikaillah khair

    பதிலளிநீக்கு