Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 25 மார்ச், 2015

துபாய் – திருச்சி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நேரத்தில் மாற்றம்.!


துபாய் – திருச்சி இடையே பகலில் இயக்கப்பட்டு வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மார்ச்29 முதல் இரவு நேர விமானமாக மாற்றம் செய்யப்படுகிறது.

தினசரி சேவையாக துபாய் – திருச்சி இடையே இயக்கப்பட்டு வரும் இந்த IX612  விமானம் தற்பொழுது காலை 07:15 மணிக்கு துபாயிலிருந்து புறப்பட்டு மதியம் 12:55 திருச்சி சென்றடைகிறது. 

பிறகு திருச்சியிலிருந்து IX-611 விமானம் 14:15க்கு புறப்பட்டு மாலை 17:05 க்கு துபாய் வந்து கொண்டிருக்கிறது.

கோடைகாலத்தையொட்டி பயணிகள் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் துபாய் – திருச்சி விமான நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. 

வரும் மார்ச் 29ம் தேதி முதல் மாலை 18:25 மணிக்கு துபாயிலிருந்து புறப்பட்டு நள்ளிரவு 00:05 மணிக்கு திருச்சி சென்றடையும் 

பின்னர் நள்ளிரவு 00:55 மணிக்கு திருச்சியிலிருந்து புறப்பட்டு அதிகாலை 03:45 மணிக்கு துபாய் வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக