Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

சனி, 28 மார்ச், 2015

ஐ சி எஸ் விளையாட்டுப் போட்டி : சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது கர்நாடகா கிங்ஸ் அணி!


அமீரகத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக பல்வேறு நலப்பணிகளை மேற்கொண்டு வரும், இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டி சார்பாக, கடந்த மார்ச்
20 ம் தேதி, ஷார்ஜா பல்கலைக்கழக மைதானத்தில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் அபுதாபி ரைடர்ஸ், துபாய் வாரியர்ஸ், ஷார்ஜா ப்ளாஸ்டர்ஸ், வடமாநிலங்கள் ஒருங்கினைந்த சேலஞ்சர்ஸ் அணி, கர்நாடகா கிங்ஸ் மற்றும் தமிழ்நாடு ஸ்மாஷர்ஸ் ஆகிய ஆறு அணிகள் பங்கேற்று விளையாடினர்.










ஒவ்வொறு அணிகளும் பிரத்யேக உடையில் மைதானத்தில் அணிவகுத்து நிற்க இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டியின் தேசிய பொதுச்செயலாளர் முஹம்மது முனவ்வர் அவர்களும் இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டியின் கேரள மாநில தலைவர் ஷாதுல்லாஹ் அவர்களும் விழாவை துவக்கி வைத்தனர்.
கால்பந்து, கைப்பந்து, கபடி, தடகள போட்டிகள் மற்றும் பெண்கள், குழந்தைகளுக்கான போட்டிகள் உட்பட பல்வேறு வகையான போட்டிகள் காலை 8.30 மணி முதல் 6 மணி வரை நடைபெற்றன.
ஒவ்வொரு அணியும் சிறப்பானதொரு ஆட்டத்தை வெளிப்படுத்தி வெவ்வேறு போட்டிகளில் கோப்பையை வென்றன. இறுதியாக அதிக புள்ளிகளின் அடிப்படையில் கர்நாடகா கிங்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது . பல போட்டிகளிலும் சவாலான ஆட்டத்தை வெளிப்படுத்தி, கைப்பந்து போட்டியில் ரன்னர் அப் இடத்தை பிடித்தது தமிழ்நாடு ஸ்மாஷர்ஸ் அணி.
கால்பந்தில் கேரளத்தின் ஷார்ஜா பிலாஸ்டர்ஸ் அணியும், கைப்பந்தில் கர்நாடக கிங்ஸ் அனியும், கபாடியில் அபுதாபி ரைடர்ஸ் அனியும், கையிறு இழுக்கும் போட்டியில் துபை வாரியர்ஸ் அணியும் வெற்றிவாகை சூடியது.
வெற்றிபெற்ற அனைத்து அணிகளுக்கும், நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்கள் விருதுகளையும், பதக்கங்களையும் வழங்கினர். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ஷார்ஜா பல்கலைக்கழக துணை வேந்தர் மாஜித் அல் ஜர்வான் கர்நாடக கிங்ஸ் அணியினருக்கு சாம்பியன் கோப்பையை வழங்கினார்.
பென்களுக்கு, சிறுவர், சிறுமியருக்கும் தனியாக விளையாட்டு போட்டிகள் நடத்தபட்டு பரிசுகள் தரப்பட்டன.
பல்வேறு மொழிகளை பேசும் இந்தியர்களை, அமீரகத்தில் ஒருங்கிணைத்து, ஐ சி எஸ் ஏற்பாடு செய்திருந்த விளையாட்டுப் போட்டிகள், மனதிற்கு புத்துணர்வை ஏற்படுத்திய விளையாட்டுத் திருவிழாவாக அமைந்திருந்தது.















மின்னஞ்சல் மூலமாக
பாப்புலர் ஃப்ரண்ட் LBK



1 கருத்து: