Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வெள்ளி, 27 மார்ச், 2015

வேண்டும் பல கவிகோகள் - ஆரூர்.யூசுப்தீன்

இன்று உலகளாவிய முஸ்லிம்கள் கலச்சாரம், அறிவியல், கலை போன்ற பலவற்றில் முன்னேறி விளங்குகின்றனர். ஆனால் முக்கியமானவற்றில் கைசேதம் தான் நமக்கு. மார்க்கத்தை பற்றி எழுதவும் இயங்கவும் பலர் உள்ளனர் அவர்களிடம் எல்லா அறிவியல் முன்னேற்றமும் ஏற்பட்டு இருக்கிறது. ஆனால் அவர்களிடம் உள்ள மிகபெரிய குறைபாடு என்னவென்றால் பொதுதளங்களில் அவர்களின் பங்கு சற்று குறை. இதே குறை தான் தமிழகத்திலும் நிழவி வருகிறது. இன்று இஸ்லாமிய கொள்கை கோட்பாடு , சட்டங்கள், குரான் விரிவுரை மற்றும் விளக்கவுரை எழுத பல மார்க்க அறிஞர்கள் உள்ளனர் இவர்களிடம் பொதுதலைப்பில் எழுத சொன்னால் பலரின் பதில் அது தேவையில்லாத விடயம் என்று பதிலளிப்பர். இன்று மற்றசமூகத்தினரிடம் அவர்களின் மதத்திற்காவும், சாதிக்காவும் , மொழிக்காவும் வாதிடவும், விளக்கவும் போதிய அளவுக்கு ஆட்கள் உள்ளனர் ஆனால் நம்மிடம் இல்லை என்று நான் கூறவரவில்லை அந்த எண்ணிக்கை சற்று குறைவு என்று தான் கூறுகிறேன்.
தன்னை பொது தளங்களில் அர்பணித்து செயல்படும் நபர்கள் விரல்விட்டு எண்ணிவிடலாம். அப்படி எழுதுபவர்கள் பலர் சமூக இயக்கத்தில் இருந்து எழுதி வருகின்றனர். ஒரு சிலர் மட்டுமே இயக்கம் சாரா எழுத்தாளர்கள். இன்று உலகை பற்றியும் அப்பபோழுது நடக்கும் நிகழ்வுகளை பற்றி விமர்ச்சிக்கவும் கருத்து சொல்லவும் ஓர் பத்திரிக்கையாளரோ எழுத்தாளரோ விமர்சகரோ தேவை. ஆனால் இன்று சமூக வலைத்தளங்களில் பல எழுத்தாளர்கள் உள்ளனர் அவர்கள் வெறுமனே சமூக வலைத்தளங்களில் மட்டும் எழுதிவிட்டு நின்றுவிடுகின்றனர். அடுத்தகட்ட முயற்சிக்கு செல்லுவதில்லை. இன்று நாட்டில் நடக்கும் பல விடயங்களுக்கு விமர்சினமும் விழிப்புணர்வுகளை மக்களுக்கு எடுத்து சொல்லவேண்டும் அந்த கடமை நம்மிடம் தான் இருக்கிறது. சில அரசியல் விமர்சகர் என்றும் சமூக ஆர்வலர் என்றும் மக்களிடையே ஃபாசிஸ கருத்துக்கு ஒத்தூதும் நபர்களின் போழிமுகத்தை கிழிக்கும் பணியும் நமக்கு உண்டு என்று விளங்கி எழுத வேண்டும்.
தற்பொழுது நம்மிடம் உள்ள பொதுதளங்களில் எழுதிகொண்டிருக்கும் எழுத்தாளர்களான மனுஷ்யபுத்திரன், கவிகோ அப்துல் ரகுமான் , ஆளுர்.ஷாநவாஸ், ப.ரகுமான், ரஃபீக் அஹமது, ரியாஸ், செய்யது அலி, தாழை மதியவன் ,குலாம் முஹம்மது, ஹாஜா கனி, முஹம்மது தாஹா மற்றும் முஹம்மது இஸ்மாயில் போன்ற நபர்கள் உண்டு. ஆனால் இவர்களுக்கு உள்ள பணி சுமையை குறைக்கவும் அடுத்த தலைமுறை எழுத்தாளர்களை உருவாக்க வேண்டும் அது முக்கியம். இப்பொழுது உள்ள சூழ்நிலையை பார்க்கும் பொழுது ஓர் வாசகம் என் மனதில் தோன்றுகிறது. சமூக மேன்மைக்காவும் விழிப்புணர்வுக்காகவும் எழுதுவது என்பது என்னுடைய எழுத்தின் கோட்ப்பாடு அது நேற்று என்னிடமும் இருந்தது இன்று என்னிடம் இருக்கிறது நாளை அது என்னிடம் மட்டும் தான் இருக்கும்.

இந்த நிலையை மாற்ற வேண்டும் எழுதும் திறனுடைய பலர் உள்ளனர் ஆனால் அவர்களுக்கு உள்ள பிரச்சனை அதை எப்படி எழுதுவது என்று தான். ஓர் கட்டுரை எழுதுகிறோம் என்றால் அது எப்படி எழுதுவது என்று முதலில் தெரிதல் நன்று. பொதுவாக கட்டுரை என்றால் அது அதிகமான வார்த்தை அமைப்பை கொண்டும் இருக்க வேண்டும் என்பதனால் சொல்லவேண்டிய கருத்தை இழுத்து எழுத்துவர் இது ஒருசில நேரத்தில் படிப்பவர்க்கு சலிப்பை ஏற்படுத்தும் சிலசமயம் சொல்ல வேண்டிய கருத்தை விட்டு வேறு தலைப்பிற்கு ஈட்டுசெல்லும். ஒரு தலைப்பின் கீழ் கட்டுரை எழுதுவதற்கு முன் அந்த தலைப்புக்கு தேவையான தகவல்கள் முதலில் திரட்டவேண்டும் அப்படி திரட்டப்பட்ட தகவல்கள் அனைத்தின் உண்மை நிலையை கண்டறிய வேண்டும். சிறந்த வார்த்தைகளை சிறந்த இடத்தில் பயன்ப்படுத்த வேண்டும்.முழுவதும் எழுதி முடித்தபின் பல முறை படிக்கவேண்டும் காரணம் எழுத்துப்பிழை அல்லது வார்த்தை கோர்வை இல்லாமல் இருக்கிறதா என்று கண்டுபிடிக்க வேண்டி. கட்டுரை சார்ந்த சிந்தனைத் தடத்திலிருந்து பிறழ்வதற்குள்ளேயே கட்டுரையை முடித்துவிடுவது நல்லது
இன்றைய வாழ்க்கை நெருக்கடியில் படிப்பதற்கான வாய்ப்பு கிடைப்பது அபூர்வமாக இருக்கிறது. அதையும் மீறி படிக்க விரும்பும் நல்ல படிப்பவர்களுக்கு குறுகிய காலத்தில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு விடயங்களை சுவைபடத் தருவதுதான் பொறுப்புள்ள கட்டுரையாளனின் வேலை. ஒரு கட்டுரையைப் படித்து முடிப்பதற்குள்ளேயே அவர்களுக்கு சோர்வு ஏற்பட வைக்ககூடாது.
வெகுஜன இதழ்களில் கட்டுரை என்ற பெயரில் என்னவெல்லாமோ செய்கிறார்கள் சில எழுத்தாளர்கள். இவர்களால்தான் தங்கள் வாழ்க்கையை கடுமையாகப் பாதிக்கும் என்று தெரிந்து பல உண்மைகளை எழுதும் எழுத்தாளரின் கட்டுரைகளைக்கூட படிப்பவர்கள் ஒதுக்கும் சோகம் நேரிடுகிறது.
படைப்பாளிகளை உற்பத்தியாளர்களாகவும் வாசகர்களை நுகர்வோர்களாகவும் மாற்றிவிடும் அபாயம் நிறைந்த உலகமயமாக்கல் காலகட்டம் இது. இந்த நெருக்கடியிலிருந்து மீளாவிட்டால் தமிழ்ச் சிந்தனை உலகம் வேகமாகச் சந்தைமயமாக்கப்பட்டுவிடும். பிறகு தமிழ் வாசகர்களின் மூளைக்குள் என்ன செலுத்தப்பட வேண்டும் என்பதைச் சந்தை நிர்ணயிக்கும்.
இன்றைய வாசகர்கள் தான் படிக்கும் கட்டுரை எதுவும் தன்னைத் படிக்க கடினப் படுத்தகூடாது என்றும் எளிமையான வார்த்தைகளை கொண்டு அமைய வேண்டும் என்று நினைக்கிறனர். ஐஸ் க்ரீம் சாப்பிடுவது போல, படிப்பது சுகமாக இருக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறனர். சீரியஸான விஷயங்களைப் படித்து மேலும் ஏன் டென்ஷனைச் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ற மனப்பான்மை பரவலாக இருக்கிறது. இவர்களின் நெளிவு-சுளிவு தெரிந்து கனமான விஷயங்கள் பாலும் அவர்களை ஈர்க்கும் வகையில் எழுதுவதே இன்றைய கட்டுரையாளனுக்குரிய சவால்.
கட்டுரை எழுதும் பொழுது படிப்பவர்களின் மனநிலையை உணர்ந்து எழுத வேண்டும் படிப்பவர்களுக்கு நாம் சொல்லும் கருத்து மனதில் சென்று பிரதிபளிக்கவேண்டும்
இன்று எத்தனை கட்டுரையாளர்கள் அந்த சவாலை வெற்றிகரமாக எதிர்கொள்கிறார்கள் என்பது வாசகர்களின் தீர்ப்புக்குரியது. அத்தகைய சவாலை வெற்றிகரமாக எதிர்கொள்ளக்கூடிய ஆளுமை நிறைந்த கட்டுரையாளர்கள் தான் வெற்றியடைகின்றனர். அப்படிப்பட்ட எழுத்தாளன் தான் நமக்கு தேவை. நீங்கள் முழுநேர எழுத்தாளராக இல்லாவிட்டாலும் பகுதி நேர எழுத்தாளராக இருந்தால் அதுவும் நல்லது. எழுத்தாளருக்கு எழுதும் எழுத்து இந்த சமூகத்திற்கு பயனாக அமையட்டும் மாறாக சமூகத்திற்கு பிளவாக இல்லாமல் இனியாவது உருவாகுவோம் எழுத்தாளனாக……

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக