Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 2 மார்ச், 2015

இந்திய வரலாற்று ஆய்வு கழகத்தின் உறுப்பினர்களாக ஆர்.எஸ்.எஸ்ஸைச் சார்ந்தவர்கள் நியமனம்!

இந்திய வரலாற்று ஆய்வு கழகத்தின் உறுப்பினர்களாக ஆர்.எஸ்.எஸ்ஸைச் சார்ந்தவர்கள் நியமனம்!
இந்திய வரலாற்று ஆய்வு கழகம்(ICHR) கடந்த வாரம் முற்றிலுமாக மறுசீரமைக்கப்பட்டது.இதில் ஆர்.எஸ்.எஸ்ஸின் பின்புலம் கொண்ட அகில் பாரதீய இதிஹாஸ் சங்காலன் யோஜனா(ABISY) வின் நிர்வாகிகள் உள்பட 18 பேர் புதிய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அகில் பாரதீய இதிஹாஸ் சங்காலன் யோஜனாவின் நிர்வாகிகளான நாராயண ராவ்(பெர்ஹாம்பூர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர்), ஈஸ்வர் சரண் விஸ்வகர்மா(கோரக்பூர் பல்கலைக்கழத்தின் புராதன வரலாறு, அகழ்வாய்வு மற்றும் கலாச்சாரத்துறை பேராசிரியர்), கங்முமே காமே(மணிப்பூர் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் மற்றும் கடந்த மக்களவை தேர்தலில் மணிப்பூர் தொகுதியில் பா.ஜ.கவின் வேட்பாளர்) ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் மீனாட்சி ஜெயின், சரதிந்து முகர்ஜி(அகடாமியில் இடதுசாரிகளின் செல்வாக்கை எதிர்ப்பவர்), ஆகியோரும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி ICHR கவுன்சில் மறு சீரமைப்பு தொடர்பாக வெளியிடப்பட்ட அரசு இதழ் அறிக்கையில், இரண்டு மாதங்களுக்கு பிறகு 3 ஆண்டுகளை பூர்த்திச் செய்யும் உறுப்பினர்களின் பதவி, காலாவதியாகிவிட்டதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.
மறு சீரமைக்கப்பட்ட கவுன்சிலில், ஒரு கால அளவை பூர்த்திச் செய்தால் மீண்டும் உறுப்பினராக நியமிக்கலாம் என்ற நீண்டகாலமாக வழக்கத்தில் இருந்த நடைமுறையை மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் நிறுத்திவைத்துள்ளது.
ICHR கழக விதிப்படி ஒருவர் இரண்டு முறை தொடர்ந்து கவுன்சில் உறுப்பினராக இருக்கமுடியும்.கவுன்சிலின் நியமன சுழற்சியில் பதவி காலம் முடிந்து வெளிச்செல்லும் உறுப்பினர்களில் சராசரியாக 8 பேரை மீண்டும் கவுன்சில் உறுப்பினராக நியமிப்பது வழக்கம்.இதுத்தொடர்பாக வரலாற்றுத்துறையைச் சார்ந்த மூத்த பேராசிரியர் கூறுகையில்,’மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம், மார்க்சிச வரலாற்றாசிரியர்களிலிருந்து ICHR ஐ சுத்திகரிக்க விரும்புவது தெளிவாக தெரிகிறது’ என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக