Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 15 மார்ச், 2015

மச்சான் பார்ட்டி – பாட்டில்கள் இல்லாத பார்ட்டி வேண்டும்

“மச்சான் பார்ட்டி” இன்று உள்ள மாணவர்களிடத்திலும், இளைஞர்களிடத்திலும் அதிகமாக உபயோகப்படுத்தப்படும் வார்த்தையாக இருந்து வருகிறது. பார்ட்டி சதாரணமாக இருந்தால் பரவாயில்லை. ஆனால் இன்றைய நவநாகரீக பார்ட்டிகளில் பாட்டில்கள் இல்லாத பார்ட்டிகளே இல்லை. பார்ட்டி என்ற வார்த்தையே இன்று மதுவிற்கான வார்த்தையாக மாறி கொண்டு வருகிறது.
இது இளைஞர்கள் மத்தியில்
விளையாட்டாக ஆரமித்து இறுதியில் அவர்களின் வாழ்க்கைக்கு ஏன் ஒட்டு மொத்த சமூகத்திற்கும் வினையாக மாறிவிடுகிறது. நவீன கால பெண்கலும் இதற்கு  விதிவிலக்கல்ல என்பதை நாம் கண்கூடாக காண முடிகிறது. பள்ளிப்பருவம் தொடங்கி கல்லூரி, அலுவலகம் மற்றும் எல்லா பொது இடங்களிலும் மது குடிப்பது என்பது மலிந்த ஒரு குற்றமாக மாறிவருகிறது.
கல்வியை இலவசமாக வழங்கக்கூடிய அரசாங்கங்களும் மூலை முடுக்குகளெல்லாம் மதுக்கடைகளை திறந்து வைத்து வாழ்க்கையை துழைபதற்கு வாய்ப்பளிக்கிறது. மது அருந்துபவர்களில் பெரும்பாலானோர்கள் காரணத்தை கூறி குடிப்பது வழக்கம். தேர்வில் வெற்றி அடைந்தால் சந்தோசத்தை கொண்டாட குடிப்பது, தோல்வியுற்றால் துக்கத்தை அனுசரிக்க குடிப்பது என இவர்கள் கூறும் காரணங்கள் ஏராளம்.
மது தான் அனைத்து தீமைகளுக்கும் தாயாகும். மது அருந்துவது பெரும்பாலான மாணவர்கள் மத்தியில் பெருமையாக மாறி வருகிறது. மது அருந்துபவன் இச்சமூகத்தில் இருந்து புறந்தள்ளப்பட்ட காலம் மாறி இப்பொழுது மது அருந்துவது சர்வசாதாரனமாக மாறிவிட்டது.
மாணவர்கள் எங்கே இந்த தேசத்தை பற்றி சிந்தித்து விடுவார்களோ? என்று அவர்களையும் மதுவிற்கு அடிமைப்படுத்துவது போல் வீதிகள் எங்கும் மது கடைகளை திறந்து வைத்திருக்கிறார்கள். இதற்கு அரசாங்கங்களும், அரசியல்வாதிகளுமே பொறுப்பேற்க வேண்டும்.
இந்த தேசத்தின் மைல்கற்கலாக இருக்கக்கூடிய மாணவர்கள் மதுக்கடைகளை நோக்கி  அலைபாயும் அவலம் இந்தியாவில் இருக்கிறது. இன்பச்சுற்றுலா என்று குடும்பத்துடன் சென்றால் கூட மது இல்லாத சுற்றுலாக்கள் குறைந்து விட்டது. குறிப்பாக இந்த கார்ப்பரேட் கலாச்சாரம் வந்த பிறகு தான் மன அழுத்தத்திற்கு தீர்வு மது என்ற மனநிலைமை இளைஞர்களிடத்தில் வந்தது. இதற்கு ஒத்தூதும் விதத்தில் தான் சினிமாக்களிலும் காட்டப்படுகிறது. தண்ணி அடிப்பதை தண்ணீர் குடிப்பது போல திரையில் காட்டும் பொழுது அதை பார்க்கும் சிறுவர்கள் ஒரு குற்றமாக கருதவில்லை. அது தான் மனித இயல்பும் கூட.
சென்னை போன்ற பெருநகரங்களில் கேலிக்கை விடுதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்திக்கொண்டே இருக்கிறது. பப்பிலும்,கிளப்பிலும் பெண்களின் எண்ணிக்கை ஆண்களுக்கு சரிசமமாக இருப்பதை பார்க்க முடிகிறது. மாறிவரும் காலச்சூழ்நிலையில்,முன்னேறிவரும் வாழ்க்கைமுறைகளில் சமூகத்தின் முன்னேற்றம் தீமைகளை நோக்கி அதிக அளவில் சென்று கொண்டிருக்கிறது. இது விவாதத்திற்கு உள்ளாக்கப்பட வேண்டிய ஒன்று. மதுவிற்கு எதிரான போராட்டங்கள் அதிகரிக்க அதிகரிக்க மதுக்கடைகளும் அதிகரிக்கத்தான் செய்கிறது. இந்த மது மோகத்தை ஒழிப்பதற்கு பெற்றோர்களின் பங்கு என்பது மிக முக்கியமான ஒன்று.
கூடா நட்பு கேடாய் முடியும் என்ற பழ மொழிக்கு ஒப்ப நண்பர்களை சரியாக தேர்ந்தெடுப்பதும், எந்நிலையிலும் வழிதவறாமலும் சமூக பொறுப்பை உணர்ந்து தீமைகளை களைந்து வாழ்ந்தால் தனிமனித வெற்றியும் ,சமூக வெற்றியும் அடைவது எளிது. எனவே மதுவின் மாண்புகளை(!) எடுத்துரைத்து மதுவில்லா தேசத்தை கட்டமைப்போம்.
நன்றி தூது ஆன்லைன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக