Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 4 மார்ச், 2015

மால்கம் X – மக்களை அரசியல்படுத்தும் விடுதலைப் போராட்டம்


அரை நூற்றாண்டுகள்ஆகிவிட்டன, எனினும் எப்பொழுதும் போலவே எந்த சலனமும் படிப்பினைகளும் இன்றி இந்த பிப்ரவரி மாதமும்  கடந்துபோனது.

சிலர்மட்டும் நியாபகத்திற்காக அவருடைய உயிர்தியாகத்தை நினைவுபடுத்திக் கொண்டார்கள்.1965-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சஹீத் மால்கம் X என்ற மாலிக் அல் ஷபாஸ் துப்பாக்கியால் சுடப்பட்டுபட்டு கொலைசெய்யப்பட்டார். அன்றோடு ஒரு புதிய இஸ்லாமிய சமூக மேம்பாட்டு அரசியலுக்கான வழிமுறையும் அதனை புனர்நிர்மாணம் செய்த மால்கமும் மறைந்து போனார்கள்.  சமூக மாற்றத்திற்கு வித்திட்ட அவருடைய வாழ்வும், அரசியல் பணியும் தரும் படிப்பினைகளை முஸ்லிம் சமூகம் உள்வாங்கிக் கொள்ளத் தவறிவிட்டது. மறதியும், மாறாத அணுகுமுறையும் முஸ்லிம் சமூகம் அதிகாரவர்க்கத்தாலும், ஆட்சியாளர்களாலும், ஆரிய சங்கபரிவார கூட்டங்களாலும் பொதுசமூகத்தில் இன்று அந்நியபடுவதற்கு தாங்களாகவே வழிவகுத்து கொண்ட காரணிகளாக இருக்கலாம்.
ஒரு ஜனநாயக குடியரசில் சிறுபான்மை சமூகமாக முஸ்லிம்கள் தங்களது உரிமைகள் மறுக்கப்பட்டு நசுக்கப்படும்போது எவ்வாறான அரசியல் செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதற்கு அவர் ஒரு முன்மாதிரியாகத் திகழ்ந்தார். வேறுபாடுகள் எந்த ரீதியிலாக இருந்தபோதிலும் இனம், மதம், நிறம், சாதி, பொருளாதாரம் போன்றவற்றை முன்வைத்து ஏதோ ஒரு புள்ளியில் ஒரு குறிப்பிட்ட சாரார் நசுக்கப்பட்டால் அதனை எதிர்த்து அரசியல் செய்யவேண்டியதன் அவசியமும், கடமையும் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது என்பதை அவருடைய வாழ்க்கை வரலாறு பாடமாக கற்றுத்தருகிறது.
இன்று வரலாறுகளிலும் இளைஞர்களிடத்திலும் புகட்டப்படும் புரட்சியாளர்கள் என்ற பிம்பங்களுக்கு எல்லாம் மால்கம் ஒரு முன்னோடி. வெறும் ஆயுதம் தாங்கி பொது சமூகத்திடமிருந்து பிரிந்து அவர்களின் எவ்வித பங்களிப்புமின்றி அவர் விடுதலை வேண்டவில்லை. அவர் வாழ்ந்த காலத்தில் வெள்ளை இணவெறிக்கு எதிராக போராட ஆயுதம் தாங்கிய குழுக்களும் இருந்தது என்றாலும் மாறாக அவர் மக்களை அரசியல் படுத்தினார்.
அந்த அரசியல்படுத்துதல் வெறும் புறக்கனிப்பையும் சமூக அவலங்களையும் மட்டும் முன்வைத்து இருக்கவில்லை. அவர் மக்களைப் பண்படுத்த பயன்படுத்திய அரசியல் சித்தாந்தம் இஸ்லாமிய மார்கத்திற்கு சொந்தமானது. இஸ்லாம் என்ற தங்களது பூர்வகுடி வாழ்க்கை முறையை முன்வைத்து மக்களை ஒருங்கிணைத்தார்.
அவர் செயல்பட்ட அதே காலகட்டத்தில்தான் மார்ட்டின்லூதர்கிங் போன்றவர்களும் கறுப்பின மக்களுக்காக அரசியல் செய்தார்கள். ஆனால் அவர்கள் செய்த நெளிவுமிக்க அரசியல் எல்லாம் ஒடுக்குபவர்களிடம் இரக்கம் காட்டச்சொல்லி அதிகாரத்தை கேட்டு வாங்கிய அரசியல்.
இன்று இந்தியாவில் முஸ்லிம்சமூக அரசியல் தலைவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் பலர் செய்வது போல தங்களுக்கான விடுதலையை அதிகாரவர்க்கமே தரும் என்று நம்பினார்கள் . நமது இஸ்லாமிய கட்சிகளின் தலைவர்கள் தங்களது விரிவான தொலைநோக்கற்ற சிந்தனையால் தங்களுக்கு அந்நியப்பட்ட கட்சிகளிடம் சமூகத்தை அடகு வைத்து நன்மையை வேண்டி காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இது போன்ற வளைந்து கொடுக்கும் அரசியலுக்கு மால்கம் இடமளிக்காதவர். அவரிடமிருந்து நாம் கற்க வேண்டிய முதல் பாடம் இதுதான். அதிகார சபைகளில் கிடைக்கும் ஒரு சில இடங்களுக்காக சமரசம் செய்து கொள்ளும் எந்த முயற்ச்சியும் தோழ்வியிலேயே முடியும் என்று அவர் சரியாகவே உணர்ந்திருந்தார். இன்றைய நாட்களில் நம் சமூக மக்களில் பெரும்பாலானோர் இஸ்லாமிய அரசியலை விட்டு விலகி மாற்று கொள்கைகளுக்கு தீவிரமாக உழைக்கத் துவங்கியதால் நாம் நமது அரசியல் அடையாளத்தை இழந்துவிட்டோம்.
மேலும் மால்கமுடைய அரசியல் பேச்சுக்களிலும், விவாதங்களிலும் ஒருஉள்ளார்ந்த தீவிர குணமும், எந்த சூழ்னிலையிலும் தான் கொண்ட கொள்கையில் இருந்து பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை என்ற தன்மையும் இருந்தது.  அது அன்றைய நாளின் அத்தியாவசிய தேவையாக இருந்ததாக கருதலாம். காலம் காலமாக வஞ்சிக்கப்பட்டு, ஒடுக்கப்பட்ட சமூகம் விடுதலையை தீர்மானிக்கத் துவங்கும்போது அதில் ஒரு தீவிர உரிமைக்குரல் இருக்கவே செய்யும். இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் கூட இவற்றை காணலாம்.
மால்கம் பேசினார், கர்ஜித்தார், உணர்ச்சிமிக்க விவாதங்களைச் செய்தார், பல்கழைக்கலகங்கள், பேராசிரியர்கள், ஊடகங்கள், அதிகாரசபை எதுவும் மால்கமின் தீவிரதன்மையை மக்களிடமிருந்து அந்நியப்படுத்த முடியவில்லை. ஏனெனில் அவர் பேசியது அத்தனையும் நியாயம், அவருடைய கேள்விகளில் நீண்டகாலம் வஞ்சிக்கப்பட்டவர்களின் உணர்வுகளில் புதைந்திருந்த உண்மைகளை அவர் வெளிப்படுத்தினார். அம்மக்களின் சார்பாக பேசினார் அது நிஜம். நிஜம் எப்பொழுதும் அப்படித்தான் அதன் தீவிர தன்மையுடன் இருக்கும்.
இன்று இங்கு அதுதான் நடக்கிறது. ஒடுக்கப்பட்ட முஸ்லிம் சமூகத்துக்காக அரசியல்குரல் எழுப்பும்போது அவர்களின் உரிமைக்காக கர்ஜிக்கும் போது சிலரால் அதற்க்கு தீவிரவாத சாயம் பூசப்படுகிறது. முஸ்லிம் சமூகத்தின் இஜ்ஜத்திற்காக நடத்தப்படும் பேரணிகளை, அதில் எழுப்பப்படும் தீர்க்கமான கோஷங்களை ஏன் இது தீவிரமான தேவையில்லாத வேலை இதனால் பிரச்சினைகள்தான் வரும் என்று அறிவுரை சொல்லப்படுகிறது.
இந்தியாவில் நீண்ட நெடுங்காலமாக திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்ட முஸ்லிம் சமூக மக்களின் வாழ்க்கை சூல்நிலைகளுக்கும் அன்று அமேரிக்காவில் கருப்பின மக்களுக்கு நிகழ்த்தப்பட்ட சமூகப் பரிஷ்காரங்களுக்கும் மிகுந்த வேறுபாடு ஒன்றும் இல்லை. அங்கு நிறத்தின் பெயரால் நடைபெற்ற அநீதிகள் யாவும் இங்கு மதத்தின் பெயரால் நடைபெற்றன.
கல்வி மறுக்கப்படுவதும் குறிப்பிட்ட மக்களை சிந்தனை முடங்களாக மாற்றுவதுமே அடிமைப்படுத்துதலின் முதல் படிநிலை. அந்த வகையில் அமேரிக்க கருப்பின மக்களை கல்வியிலிருந்து வெகுதூரமாக்கி நீண்ட காலம் தாழ்வுமனப்பான்மையில் சிக்கவைத்திருந்து வெற்றியடைந்தனர் வெள்ளை ஆளும் வர்க்கத்தினர். மால்கம் அதை உடைத்தெரிந்தார்.
தாங்கள் வெள்ளையர்களுக்கு முன்பே நாகரீகத்தையும் அறிவியலையும் கற்றுக் கொடுத்தவர்கள் என்பதை ஆதாரங்களுடன் நிரூபித்தார். அவர் மார்டின்லூதர்கிங்கைப் போல நாங்களும் மனிதர்கள் எங்களுக்கு சுதந்திரம் வேண்டும் என்று வேண்டவில்லை. மாறாக நாங்கள் உங்களுக்கு முன்னே சிறந்த பாரம்பரியம் கொண்டவர்கள் என்ற உண்மையை ஒப்புக்கொள்ளவேண்டும் என்று வாதாடினார்.
இந்தியாவில் முஸ்லிம்கள் ஒன்றும் உரிமை கேட்டு மன்றாட வேண்டியதில்லை. சுதந்திரதினமும், குடியரசு தினமும் வந்தால் முஸ்லிம் தலைவர்கள் நாங்கள் தீவிரவாதிகள் அல்ல என்று தாழ்வு மனப்பான்மையில் விளக்கமளிக்க வேண்டியதில்லை. இங்கு எல்லா சமூகங்களுக்கும் முன்பாக விடுதலைக்காக தங்கள் சதவிகிதத்திற்கும் அதிகமாக உயிரை இழந்து போரடியவர்கள் என்ற வகையில் சுதந்திரத்தை கொண்டாட வேண்டிய உரிமை உடையவர்கள். ஆனால் இன்று அதுவெல்லாம் ஏதோ தேவையற்ற வேலை போலவும், இன்று நடக்கும் முஸ்லிம் சமூகத்தின் பிரச்சனைக்கு இவைகள்தான் காரணம் என்று நம் சமூகத்தில் சிலரின் பேச்சுகள் அதிகாரவர்க்கத்தின் திட்டமிடலுக்கும், ஆட்சியாளர்களின் சதிவலைகளுக்குள்ளும் இன்றும் நம் சமூகம் அகப்பட்டுத்தான் உள்ளது என்பதை ஊர்ஜிதப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.
மாற்றத்திற்கான முன்னேற்பாடுகளை கையில் எடுக்கவேண்டிய தருணம்இது. அதற்கு ஷஹீத் மால்கம் எக்ஸின் வாழ்க்கை நம் சமகால போராட்ட காலத்திற்கான படிப்பினை. அவர் கொண்டாடப்பட வேண்டும் முஸ்லிம்களின் ஒவ்வொரு அரசியல் மேடைகளிலும் அவருடைய பெயர் உச்சரிக்கப்பட வேண்டும் , சேகுவேராவை விட , பகத்சிங்கை விட நினைவுகூறப்பட மிகவும் பொருத்தமானவர் மால்க்கம்தான். அந்த வழிமுறைகளை சரியான முறைபடி எடுத்து செல்ல வேண்டும். முன்னெடுக்குமா?முஸ்லிம் சமூகம் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் மீண்டும் மீளாய்வு செய்வோம்.
நன்றி தூது ஆன்லைன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக