Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 29 மார்ச், 2015

அல்லாஹ்வின் அருள் மொழி!

உலகத்தில் இருநூறுக்கும் மேற்பட்ட நாடுகளில் கிட்டத்தட்ட 7,000 மொழிகள் பேசப்படுகின்றன. மொழி என்பது கலாச்சாரம், வாழ்க்கை ஆகியவற்றின் கண்ணாடி போன்றது. வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்கள், வெற்றி தோல்விகள் அனைத்தையும் பிரதிபலிக்கின்ற ஊடகம்தான் மொழி.
அல்லாஹ் மனிதனுக்கு அளித்துள்ள ஒரு மகத்தான அருள் மொழி இதனை அல்லாஹ் இப்படி கூறுகின்றான்: “அளவற்ற அருளாளன். இக்குர்ஆனை (அவன்தான்) கற்றுக் கொடுத்தான். அவனே மனிதனைப் படைத்தான். அவனே மனிதனுக்கு (பேச்சு) விளக்கத்தையும் கற்றுக் கொடுத்தான்.” (அர் ரஹ்மான் 55: 14)

இந்த மொழியின் மூலம் மனிதர்கள் தங்களுக்குள் பரஸ்பரம் அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். பந்தங்களை நிலை நிறுத்திக் கொள்கிறார்கள். ஒருவன் எந்த நாட்டைச் சார்ந்தவன், நாட்டில் எந்தப் பகுதியைச் சார்ந்தவன் என்பதை அவன் பேசும் மொழியை வைத்து, அந்த மொழியை அவன் உச்சரிக்கும் விதத்தை வைத்து கண்டுபிடித்துவிடலாம்.
உலகிலுள்ள மொழிகளில் சிலவற்றுக்கு மொழிச் செறிவும், இலக்கியச் செறிவும் அதிகம் உண்டு. மிகத் தொன்மையான தமிழ் அதில் ஒன்று. அதேப்போன்று அனைத்து சிறப்புகளும் அமைந்துள்ள மொழிதான் அரபி.
நமது தமிழைப் போலவே அரபியும் ஒரு செம்மொழி. அதன் சொல்வளம் வியக்கத்தக்கது. ஆண்டு என்பதற்கு 24 சொற்களும், ஒளி என்பதற்கு 21
செõற்களும் இருப்பதைப்போல இருள் என்பதற்கு 52 சொற்களும், கதிரவன் என்பதற்கு 29 சொற்களும், நீர் என்பதற்கு 170 சொற்களும், ஒட்டகம், வாள் போன்ற வார்த்தைகளைக் குறிக்க 1,000 சொற்களையும் கொண்டுள்ளது  அரபி.
“நாகரிக உலகின் மத்திய காலக்கட்டத்தில் பல நூற்றாண்டுகள் அரபி ஒரு கற்பிக்கும் மொழியாக, கலாச்சார மொழியாக, முற்போக்கு கருத்துகளை முன்னிறுத்திய மொழியாக விளங்கியது. 9ம் நூற்றாண்டு முதல் 12ம் நூற்றாண்டு வரை தத்துவம், மருத்துவம், வானியல் மற்றும் புவியியல் பற்றிய அநேக படைப்புகள் அரபியில் படைக்கப்பட்டது போல் வேறு எந்த மொழியிலும் படைக்கப்படவில்லை” என்கிறார் கீழ்த்திசை மொழியியல் வல்லுநர் பிலிஃப் கே. ஹிட்டி.
ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரை அரபி மொழியோடு அவனுக்கு ஆழமான தொடர்பு இருக்க வேண்டும். ஏனெனில் இது அவனது நம்பிக்கை சம்பந்தப்பட்டது. ஈருலகிலும் வெற்றி பெறுவதற்கு, வாழ்வின் அனைத்து திசைகளுக்கும் வழிகாட்டியாக அவன் தேர்ந்தெடுத்துள்ள மார்க்கமான தீனுல் இஸ்லாமை அல்லாஹ் மனிதனுக்கு கற்றுக் கொடுப்பது அரபி மொழியில்தான்.
(அல்லாஹ்விடம்) அவர்கள் பயபக்தியுடன் இருப்பதற்காக, எத்தகைய (குறையும்) கோணலும் இல்லாத இந்த குர்ஆனை அரபி மொழியில் (இறக்கி வைத்தோம்). (39: 28)
இன்று 26 நாடுகளில் ஆட்சி மொழியாக அரபி இருக்கிறது. சுமார் 30 கோடி மக்கள் அரபி மொழியைப் பேசுகின்றனர். ஐ.நா.வின் அதிகாரப்பூர்வ மொழிகளுள் அரபியும் ஒன்று. சின்னஞ் சிறிய வார்த்தைகளில் பென்னம் பெரும் கருத்துக்களை சொல்லும் தனிச் சிறப்பு மிக்க மொழியாக அரபு மொழி விளங்குகிறது.
(குர்ஆனாகிய) இவ்வேதம் (முந்தைய வேதங்களை) மெய்யாக்குகிற அரபி மொழியிலுள்ளதாகும். இது அநியாயம் செய்வோரை அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவும், நன்மை செய்பவர்களுக்கு நன்மாராயமாகவும் இருக்கிறது. (46: 12)
இந்த அற்புத மொழியைக் கற்பது நமது கடமை என்றும் அதனைக் கற்றால்தான் நம்முடைய தீனை முழுமையாகக் கற்க முடியும் என்றும், அதனை நமது வாழ்வில் நடைமுறைப்படுத்த முடியும் என்றும் ஒரு முஸ்லிம் எண்ண வேண்டும்.

நன்றி புதிய விடியல் மார்ச் 2015

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக