Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 18 மார்ச், 2015

ஆரோக்கியமான மக்கள்!! வளமான எதிர்காலம்!!

ஆரோக்கியமான மக்கள்!! வளமான எதிர்காலம்!!
இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டி நடத்தும் மாபெரும் விளையாட்டு விழா இன்ஷா அல்லாஹ் வரும் வெள்ளி (20/03/2015) ஷார்ஜா பல்கலைகழக மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

கால்பந்து, கைப்பந்து, கபாடி, கயிரு இழுத்தல்,100 மீ ஓட்டம், தொடர் ஓட்டம், குண்டெறிதல் போட்டிகள் காலை 7 மனி முதல் மாலை 6 மணி வரை நடக்க நடக்க இருக்கிறது. விழாவில் இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டியின் தமிழ்நாடு அணிகள், கேரளாஅணிகள், கர்நாடகா அணிகள், வடமாநிலங்கள் ஒருங்கினைந்ந்த அணிகள் மோத இருக்கின்றன. அது சமயம் நிறைவு நிகழ்ச்சியாக வெற்றி பெற்ற அணிகளுக்கு சுழற் கோப்பை பரிசளிப்பு நிகழ்ச்சியும் நடக்க இருக்கிறது. நிகழ்ச்சிக்கு இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டியின் அமீரக தேசிய தலைவர் T.M ஹசன் அவர்கள் தலைமை தாங்க ஷார்ஜா பலகலைகழக துனை வேந்தர் மஜீத் அல் ஜர்வான் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்கள்.
விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்தி நிகழ்ச்சியை சிறப்பித்து தர ஷார்ஜா பலகலைகழக மைதானத்திற்கு அமீரக சொந்தங்களை இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டியின் தமிழ்மாநில சார்பாக அன்போடு அழைக்கின்றோம்.

இப்படிக்கு
வலசை ஃபைசல்
மாநில பொது செயலாலர்
இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டி - தமிழ்நாடு
ஐக்கிய அரபு அமீரகம்

மின்னஞ்சல் மூலமாக
பாப்புலர் ஃப்ரண்ட் LBK

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக