Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 18 மார்ச், 2015

உப்புத்தன்மையைக் கண்டறிய ....


பெரம்பலூர், மார்ச் 18:
உப்புத்தன்மையைக் கண்டறிய பெரம்பலூர் மாவட்டத்தில் 121 ஊராட்சிகளுக்கும் குடிநீர் பரிசோதனைப் பெட்டி வழங்கப்பட்டுள்ளது என கலெக்டர் தெரிவித்தார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் குடி நீர்ப் பாதுகாப்பு வாரவிழா, கடந்த 16ம் தேதி துவங்கி வருகிற 22ம் தேதிவரை கொண்டாடப்படுகிறது. நேற்று பெரம்பலூரில் தேசிய ஊரகக் குடிநீர் மற்றும் சுகாதார விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
பெரம்பலூர் நகராட்சி வளாகத்தில் இருந்து தேசிய ஊரக குடிநீர் மற்றும் சுகாதார விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் தரேஸ்அகமது துவக்கி வைத்துப் பேசியதாவது : பாதுகாப்பு மற்றும் தரம் அறிந்து பாதுகாப்பான குடிநீரை அருந்தினால், நோய்களைத் தவிர்த்து ஆரோக்கியத்துடன் வாழ முடியும். குடிநீரின் மொத்த கார உப்புகள் இந்திய தர நிர்ணய வழிகாட்டுதல்படி அதிகபட்ச மாக 2000 மி.கி லிட்டர் வரை இருக்கலாம்.
இது அதிகமானால் தண்ணீரின் சுவை குன்றி காணப்படுவதுடன், குடல் மற்றும் வயிறு கோளாறுகள் ஏற்படுகிறது. மேலும் நீர் வழங்கும் குழாய்களின் கட்டுமானங்களில் அரிப்பு ஏற்பட்டு சேதமடையும். குடி நீரில் பி.எச் 6.5 முதல் 8.5க்கு மேல் இருந்தால் உணவுக்குழாய் ஐவ்வு பாதிக்கப்படுத்துதல், கசப்புச்சுவை தெரிவதுடன், நீர்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படும்.
இதுபோன்ற குடிநீரில் கலந்துள்ள உப்புக்களின் அளவு குறித்து சோதனை செய் வதற்காக, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 121 ஊராட்சிகளிலும் குடிநீர் பரிசோதனைப் பெட்டி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வுப்பெட்டியில் உள்ள உபகரணங்களைக்கொண்டு தங்கள் பகுதியின் குடிநீர் தரத்தை ஆய்வுசெய்ய அனைத்து ஊராட்சித் தலைவர்களுக்கும், பள்ளி ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் ஊராட்சிப் பகுதிகளில் வழங்கப்படும் தண்ணீர் பரிசோதிக்கப்பட்டு, அதற்கேற்ற வகையில் குடிநீர் ஆதாரங்கள் தேர்வு செய்யப்பட்டு, குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. பள்ளி மாணவ, மாணவிகள், குடிநீரை பாதுகாப்பாக மூடிவைக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்து தண்ணீர் குடிக்க வேண்டும். மேலும், காய்ச்சிய குடிநீரை குடிக்கும் போது, குழந்தைகளுக்கு எளிதில் ஏற்படும் பல்வேறு நோய்களை தவிர்க்கலாம் என்று தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து, பேரணி நகராட்சி அலுவலகத்தில் புறப்பட்டு பாலக்கரை, சங்குபேட்டை, காமராஜர் வளைவு வழியாக அரசு மேல்நிலைப் பள்ளியை சென் றடைந்தது. இதில் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் நகராட்சி நிர்வாகத்தினர் கலந்துகொண்டனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக