Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 9 மே, 2013

நமதூரில் +2 தேர்வு முடிவுகள்....


நமதூரில் +2 தேர்வு முடிவுகள்....
நமதூர் மேல்நிலைப்பள்ளிகளை பொருத்த வரையில் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளில் தேர்ச்சி விகிதம் 96 சதவிகிதம் ஆகும். கடந்த ஆண்டு 82 சதவிகிதம்

நமதூரைச் சேர்ந்த A.ஆயிஷா பானு(த/பெ A.முஹம்மது அலி - உசேன் ரலி தெரு ) என்ற மாணவி முதல் மதிப்பெண் பெற்றுள்ளார் இவர் பெற்றுள்ள மதிப்பெண் 1047/1200

இரண்டாம் இடமும் நமதூரைச் சேர்ந்த M.ஷ‌பானா பர்வீன் (த/பெ முஹம்மது ஹனீபா - சுபஹானியா நகர்) என்ற மாணவி பெற்றுள்ளார் இவர் பெற்றுள்ள மதிப்பெண் 1041/1200

மூன்றாம் இடமும் நமதூரைச் சேர்ந்த A.சாஹிரா பானு (த/பெ P.M.அப்துல் சுபஹான் - ஜெய்லானி தெரு) என்ற மாணவி பெற்றுள்ளார் இவர் பெற்றுள்ள மதிப்பெண் 1026/1200

நமதூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை பொருத்த வரையில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 84 சதவிகிதம் ஆகும் கடந்த ஆண்டு 36 சதவிகிதம்

பெண்ணக்கோணத்தைச் சேர்ந்த M.ரோஜா என்ற மாணவி முதல் மதிப்பெண் பெற்றுள்ளார் இவர் பெற்றுள்ள மதிப்பெண் 828/1200 

திருமாந்துறையைச் சேர்ந்த P.இளையராஜா என்ற மாணவர் இரண்டாம் மதிப்பெண் பெற்றுள்ளார் இவர் பெற்றுள்ள மதிப்பெண் 824/1200

வாலிகண்டபுரத்தைச் சேர்ந்த D.சின்னதுரை என்ற மாணவர் மூன்றாம் மதிப்பெண் பெற்றுள்ளார் இவர் பெற்றுள்ள மதிப்பெண் 806/1200

வெற்றி பெற்ற அனைத்து மாணவ மாணவிகளுக்கு நமது இணையதள சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
மின்னஞ்சல் மூலமாக
முஹம்மத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக