Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 15 மே, 2013

இறைவா ! உன்னையே வணங்குகின்றோம் உன்னிடத்தில் மட்டுமே உதவியையும் தேடுகின்றோம்.


நமதூர் மக்களின் துஆவும் இறைவனுடைய உதவியும் 
 
14.05.2013
அன்று நமதூரில் நடைபெற்ற மழை தொழுகையில் நமதூரின் கிழக்கு மற்றும் மேற்கு சுன்னத்துவல் ஜமாத் சார்பாக ஏற்பாடு செய்யபட்டது. இதில் நமதூர் நலம் மற்றும் ஊர் ஒற்றுமையை கருதி பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டு அல்லாஹ்வும் அவனுடைய ரசூலும் காட்டி தந்த வழி முறையில் மழை தொழுகையை நிறைவோற்றினார்கள். அல்ஹம்து லில்லாஹ்.

மழை தொழுகையை சரியாக காலை 9.30 மணியளவில் கிழக்கு பள்ளி இமாம் தொழ வைத்தார். பின்னர் நடைபெற்ற பேரூரையில் மேற்கு பள்ளி தலைமை இமாம் அவர்கள் மழைத் தொழுகையின் அவசியத்தை பற்றி அழகிய முறையில் விளக்கினார்.

அல்லாஹ் தன்திருமறையில் கூறுகிறான்...
அல்லாஹ்வே மேகத்திலிருந்து மழையை பொழியச் செய்து உயிரிழந்த பூமிக்கு உயிரூட்டுகிறான். (நல்லுபதேசத்திற்குசெவி சாய்க்கும் மக்களுக்கு நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது. (அல்குர்ஆன் 16 65 )


இந்த தொழுகையின் மூலம் அல்லாஹ்வின் உதவியை நேரடியாக நமதூர் மக்கள் பார்த்தார்கள் என்று கூறினால் அது மிகையல்ல. காரணம் பார்ப்பவர்களுக்கும், வியாக்கியான் கூறுபவர்களுக்கும் நடைபெற்ற சம்பவம் ஒரு எதார்த்தமாகவே அவர்களுக்கு காட்சியளித்தாலும், உள்ளச்சதோடு எல்லாம் வல்ல அல்லாஹ்வின் உதவியை மட்டுமே எதிர்பார்த்த மாந்தர்கள் மத்தியில் அல்லாஹ் தன் அருளை வெளிப்படுத்தும் வண்ணம் இன்று நமதூரில் அல்லாஹ்வின் அருள் மழை இறங்கியது. இதனால் நமதூரில் சற்று சூடு தனிந்தது. அல்லாஹு அக்பர்..

கருத்துக்கள் பல வகை நமக்குள் இருந்தாலும் இப்படிப்பட்ட நல்ல அமல்களில் குரோத மனப்பான்மை இறைவனுக்காகவே மட்டும் களைந்து, நல்ல தலைமைக்கு கட்டுப்பட்டவர்களாக இறைவனுடைய உதவியை எதிர் பார்த்தவண்ணம் இருந்தால் அவர்களை வேண்டுதலை இறைவன் செவிசாய்த்து உதவிப்புரிபவனாகவே இருக்கிறான். என்பதற்கு இது ஒரு பறைசாற்று.

காரணம் இறைவனை நோக்கி நாம் நடந்தால் அவன் நமக்கு உதவிபுரிய நம்மை நோக்கி ஓடி வருபவனாகவே இருக்கிறான். என்பதை ஆனித்தனமாக நம் மனதில் நாம் பதியவைக்க வேண்டும். அப்பெழுது தான் நாம் செல்லக்கூடிய அனைத்து பாதைகளுக்கும் இளகுவாக வழிகிடைத்து நமக்கு முட்டுக்கட்டையாக இருக்க கூடியவைகளுக்கும் நமதூருக்கு சவாலாக திகழக்கூடிய பாதள சாக்கடைத்திட்டதிற்கும் விரைவில் தீர்வு பிறக்கும் என்பது நம் எதிரிகளுக்கு கூட தெரிந்த உண்மை.  
நமது நிருபர். 

3 கருத்துகள்:

  1. பெயரில்லா16 மே, 2013 அன்று PM 2:27

    மாஷா அல்லாஹ் ...

    பதிலளிநீக்கு
  2. allahu Akbar allahu Akbar yar allahuvitam nerrukirakalo avarkali allahuvum mikavum neeru kindran idhu annal muhamed sal allahivasaalm vakuruthi vannakalil iruunthu mallakalyum poomikalil irunthu kani varkakalyum nee velipaduthuban nee arulalan iraiva enkali kafirana kootathil irunthu enakali pathukapayaka

    பதிலளிநீக்கு