Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 26 மே, 2013

அயோடின் குறைபாடு மன வளர்ச்சியை பாதிக்கும் !

கர்பக்காலத்தில் அயோடின் குறைபாடு இருந்தால், அது பிறக்கப் போகும் குழந்தையின் மன வளர்ச்சியை பாதிக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
பிரிட்டனில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், கர்பக்காலத்தில் தாய்மார்கள் அயோடின் சத்து நிறைந்த மீன் மற்றும் பால் பொருட்களை போன்ற உணவுகளை போதுமான அளவில் உட்கொள்ளாவிட்டால் பிறக்கப் போகும் குழந்தையின் அறிவுத் திறன் மற்றும் வாசிப்புத் திறன் ஆகியவை ஒப்பீட்டளவில் மற்ற குழந்தைகளைவிட குறைவாக இருப்பதாக அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஆரம்பப் பள்ளி சிறுவர்களிடையே நடத்தப்பட்ட
ஆய்விலேயே இந்த முடிவுகள் தெரிய வந்ததாகவும் இதில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதே போல அயோடின் சத்து அதிக அளவிலுள்ள கடற்பாசியிலிருந்து தயாரிக்கப்பட்ட கூடுதல் ஊட்டச்சத்து அளிக்கக்கூடிய உணவு வகையையும் கர்பிணித் தாய்மார்கள் தவிர்க்க வேண்டும் எனவும் அந்த ஆய்வு கூறுகிறது.
அயோடின் சத்து மிக அதிக அளவில் உள்ள கடற்பாசி சார்ந்த உணவுகளை கர்பிணிகள் உட்கொள்ளும் போது, தேவையான அளவுக்கு கூடுதலாக அது உடலில் சேரும், அதுவும் நல்லத்தல்ல என்று அந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உலகளவில் தவிர்க்கப்படக் கூடிய மூளை பாதிப்புக்கள் ஏற்படுவதற்கு கடுமையான அயோடின் பற்றாக்குறை ஒரு முக்கிய காரணமாக உள்ளது என்று கருதப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக