Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 19 மே, 2013

நமதூர் சமீபகாலமாக சமாலித்து வரும் தண்ணீர் தட்டுப்பாடு.


தண்ணீர் இறைவனின் அருட்கொடை! தண்ணீரை வீண் விரையம் செய்யாதீர்!

 (நபியே!) நீர் கூறும்: (நீங்கள் குடிக்கும்) தண்ணீர் பூமியினுள் வெகு ஆழத்தில் சென்றுவிட்டால், பிறகு தண்ணீரின் (வேரொரு) ஊற்றை உங்களுக்குக் கொண்டு வருபவன் யார் என்று கவணித்தீர்களா?.    திருக்குர்ஆன் 67:30. 

அல்லாஹ்வின் பேரருளால் இதுநாள் வரையிலும் நமதூரில் தண்ணீர் தட்டுப்பாடு பற்றி யாரும் சிந்தித்து கூட பார்த்ததில்லை. காரணம் இயற்க்கை எழிலோடு அமைந்த நமதூரின் தோற்றம். 

ஒருபக்கம் ஆறும், மறுப்பக்கம் வாய்க்கால் ஓடையும் இருந்து வந்த நிலையில் கடந்த சில வருடங்களாகவே ஏற்பட்ட சில மாற்றங்கள்.

ஆற்றில் தண்ணீர் வரப்பு குறைவு, வாய்க்கள் ஓடையில் கழிவுநீர் கலப்பு, போன்றவைகள் நம்மை நிர்பந்திக்கும் பொருட்டு சுகாதாரமற்ற நிலைக்கு நம்மை காலம் தள்ளிக்கொண்டுள்ளது என்பதனை காலத்தின் கட்டாயமாக நாம் சிந்திக்க உணர கடமை பட்டுள்ளோம்.


ஒரு காலத்தில் நம்முடைய முன்னோர்கள், அம்மா மார்கள், குடத்தினை தூக்கி கொண்டு போய் தினமும் ஆற்றினில் ஊத்து தண்ணீர்  எடுத்து வருவது வழக்கமாகவே இருந்துள்ளனர். ஆனால் அதற்கு பிறகு வந்த சந்ததி வீட்டிலேயே போர் போட்டு அடி பைப்பு வைத்து தண்ணீர் பயன் படுத்தினோம். இது இல்லாமல் நமதூர் பஞ்சாயத்து போடு மூலமாக வீட்டிற்கே குடிநீர் குழாய் அமைத்து குடிநீர் பயன்படுத்தி வந்தோம்.

இதுவரை சரியாக போய் கொண்டிருந்த வாழ்க்கை முறை, எதிர்காலத்தில் சற்று அச்சுறுத்தல் ஏற்படும் நிலைக்கு நம்மை தள்ளிஉள்ளது.

இன்றைய சூழ்நிலையில் பலர் வீடுகளில் சரியாக தேவையான  குடிநீர் கிடைப்பது இல்லை. போர் தண்ணீர் மட்டம் குறைந்துக்கொண்டே செல்கிறது. சுமார் 30 & 40 அடிகளில் தண்ணீர் கிடைத்த வீடுகளில் தண்ணீர் தட்டுப்பாடு முதல் முதலாக ஏற்பட்டு இருக்கிறது.

மேற்கு ஆற்றங்கரை ஓரங்களில் இருக்கும் ஒருசில வீடுகளுக்கு கூட இந்த நிலைதான் உள்ளது என்றால், தெருக்களில் உள்ளவர்களுக்கு சொல்ல தேவையில்லை. நமதூருக்கு எதிர்காலத்தில் இது மிகவும் அச்சுறுத்தலாகவே உள்ளது.

நோன்பு பெருநாளில் நமது பெண்கள் காலையில் தெருக்களை சுத்தம் செய்து தண்ணீர் தெளித்து பார்ப்பவர்களுக்கு கண்ணுக்கு விருந்தாக அமைந்த நமதூர், பழைய நிலைக்கு சென்று மீண்டும் அந்த சுவையான நீரை நாமும் நம்முடைய வாரிசுகளும் பருகும் பாக்கியத்தை  எல்லாம் வல்ல அல்லாஹ் அருள்புரிவானாக!

நமது நிருபர்.

1 கருத்து: