Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 16 மே, 2013

அன்புள்ள வாசகர் பொதுமக்களே


அன்புள்ள வாசகர் பொதுமக்களே அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.(அல்குர்ஆன் 5:8)
அன்புள்ள வாசகர் பொதுமக்களே அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
இந்த கட்டுரை தங்களுக்கு சீரிய சிந்தனையும் சிறப்பான வாழ்வையும் நமக்கு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் எழுதப்பட்டுள்ளது.

ஏன் இதை குறிப்பிடுகிறோம் என்றால் நமது சமுதாயத்தில் நல்ல தொரு மாற்றம் உருவாக வேண்டி கட்டுரைகள் வெளியிடும் தருவாயில் தங்களுக்கு தாங்கள் அறிவுக்கு எட்டிய வண்ணம் கருத்துக்களை வெளியிடுவது வழக்கம். அது உங்கள் உரிமையும் கூட. ஆனால் தமக்குள் இருக்க கூடிய குரோத மனப்பான்மையை மைய்யமாக கொண்டு ஒருவரை ஒருவர் அனாகரிகமான வார்த்தைகளில் ஈடுபடுவது மார்க்கத்திற்கு ஆகுமானதா என்று அவர்களுடைய மார்க்க அறிஞர்களிடம் கேட்டு தெரிந்துக்கொள்ளவும்.
ஒரு காலத்தில் இஸ்லாம் எப்படி வளர்ந்த்து அதற்கு உதவியாக இருந்த சகாபாக்கள் முதல் இன்று இருக்க கூடிய தக்வா வாதி இறையச்சம் உடைய மனிதர் வரை இஸ்லாம் எப்படி கொண்டு வந்து சேர்த்தார்கள என்பதை நாம் சற்று சிந்தித்து பார்க்க வேண்டும்.
ஆனால் இன்றய நிலை ஒரு சில அமைப்பில் உள்ளவர்களும் ஒரு சில ஜமாத்தில் உள்ளவர்களும் ஒருவரை ஒருவர் ஏலனமாக பேசிக்கொள்வது மார்கத்திற்கு ஏலனமாக ஒன்றே. அதன் தரத்தை வைத்தே உங்களுடைய நிலையையும், தரத்தையும் அல்லாஹ் மக்கள் மத்தியில் வெளிப்படுத்துகிறான்.
ஒரு முஸ்லிமின் கண்ணியத்தை பாதுகாக்க வேண்டியது. இன்னொரு முஸ்லிமின் கடமை.
அல்லாஹ்வை நினைப்பதை தவிற வேறு மிதமிஞ்சிய பேச்சுகளில் ஈடுபடுபதைவிட்டும் தவிந்து கொள்ளுங்கள். ஏனெனில் அது உங்கள் இதயத்தை இறுக்கி கடினமாக்கிவிடும். யாருடைய இதயம் கடினமாகி விட்டதோ அது அல்லாஹ்வை ( நேர்வழி ) விட்டு வெகுதூரத்தில் உள்ளது. என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
பொதுநலம் கருதி வெளியிடுவோர்
ஆசிரியர் குழுமம்.

8 கருத்துகள்:

  1. ஜசாகல்லாஹ் கைரன்!

    ஒர் அருமையான் ஹதீஸ் மூலம் சமூகத்தில் உள்ள தீமையை சுட்டிக்காட்டியமைக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா19 மே, 2013 அன்று 6:18 AM

    What's up, I read your blogs regularly. Your writing style is awesome, keep doing what you're doing!


    Stop by my site; oakley sunglasses ems discount

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா20 மே, 2013 அன்று 10:53 AM

    asslamu alaikkum warah....

    சிந்தித்து கருது எழுது நமதுஊர் செய்தியாளர்களே!!


    ""ஒரு முஸ்லிமின் கண்ணியத்தை பாதுகாக்க வேண்டியது. இன்னொரு முஸ்லிமின் கடமை""

    என்பது சரி இது "ஒரு முஸ்லிமின்க்குதான்"

    ஒரு கூட்டத்தன் கண்ணியம் இல்லை முஸ்லிம்களில் ஒரு கூட்டம் நரகத்திற்கு போனால் என்ன செய்வது (அவர்ககள் செய்யும் தவர்களை ) சுற்றிக்கான்பிக்க வேண்டும்.அதான் ஒரு முஸ்லிமின் கடமை

    (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர். (அல் குரான் )

    அன்றி, அவர்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டு, (மனிதர்களுக்கு)நன்மையான காரியங்களை ஏவி, தீமையான காரியங்களிலிருந்து தடுத்து, நன்மையான காரியங்களைச் செய்ய விரை(ந்தும் செல்)கின்றனர். இத்தகைய வர்களும் நல்லவர்களில் உள்ளவர்களே. (அல் குரான் )

    தவர்கள் யார் செய்தாலும் தவர்தான்.

    அனால் முஸ்லிம் அரசியல் கட்சில் ஒன்று SDPI தவறுகளில் முதல் இடத்தை தக்கவைத்து உள்ளது.

    இது மிக கஷ்டமாக உள்ளது.

    நாம் இதை சொல்லா விட்டால் தவறுகள் அதிகரித்து விடும்.

    by
    abu saaliha


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெயரில்லா20 மே, 2013 அன்று 4:16 PM

      SDPI முஸ்லிம் கட்சி என்று கூறியது யார்? இந்த கட்சி முஸ்லிம் கட்சி என்பதை உங்களால் நிரூபிக்க முடியுமா? இது முஸ்லிம்களை மட்டும் இக்கட்சி முன்னேற்றும் என்று கூறியதை எங்காவது நீங்கள் கேட்டதாவது உண்டா?
      ஏன் புரளியை கிளப்பி விடுகிறீர்கள்?

      நீக்கு
    2. பெயரில்லா20 மே, 2013 அன்று 5:08 PM


      அப்போ SDPI கட்சி வந்து BJP இன் கை கூலி ("சிவாசெனா, விஸ்வ இந்து பரிசத் , RSS ," போன்ற இந்து இயக்காகல்) அதே போல் SDPI கட்சியூம்மா ....

      நீக்கு
  4. பெயரில்லா20 மே, 2013 அன்று 11:01 AM

    சிந்தித்து கருத்து எழுது நமது ஊர் செய்தியாளர்களே


    நீங்கள் பலக் கருத்தை மாத்தி திருத்தி எழுதுவதே உங்களுக்கு கை வந்த கலை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெயரில்லா20 மே, 2013 அன்று 11:41 PM

      ஆரம்ப காலத்தில் அண்ணன் (பிஜே) அவர்கள் சொன்ன கருத்தை இப்போது மாத்தி சொல்ல வில்லையா? ஒரு போரியத்தின் தலைவரோ அப்படி என்றால் இவங்க மட்டும் விதி விலக்கா? என்ன பாஸ்.

      நீக்கு
  5. பெயரில்லா21 மே, 2013 அன்று 6:33 PM

    ஊரை ஏமாற்றும் ஆர் எஸ் எஸ் ட்ரவுசர் பயல்கள் மாதிரி நம்ம ஆட்களிலும் எண்ணி பார்க்க கூடிய சில ட்ரவுசர் பசங்க இருக்கானுங்க. அவனுகளுக்கு நீதி வேணுமாம் .

    நீதி கடையிலே விக்கிற மாதிரி கேட்கிறானுங்கோ.

    அப்படி எதுவும் கடையிலே விற்கிற மாதிரி இருந்தா சொல்லுங்க

    ஆளுக்கு ரெண்டு கிலோ வாங்கி கொடுப்போம்

    பதிலளிநீக்கு