Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 29 மே, 2013

பள்ளிக்கூடம் திறப்பு தேதி மாற்றிவைப்பு

பள்ளிக்கூடம் திறப்பு தேதி மாற்றிவைப்பு

தமிழகத்தில் கடுமையான வெப்ப நிலை தொடர்வதால், மாணவர்கள் நலன் கருதி, அனைத்து பள்ளிகளும், ஜூன், 3ம் தேதிக்கு பதில், ஜூன், 10ம் தேதி துவங்கும் என, பள்ளி கல்வி துறை அறிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும், "கத்திரி' வெயில் வாட்டி எடுக்கும். இந்தாண்டுக்கான "கத்திரி' வெயில்,
கடந்த, 4ம் தேதி துவங்கியது. "கத்திரி' வெயில் துவங்கியது முதலே, தமிழகம் முழுவதும் தொடர்ந்து வெயில் வாட்டி எடுத்தது. "கத்திரி' வெயில் நேற்றுடன் முடிவடைந்தும், வெயிலின் தாக்கம் குறைய, ஒரு சில வாரங்கள் ஆகும் என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.ஒவ்வொரு ஆண்டும், பள்ளிகள் திறப்பதற்கு முன், வெயில் தாக்கம் குறித்து பரிசீலிக்கப்படும். அதன்படி, பள்ளிகள் திறப்பு தேதி முடிவு செய்யப்படும்.
வெயிலின் தாக்கம் குறையாததால், புதுச்சேரி அரசு, பள்ளிகளின் திறப்பு தேதியை, ஜூன், 3ம் தேதியில்இருந்து, 10ம் தேதிக்கு தள்ளி வைத்தது.இந்நிலையில், தமிழகத்தில், அர” மற்றும் அர” நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என, அனைத்து வகை பள்ளிகளின் திறப்பு தேதியை, ஒரு வாரத்திற்கு தள்ளி வைக்கலாமா என்பது குறித்து, தமிழக அர”, தீவிரமாக ஆலோசித்தது.இந்நிலையில், பள்ளிகல்வி இயக்குனர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:நடப்பு, 2013-14ம் கல்வியாண்டில், தமிழகத்தில் இருக்கும் அனைத்து பள்ளிகளும், ஜூன், 3ம் தேதி துவங்கும் என, முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, தமிழகத்தில் கடுமையான வெப்ப நிலை தொடர்வதால், மாணவர்கள் நலன் கருதி, அனைத்து பள்ளிகளும், ஜூன், 3ம் தேதிக்கு பதில், ஜூன், 10ம் தேதி துவங்கும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக