Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

சனி, 11 மே, 2013

நீண்ட நாள் கனவு நினவாகிறது.....


மே 24 அன்று பெரம்பலூர் மாவட்ட தமுமுக சார்பில் லப்பைக்குடிக்காட்டில் சமூக நல்லிணக்கப் பொதுக்கூட்டம் மற்றும் ஆம்புலண்ஸ் அர்ப்பணிப்பு விழா நடைபெற உள்ளது. அந்த விழாவில் மாநிலத் தலைவர் J.S.ரிஃப்பாயி அவர்களும், மமக மாநிலப் பொதுச்செயலாளர் M.தமீமுன் அன்சாரி அவர்களும், ஆம்பூர் தொகுதி மமக சட்டமன்ற உறுப்பினர் அஸ்லம் பாஷா MLA அவர்களும், மமக மாநில அமைப்புச் செயலாளர் மண்டலம் ஜைனுலாப்தீன்
அவர்களும், மாநில மருத்துவணிச் செயலாளர் கிதர் மொய்தீன் அவர்களும் பங்கேற்கிறார்கள்.
அதுசமயம் பெரம்பலூர் மாவட்ட முப்பெரும் கல்வி நிறுவன தந்தைகள் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனத்தின் தாளாளர் சீனிவாசன் அவர்களும், ரோவர் கல்வி நிறுவனத்தின் தாளாளர் வரதராஜன் அவர்களும், ராமகிருஷ்னா கல்வி நிறுவனத்தின் தாளாளர் சிவசுப்ரமணியம் அவர்களும், கலந்துக் கொள்கிறார்கள். மேலும் இவ்விழாவில் பெரம்பலூர் மாவட்ட உலமா சபைத் தலைவர் அப்துல் காதர் பாகவி அவர்களுக்கும், திருவள்ளுவர் தவச் சாலை நிறுவர் பாவலர் ஆடல் அவர்களுக்கும், கிருஸ்துவ நண்பர் ஒருவருக்கும் சமூக நல்லிணக விருதுகள் வழங்கப்பட உள்ளது. மேலும் விழாவின் ஒரு நிகழ்ச்சியாக அனைத்து தரப்பு மக்களின் பயன்பாட்டிற்காக இலவச ஆம்புலண்ஸ் சேவை துவக்கப்பட உள்ளது. இவ்விழாவிற்கான முழு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகிகள் தீவிரமாக செய்து வருவதாக தெரிகிறது.
நமது நிருபர்

2 கருத்துகள்:

  1. பெயரில்லா15 மே, 2013 அன்று PM 7:58

    தமுமுக ஆம்புலன்ஸ் நாதஸ்வரம் நாடகத்தில்.
    http://www.youtube.com/watch?v=JnsdkKbmcaQ

    அதன் நிர்வாகியின் ஒப்புதல் மூலத்துடன்
    http://mp3truck.com/tmmk-nadaswaram-mp3-download.html

    இதுபோல் வாடகைக்குவிட்டு சம்பாரிக்க வாழ்த்துக்கள்
    அன்புடன்
    அனஸ்

    பதிலளிநீக்கு