Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 30 மே, 2013

நபி வழியில் திருமண வாழ்த்து.

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.
நபி வழியில் திருமண வாழ்த்து.
”பார(க்)கல்லாஹூ ல(க்)க வபார(க்)க அலைக்க வஜமஃஅ பைன(க்)குமா ஃபீ கைர்”.
     
 அன்பு இறை அடியார்களே! உங்கள் அனைவர் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் பொழிந்து அல்லாஹ்வின் அருள் உண்டாகட்டுமாக.
      அல்லாஹ் தனது அனைத்து படைப்புகளையும் அதனதற்கு தக்க இணையான ஜோடிகளுடன் படைத்துள்ளான். அதன் அடிப்படையில் மனிதர்களிலும் ஆண், பெண் என இருபாலாரைப் படைத்து, அவ்விரு பாலாருக்குள் விருப்பப்பட்ட ஜோடிகளை அமைத்துக் கொண்டு வாழ, அல்லாஹ் அனுமதித்துள்ளான். இப்படி ஓர் ஆணுக்கும், ஒரு பெண்ணுக்கும் ஏற்படும் இந்த வாழ்வு-உறவை ‘திருமணம்’ என்கின்றார்கள். இதை இஸ்லாம் ’திருமண ஒப்பந்தம்’ என்றழைக்கிறது. நம்மில் மிகுதமானவர்கள் திருமண ஒப்பந்தம் செய்துக் கொண்டவர்களாகவும், சிலர் திருமண ஒப்பந்தத்தை செய்துக் கொள்ள இருப்பவர் களாகவும், அநேகர் உறவினர்களின், நண்பர்களின் திருமண ஒப்பந்த நிகழ்வுகளில் அன்றாடும் கலந்து கொள்பவர்களாகவும் இருக்கின்றோம். திருமண நிகழ்வில் கலந்து கொள்ளும் மிகுதமானோர் அங்கு திருமண ஒப்பந்தம் செய்துக் கொள்ளும் ஆண்-பெண் ஜோடி சேரும் மணமக்களை வாழ்த்தி மகிழச் செல்லுகின்றார்கள். மீதமுள்ளோர் மனமக்களை கண்டும் காணாதோராகி நிகழ்சியில் கலந்து திரும்புகின்றார்கள். பலர் பலவிதமாக மனமக்களை வாழ்த்திய போதும், இஸ்லாமியர் களாகிய நாம் கூறும் வாழ்த்து, மனமக்களின் வாழ்வுக்காக இறைவனிடம் செய்யும் துஆவாக அமையனும் என்று இஸ்லாம் வலியுருத்திச் சொல்லுகிறது.   இறையடியார்களே! நீங்கள் புதுமணமக்களை சந்திக்கும் வாய்ப்புகளைப் பெறுவீர்களானால், மணமக்களுக்காக அல்லாஹ்விடம் துஆ செய்து, முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கற்றுத்தந்த வாழ்த்து துஆவை சொல்லி வாழ்த்துங்கள்.
திருமண வாழ்த்து துஆ.
”பார(க்)கல்லாஹூ ல(க்)க வபார(க்)க அலைக்க வஜமஃஅ பைன(க்)குமா ஃபீ கைர்”.
      பொருள்: அல்லாஹ் உங்கள் இருவருக்கும் வளம் (பரக்கத்) பெறச்செய்வானாக. நன்மையான விஷயங்களில் உங்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பானாக.  அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரழி).  நூல் : அஹ்மத், அபூதாவுத்.
      இப்படி அழகிய முறையில் வாழ்த்துவதை விட்டு, நமது முஸ்லீம் திருமண மஜ்லீசுகளின் வழக்கத்திலிருக்கும் வாழ்த்து எனும் குத்பாவின் தமிழ்ப் பொருளை சற்று இங்கு ஆராய்வோம்.
      திருமண மஜ்லீசில், சப்தமிட்ட குரளில், இமாம் அவர்கள் மணமக்களை வாழ்த்தி ‘குத்பா’ ஒன்றை நீட்டி ஓதுவார். அல்லாஹும்ம அல்லிஃப் பைன வ பைனஹுமா கமா அலஃப்த பைன ஆதம வ ஹவ்வா . . . . . என்று தொடரும் இந்த குத்பா சற்று நீளமாகவே ஓதப்படும். அந்த ஓதுதல் சபையின் சார்பாக மணமக்களை வாழ்த்துவதாக அமைந்திருக்கும். அப்படி ஆர்வமுடன், கண்டிப்பாக ஓதப்படும் குத்பாவின் மொழிப்பெயர்ப்பை இக்கட்டுரையின் வாயிலாக விளக்குவது எமது நோக்கமே யொழிய, யாரையும் குறைகாண்பது நோக்கமாக இராது.
      கற்றவனாக இரு, கற்றுக் கொடுப்பவானக இரு, கற்பவனுக்கும், கற்றுக்கொடுப் பவனுக்கும் உதவியாக இரு. என்று தொடங்கி,
      1. இறைவா! நபி ஆதம் (அலை), ஹவ்வா (அலை) இவர்களைப்போல் இம்மண மக்களுக்கிடையில் நட்பை ஏற்படுத்துவாயாக. (என வாழ்த்துகின்றார்கள்).
      விளக்கம்: திருக்குர்ஆன் 20:115 வசனத்தில் நபி ஆதம் (அலை) அவர்கள், இறைவனது கட்டளையை மறந்து, உறுதியற்றவராக இருந்ததாக அல்லாஹ் விவரிக்கின்றான். இன்னும், நபி ஆதமை (அலை) அவர்களையும் அவரது துணைவியர் ஹவ்வா (அலை) அவர்களையும் அவர்கள் செய்த உறுதியற்ற செயலுக்காக சுவர்கத்திலிருந்து வெளியேற்றியதாக 20:123 வசனத்தில் அல்லாஹ் விவரிக்கின்றான். சுவனபதியிலிருந்து வெளியேறிய அவர்கள் பல ஆண்டு காலமாக பிரிந்து வாழ்ந்ததாக ஹதீதுகளின் வாயிலாக அறிகின்றோம்.
      இவ்வளவு இன்னல் பெற்று பிரிந்து வாழ்ந்த நபி ஆதம், ஹவ்வா அவர்களைப் போல நமது பிள்ளைகளும் வாழனும் என்று விரும்பி வாழ்த்திட பெற்றோராகிய உங்களுக்கு மனமிருக்கின்றதா? மணமக்களாகிய புதுத் தம்பதிகளே, உங்களுக்கு இப்படி கணவன்-மனைவி பிரிந்து பல ஆண்டு வாழும் வாழ்வு தேவைப்படுகிறதா?
    2. இறைவா! நபி இப்ராஹீம் (அலை) அவர்களும் சாரா, ஹாஜிரா (அலை) போல் வாழச்செய்வாயாக. (என வாழ்த்துகின்றார்கள்).
      விளக்கம்: நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் சாரா (அலை) அவர்களை மனைவியாக்கி சுமார் 90 வயது வரை குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தார்கள். குழந்தை செல்வத்திற்காக பின்னர் ஹாஜிராவை மணந்தார்கள். (அல் குர்ஆன் 11:72 வசனத்தின் முன் பின் தொடரையும், அவைகள் சார்ந்த நபி இப்ராஹீம் (அலை), சாரா (அலை), ஹாஜிரா (அலை) வரலாறுகளையும் காண்க).
      பெற்றோர்களே! நீங்கள் உங்களது பிள்ளைகளுக்கு செய்விக்கும் திருமணத்தால், உங்களது பிள்ளைகள் 90 ஆண்டு காலம் குழந்தை பாக்கியம் பெறாமலிருக்க வேண்டுதல் செய்கிறீர்களா? மணமக்களே! நீங்களும் 90 ஆண்டு காலம் தாமதித்த குழந்தை பெற்றுக் கொள்ள சம்மதிக்கின்றீர்களா? இது சாபம் போல் தொன்றுகிறதல்லவா..
      3. இறைவா! நபி யூசுப் (அலை) ஜுலைகா போல் வாழச்செய்வாயாக. (என வாழ்த்துகின்றார்கள்).
      விளக்கம்: நபி யூசுப் (அலை) அவர்களுக்கு ஜுலைகா என்ற பெயருடன் ஒரு மனைவி இருந்ததாக குர்ஆன்-ஹதீஸ் ஆராய்ச்சியிலிருந்தும் தெரியவில்லை. ஜுலைகா என்ற பெண் நபி யூசுப் (அலை) அவர்களின் மனைவியாக இல்லை என்பது தான் உண்மை.
      அல் குர்ஆன் 12:23 வசனத்தில் ஓர் அழகி தனது ஆசைக்கு இணங்க நபி யூசுப் (அலை) அவர்களை அழைத்ததாகவும், அல்லாஹுவுக்கு அஞ்சி நபி யூசுப் (அலை) அவர்கள் தன்னை காத்துக் கொண்டதாக வருகிறது. அதாவது, இந்த அழகி எகிப்து நாட்டு மன்னன் அஜீஸின் மனைவி என்றும் அப்பெண்ணின் பெயர் ஜுலைகா என்றும் விரிவுரை களிலிருந்து அறியப்படுகிறது.
      இறைவிசுவாசிகளே! சம்பந்தமில்லாத, தவறான எண்ணம் கொண்ட ஒரு பெண்ணை நபி யூசுப் (அலை) அவர்களோடு இணைத்து (அஸ்தஃபிருல்லாஹ்) பேசுவதும், பாடுவதும், எழுதுவதும் எப்படிப் பட்ட பாவம் என்பதை உணரவேண்டும்.
      பெற்றோர்களே! உங்கள் பிள்ளையை சம்பந்தமற்ற, நடத்தை கெட்ட, புனைக்கப்பட்ட ஜோடி போல வாழ வாழ்த்த மனமிருந்தால் வாழ்த்திக் கொள்ளுங்கள். மணமக்களே அந்த வாழ்த்துக்களை பெற்றுக்கொள்ள மனமிருந்தால் பெற்றுக் கொள்ளுங்கள்.
      4. இறைவா! நபி நூஹ் (அலை) பாரிஸா போல் வாழச்செய்வாயாக. (என வாழ்த்துகின்றார்கள்).
      விளக்கம்: நபி நூஹ் (அலை) அவர்களின் மனைவி பாரிஸாவாக இருக்கட்டும். இறைவசனம் 66:10 மூலம் நூஹ் உடைய மனைவியும், லூத்துடைய மனைவியும் அல்லாஹுவை நிராகரித்த காரணத்திற்காக நரக நெருப்பில் பொசுக்கப் படுவார்கள் என்று அல்லாஹ் கூறுகின்றான்.
      அல்லாஹ்வால் நரகம் உத்திரவாதம் அளிக்கப்பட்ட பாரிஸாவைப் போல, பெற்றோர்களே! உங்களது பிள்ளைகளையும் நரக நெருப்பு கிடைக்க வாழ்த்து துஆ செய்கின்றீர்களா? அதை பிள்ளைகளான நீங்களும் ஒப்புக்கொண்டு விரும்புகின்றீர்களா?
      5. இறைவா! நபி அய்யூப் (அலை) ரஹீமா போல் வாழச்செய்வாயாக. (என வாழ்த்துகின்றார்கள்).
      விளக்கம்: நபி அய்யூப் (அலை) அவர்களின் மனைவி ரஹீமா தான் என்பதற்கு குர்ஆன், ஹதீஸிகளிலிருந்து யாதொரு ஆதாரமும் இல்லை. ஆதாரமில்லாத (ரஹீமா) ஒருவரை நபி அய்யூப் (அலை) அவர்களின் மனைவியாக சித்தரிப்பது பாவமானதாகும்.
      அல் குர்ஆன் 21:83 வசனம் மூலம் நபி அய்யூப் (அலை) அவர்கள் பெரிய நோய் பெற்றிருந்ததாகவும், அதை அல்லாஹ்விடம் மண்றாடி துஆ செய்து நிவாரணம் பெற்று நபியவர்கள் நலமடைந்ததாக நாம் அறிகின்றோம். மேலும், நபி அய்யூப் (அலை) அவர்களின் சரித்திரத்தை விளங்குகையில் நபி அய்யூப் (அலை) அவர்கள் நீண்ட நாள் நோய் பினியில் இருந்ததாக அறியமுடிகிறது. அப்படிப்பட்ட நோய் யாருக்கும், என்றைக்கும், வரவேக்கூடாது என்ற துஆக்களுடன் நாம் அனைவருக்கும் இருக்க வேண்டும்.
      மாறாக, நமது பிள்ளைக்கு நோய் பிடிக்கனும் என திருமண நாளில் துஆவாக முழங்குவது எப்படி சரியாக இருக்கும். மனமக்களாகிய நீங்கள், ஆதாரமில்லாத ஒரு பெண்ணுடனும், நோயுடனும் வாழ சம்மதிக்கின்றீரா?
      6. இறைவா! நபி முஹம்மது (ஸல்) அவர்களின் மனைவி கதீஜா, ஆயிஷா இவர்களைப் போல் வாழச்செய்வாயாக. (என வாழ்த்துகின்றார்கள்).
      விளக்கம்: நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்கு பன்னிரெண்டு மனைவியர்கள் இருந்தார்கள். 1) கதீஜா பின்த் குவைலித் (ரழி), 2) ஆயிஷா பின்த் அபூபக்கர் (ரழி), 3) ஸவ்தா (ரழி) 4) ஹஃப்ஸா பின்த் உமர் (ரழி), 5) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரழி), 6) ஸைனப் பின்த் குஸைமா (ரழி), 7) உம்மு  ஸலமா (ரழி), 8) ஜுவைரிய்யா  (ரழி), 9) உம்மு  ஹபீபா (ரழி), 10) ஸஃபிய்யா பின்த் ஹுயய் (ரழி), 11) மைமூனா (ரழி), 12) மாரியத்துல் கிப்திய்யா (ரழி),  ஆகியோர் நபி (ஸல்) அவர்களின் மனைவியர்கள் ஆவார்கள். ஆதார நூல்கள்: ஃபத்ஹுல் பாரீ & தபக்காத் இப்னு ஸஅத்.
      நபி முஹம்மது (ஸல்) அவர்கள் தனது துனைவியர் அனைவரையும் சரிசமமாக நடத்தி வந்துள்ளதை வரலாறு மூலம் நாம் அறிகின்றோம். அப்படி இருக்கையில், திருமண வாழ்த்து குத்பாவில், கதீஜா, ஆயிஷா இருவரை மட்டும் குறிப்பிட்டு விட்டு, மீதமுள்ள மனைவியரை சேர்க்காமலிருப்பது நபி முஹம்மது (ஸல்) அவர்களின் பன்புகளை சேதப்படுத்துவதாகும். மாறாக, மீதமுள்ள பத்து மனைவிமார்களை நாம் அங்கீகரிக்க வில்லையா? இறை விசுவாசிகளே! சிந்தியுங்கள்.
      7. இறைவா! அலி (ரழி) பாத்திமா (ரழி) இவர்களைப் போல் வாழச்செய்வாயாக. (என வாழ்த்துகின்றார்கள்).
      விளக்கம்: அலி-பாத்திமா (ரழி) அவர்கள் தங்களது இளமைக் காலத்தில் எவ்வளவு வறுமையாக வாழ்ந்தார்கள் என்று அவர்களுடைய சரித்திரத்தின் மூலமாக நாம் அறிகின்றோம். அலி-பாத்திமா (ரழி) தம்பதியர்கள் அவர்களது பிள்ளைகளை அதன் இளம் பிராயத்திலேயே இழந்தார்கள். இன்னும், தம்பதியர்களிடையே பல பிரச்சனைகள் வந்து அவ்விருவரும் மனவிலக்கின் விளிம்பு வரை சென்றுள்ளார்கள்.
      இப்படி வாழ்ந்த தம்பதியர் போல, இவ்வுலகில் யாரும் கஷ்டப் படக்கூடாது என்று நினைப்பதுதான் சரியானதாகும். நல்லடியார்கள் என்ற காரணத்தை வைத்து அவர்களைப் போல தமது பிள்ளையும் கஷ்டமாக வாழனும் என்று அறியாமையுடன் வாழ்த்துவது பெரிய கொடிய சிந்தனை. மணமக்களே அறியாமையைலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள் இறையடியார்களே! ஆழ்ந்து சிந்தியுங்கள்.
      8. ”அல்லாஹும்மா பாரிக் லஹுமா பிர்ரிபாயி வல் பனீன்” என்று தொடராக ஒரு துஆ செய்வார்கள். அதன் பொருள்: இறைவா! இத்தம்பதியர்களுக்கு ஆண் குழந்தையாகவே தருவாயாக. என்பதாகும்.
      விளக்கம்: அல்குர்ஆன் 42:49-50 “.. ...அல்லாஹ் தான் நாடுகின்ற வற்றைப் படைக்கின்றான்: தான் நாடுவோருக்குப் பெண் மக்களை வழங்குகின்றான்: தான் நாடுவோருக்குப் ஆண் மக்களை வழங்குகின்றான்: தான் நாடுவோருக்குப் ஆண் மக்களையும், பெண் மக்களையும் சேர்த்து வழங்குகின்றான். மேலும், தான் நாடுவோரை மலடுகளாகவும் ஆக்குகின்றான்… ...”
      ஆணையும், பெண்ணையும் இணைத்துத்தான் அல்லாஹ் பேசுகின்றான். இவர்கள் விருப்பப்படி ஆண் மக்கள் மட்டுமே இந்த பூமியில் பிறந்தால், மனித சமுதாயம் என்னவாக ஆகும். பல்கிப்பெறுகுமா? ஜனனம் அழியுமா? குறிப்பாக நம் முஸ்லீம் சமுதாயம் அழிந்து போய் விடுமல்லவா! எனவே இந்த வாழ்த்தும் நம் பிள்ளைக்கு மட்டுமல்லாமல், நம் சமுதாயத்திற்கு ஆபத்தை தரும் துஆவாகும். பெற்றோர்களே! பிள்ளைகளே உஷாராக இருங்கள். இணத்தை அழிக்க கேட்கும் துஆக்களிலிருந்து அல்லாஹ் நம் அனைவரையும் காத்தருள்வானாக.
      திருமண மஜ்லீசில் திருமண வாழ்த்தாக ஓதப்படும் குத்பாவிலிருந்து இந்த எட்டு உதாரணங்களை மட்டுமே விளக்கியுள்ளோம். ஓதப்படும் குத்பாவை முழுமையாக இங்கு விளக்கப் படவில்லை. சொர்ப்பமே விளக்கியுள்ளோம். இப்படி தாருமாறாக வாழ்த்து என்றும், துஆ என்றும் எதையோ கண்டுபிடித்து அவைகளை கடைபிடித்து இஸ்லாத்திற்கு புறம்பாக செய்து, நம் சமுதாயத்தினர் அனைவரையும் நரகத்திற்கு எரிக்கட்டையாக்க முயலுவதன் நோக்கமென்ன? அல்லாஹுவின் நல்லடியார்களே! விழித்துக் கொள்ளுங்கள்.
      மேலே கொடுக்கப்பட்ட வரிகள் ஒவ்வொன்றையும் சரியாக படித்து ஆராய்ந்து, அதன் பொருள்களை உள்ளத்தால் உணருங்கள். வாழ்க்கையில் சரியானதை கடைபிடியுங்கள். சில புலவர்களால் எழுதப்பட்ட உரைநடைக் கவிதைகளை தூக்கிப்பிடித்து ஆடாதீர்கள் இக்கவிகள் யாவும் வணக்கங்கள் ஆகாது. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கற்றுத்தந்தவைகள் மட்டுமே வணக்கங்களாகும்.
இந்த நபி மொழியை கேளுங்கள்.
      ”வார்த்தைகளில் சிறந்தது அல்லாஹுவின் வார்த்தை (திருக்குர்ஆன்).
      நடைமுறையில் சிறந்தது நபி முஹம்மது (ஸல்) அவர்களது நடைமுறை (சுன்னத்).
      காரியங்களில் கெட்டது மார்க்கத்தில் புதுமைகளை (பித்அத்) சேர்ப்பது.
      புதுமைகள் (பித்அத்) அனைத்தும் வழிகேடுகள்.
      வழிகேடுகள் அனைத்தும் நரகத்தில் கொண்டு போய் சேர்க்கும்.”      அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரழி).  நூல்: புகாரி.
      எனவே இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்ட திருமண குத்பா போன்ற உரைநடை கவிதைகளை ஆராதிக்காதீர்கள். இன்னும் அல்லாஹ் தனது திருமறையில் 5:3 வசனத்தில் அல்லாஹுவின் மார்க்கமாகிய இந்த இஸ்லாம் மார்க்கத்தை தான் முழுமையாக்கிய விஷயத்தை, “இன்றைய தினம் நாம் உங்களுக்கு உங்களுடைய மார்க்கத்தை முழுமையாக்கி வைத்து, என்னுடைய அருளையும் உங்கள் மீது முழுமையாக்கி வைத்துவிட்டோம்” என்று கூறிகின்றான். அப்படி முழுமை பெற்ற மார்க்கத்தில், நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்குப்பின் வந்தோர்களால் புனைக்கப்பட்ட புதுமையான உரைநடை கவிதையாக இருப்பினும், செய்யுள் கவிதையாக இருப்பினும் புதுக்கவிதையாக இருப்பினும் அவைகள் அனைத்தையும் இறைவிசுவாசிகளாகிய நாம் பித்அத் எனப் புறக்கணிப்போம். பித்அத்தை புறக்கனித்து நரக நெருப்பிலிருந்து நம்மை காத்துக் கொள்வோம். சுவனபதியில் நுழைய பேராசை கொள்வோம். இன்னும் அல்லாஹுவின் அருளை அதிகம் நாடுவோம்.
      எனவே அன்பு இறை விசுவாசிகளே! நீங்கள் திருமண ஒப்பந்த நிகழ்வுகளில் கலந்து கொள்பவராக இருப்பின், தீய முழக்கங்களை செவி கேட்டு அதற்கு அல்லாஹ்விடத்தில் மறுமையில் சாட்சியாளர் ஆகாமல், மணமக்களை வாழ்த்துவதற்கு துஆ செய்ய நபி முஹம்மது (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த துஆவை மணமக்கள் காது குளிர கூறுங்கள். ஒருபடி மேலாக தாய் மொழியிலும் சொல்லி மணமக்களை சந்தோஷப்படுத்துங்கள்இதுவே, உண்மையான வணக்க வழிபாடும், நபி வழியும் ஆகும்.
திருமண வாழ்த்து துஆ.
”பார(க்)கல்லாஹூ ல(க்)க வபார(க்)க அலைக்க வஜமஃஅ பைன(க்)குமா ஃபீ கைர்”.
      நாமெல்லாம் திருக்குர்ஆனையும் ஹதீஸுகளையும் பின்பற்றி உண்மை முஸ்லீம்களாக வாழ பயிற்சி செய்வோம். சுவனபதி வீட்டை சொந்தமாக்கிட அல்லாஹுவின் அருளை நாடி பல வணக்கங்களும், துஆக்களும் செய்வோமாக. ஆமின். அல்லாஹு அக்பர்.

மின்னஞ்சல் மூலமாக
AGM BASHA

10 கருத்துகள்:

  1. இங்கேயிருந்து http://www.labbaikudikadutntj.com/2013/05/blog-post_26.html காப்பி பண்ணா காப்பி பண்னுனத பொடுங்க
    அதையே கொஞ்சம் அப்படி இப்படி மாத்தி தான் பேருல் போட்டு இவரு பிலிம் காட்ராரு


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
      உங்களுக்கு என்னதான் பிரச்சனை.நல்லதை யார் செய்தாலும் ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மையை வளர்த்து கொள்ளுங்கள்.

      நீக்கு
  2. Intha karithinai 1980lil hazrath Iqbal madani thanathu
    bayaanil arivithullaarkal. Malls seithikalai ull vaangi Namathu imanai thidapadithi kollungal

    பதிலளிநீக்கு

  3. முதலில் உங்க வெப்சைட்டை மூடுங்க.நமது ஊரில் எல்லாம் ஒழுங்காதான் போய்க்கிட்டு இருக்கு,உங்க வெப்சைட்டை தவிர.

    பதிலளிநீக்கு
  4. பைத்தியங்கள் பலவகை அதில் இவர்களைப்போன்றவர்கள் ஒருவகை. இவர்களுக்கு அடுத்தவர்கள் என்று நினைத்து தன்மீதே சேற்றை பூசிக்கொள்கிறார்கள். ஒரு முஃமினுக்கு ஏற்படும் அவமானம் அது தன்னையும் சாறும் என்பதை ஏன் இந்த மடையர்களுக்கு புரியவில்லை. ஓ! மடையர்கள் எனபதினாலா?????????? (இந்த துஆ அவர்களை வாழ்த்த! வருத்த அல்ல) அவர்கள்(நபிமார்கள்)வாழ்ந்த சிறப்பான வாழ்கையை முதலில் தெரிந்து கொண்டு உங்கள் விளம்பரத்தை வெளிப்படுத்துங்கள். தங்களுடைய தாய் தந்தையை(ஆதம், ஹவ்வா) கேவலப்படுத்தி பேசும் உன்னுடைய வக்கிர புத்தியை செருப்பெடுத்தே அடிக்கனும்..........

    பதிலளிநீக்கு
  5. ASALAMU ALIKUM

    EACH ACT DEPEND UPON HIS NIYATH

    THE WISHERS WHAT THEIR NIYATH ALLAHS KNOWS

    ALL ARE MESSENGERS OF ALLAH

    AND ALLAH LOVES THEM MORE ,

    WISHERS INTENSION AS MESSENGERS OF ALLAH THEY HAVE TO SACRIFY AND

    GETTING ALLAH S HELP EVEN AFTER SIN .

    NABI AATHAM DID MISTAKE HE SEEK PARDEN AND ME SUCCEED THAT IS THE POINT TO NOTE . CHANGE YOUR GLASS THEN ONLY YOUR VISSION WILL BE CORRECT

    பதிலளிநீக்கு
  6. சகோதரர்களே! நபிமார்களுக்கு அப்படி ஒரு தியாக வாழ்க்கையை அல்லாஹ் அளித்தான். அதை யாரும் குறைசொல்வதற்கு அறுகதை கிடையாது. அதே நேரத்தில் ஒரு விஷயம், இது போன்ற துவாக்களை நபி(ஸல்) அவர்கள் எங்கும் ஓதியது கிடையாது. நபிமார்களோடு ஒப்பிட்டு அவர்களைப்போல நம் வாழ்க்கையும் அமைய வேண்டும் என்று பிரார்த்திப்பதே அபத்தமான ஒன்று. ஆகவே இது போன்ற துவாக்களுக்கு அக்கீகாரமில்லை மார்க்கத்தில் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

    பதிலளிநீக்கு

  7. சுந்தர நாட்டின்
    செல்வப் புதல்வன் தமீமுல் அன்சாரி....

    சுந்தர நாட்டின்
    செல்வப் புதல்வி.. பஸ்மிதா பேகம்....

    இரு புறாக்களையும்
    இறைவனால் இணைக்கப்பட்ட தருணமிது....

    ரோஜா பூ மாலைகள் போல்
    உங்கள் வாழ்வு மலரட்டும்...!

    மண மணக்கும் மல்லிகை போல்
    உங்கள் இல்லற வாழ்வு செழிக்கட்டும்..!

    தினம்தோறும் திகைப்படையா இன்பத்தை என்னாளும் பொன்னாளாக உணரட்டும்..!

    இரு உள்ளம் ஒரு உள்ளமாக மறு உலகத்திலும் உங்கள் ஒற்றுமை தொடரட்டும்...!

    கடலின் அலைகளைப் போல்
    என்னாலும் உங்கள் காதல் சத்தம்
    உற்றார் உறவினர்களின்
    காதுகளில் இடைவிடாமல் கேட்கட்டும்...!

    மழையும் காற்றுமாய்
    மேகத்தின் சாரலாய்
    வானத்தின் நட்சத்திரங்களாய்
    அம்புலி நிலவின் அழகுகலாய்
    வானவில்லின் வர்ணங்களாய்

    பூ மகனும்
    பூமகளும் புவியின் அங்கமாய்
    பூவுலகின் தங்கமாய் வாழ்ந்திட வாழ்த்துக்கள்....!

    பாரகல்லாஹு ல(க்)க வபாரக அலை(க்)க வஜமஅ பைன(க்)குமா ஃபீ கைர்

    *✍️........ தமீம்*















    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்துக்கும் சாபத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் அலையும் கூட்டம் ஒருவர் மணமக்களை நபிமார்களைப்போல் வாழுங்கள் என்று வழ்த்துகின்றார் என்றால் நபியாக வாழ்வது அல்ல நபி வாழ்ந்த வழியாக வாழ்வது தான் வாழ்த்து ஏன் நபிமார்களுக்கு நல்ல வாழ்க்கை மகிழ்வான வாழ்க்கை அவர்களுக்கு கிடைக்கவே கிடைத்திருக்காதா? கஷ்டங்கள் துயரங்கள் இன்பங்கள் இவற்றை எவ்வாறு சமாளிப்பது என்பதை விளக்க நபிமார்களின் வாழ்க்கையில் படிப்பினை இருக்கிறது என்று இறைவன் கூறவில்லையா? நபிமார்களைப்போல் வாழ்க என்று இறைவனிடம் துஆ கேட்டால் நபிமார்கள் பட்ட கஷ்டத்தை தான் இந்த மணமக்களுக்கு கொடுப்பான் என்று இறைவன் மீதே அவநம்பிக்கை கோள்கிறீர்களா?இறைவன் நபிமார்கள் வாழ்ந்த நன்மைகள் நல்வாழ்க்கை இறைவன் மீது நபிமார்கள் காட்டிய ஈமானின் உருதி இவைகளை இந்த மணமக்களுக்கு தருவான் என்று உறுதியான ஈமான் நமக்கு இல்லையா? பூமியில் குழப்பம் செய்வதுதான் நம் வேளையா? நாம் மணமக்களுக்கு துஆ செய்கிறோமா? சாபம்மிடுகிறோமா? இது எல்லாம் இறைவனுக்கு தெரியாது என்ற எண்ணமா?وَوَهَبْنَا لَهٗۤ اِسْحٰقَ وَيَعْقُوْبَ‌ كُلًّا هَدَيْنَا ‌ وَنُوْحًا هَدَيْنَا مِنْ قَبْلُ‌ وَمِنْ ذُرِّيَّتِهٖ دَاوٗدَ وَسُلَيْمٰنَ وَاَيُّوْبَ وَيُوْسُفَ وَمُوْسٰى وَ هٰرُوْنَ‌ وَكَذٰلِكَ نَجْزِى الْمُحْسِنِيْنَۙ‏
      நாம் அவருக்கு இஸ்ஹாக்கையும், யஃகூபையும் (சந்ததியாகக்) கொடுத்தருளினோம், இவர்கள் அனைவரையும் நாம் நேர்வழியில் செலுத்தினோம்; இதற்கு முன்னர் நாம் நூஹையும் அவருடைய சந்ததியிலிருந்து தாவூது, ஸுலைமான், அய்யூப், யூஸுஃப், மூஸா, ஹாரூன் ஆகியோரையும் நேர்வழியில் செலுத்தினோம்; இப்படியே நாம் நன்மை புரிவோருக்கு நற்கூலி வழங்குகிறோம்.
      (அல்குர்ஆன் : 6:84)

      நீக்கு
  8. உங்கள் பதிவை படிக்கும் போது உங்களுக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு சிந்தனை என்று விளங்கவில்லை

    இப்படி துஆ செய்வது சரியா அல்லது தவறா என்பதை அழகான முறையில் சொல்லமுடியும்

    இந்த அறிவிப்புகள் வரும் ஹதீஸ்கள் ஸஹீஹான ஹதீஸ் பலவீனமான ஹதீஸ் என்று சொல்லியிருக்கலாம்

    ஆனால் நீங்கள் சொல்லும் விளக்கம் தான் ஈமானின் கேள்வி குறியாக இருக்கிறது

    அந்த நபிமார்களை போன்று எவ்வளவு பெரிய சோதனைகள் வந்தாலும் அதை அல்லாஹ்வின் உதவியால் வென்று காட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் துஆ செய்திருக்கலாம்

    நீங்கள் அதற்கு மாற்றமான கருத்துக்களை சொல்கிறீர்கள்.


    தயவுசெய்து உங்கள் எண்ணங்களை சரிசெய்து கொள்ளுங்கள்.

    பதிலளிநீக்கு