நமதூரில்
தீ விபத்து
நமதூரில்
நேற்று 14.05.2013 மாலை சுமார்
5 மணியளவில் அரங்கூர்
செல்லும் பாதையோரத்தில் வைக்கப்பட்டிருந்த வைக்கோல் தீடீரென்று தீ பற்றிக்கொண்டது.
இதன்
காரணமாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் முதல்கட்டமாக தண்ணீர் ஊற்றி
அனைக்க
முயன்றும், தீ மள மள வென்று வேகமாக பரவியது.
இதனை
அறிந்த நமதூர் இளைஞர்கள் சிலர் களத்தில் இறங்கி தீயை அனைக்க அரும்பாடுபட்டார்கள். இதற்கிடையில்
தீயை கட்டுக்குள் கெண்டுவர முடியததால் தீயனைக்கும் படைக்கு உடனே தெடர்புகொள்ளப்பட்டது.
தீயனைக்கும்
படை உடனே விரைந்து வந்து தங்கள் பணிகளை செவ்வனே செய்து தீயை கட்டுக்குள் கொண்டு
வந்தனர்.
நேரடியாக
அங்குள்ள மக்களிடம் கேட்டதற்கு
1 .
முதல்ல லேசாதான் பத்திக்கிட்டு இருந்துச்சு வெயில்காலமானதால தான் இவ்வளவு கஸ்டம்.
2.
எவ்வளவுதான் தண்ணீர் ஊத்துனாலும் அடங்குள, நெருப்பு அடங்கவில்லை! பிறகு JCB மூலம்
வைக்கோளை பிறித்து தண்ணீ்ர் ஊத்துனதும் தான் கட்டுக்குள் கொண்டு வர முடிந்தது.
3.
சரியன பாதுகாப்பு இல்லாததுதான் காரணம், இது யாரோ செய்த வேளை.
பிறகு
இதைப்பற்றி தீயணைப்பு படையினர் அங்கு உள்ளவர்களை விபத்துக்கான காரணத்தை விசாரித்து
FIR எழுதி சென்றனர்.
இதனால்
அந்த இடம் ஒரே புகைமூட்டமாக காணப்பட்டது. இதன் விளைவாக அங்கு ஒருசிலருக்கு மூச்சு
தினரலும் ஏற்பட்டது.
இந்த
விபத்தில் அங்கு கட்டப்பட்டிருந்த மாடு மற்றும் எந்த உயிரினங்களுக்கு எந்த ஒரு
பாதிப்பும் இல்லாமல் பாதுகாத்த அல்லாஹ்விற்கே புகழ் அனைத்தும்.
களத்தொகுப்பு
நமது நிருபர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக