பெரம்பலூர், : பான் மசாலா, குட்கா தயாரிக்கவோ, இருப்பு வைத்திருக்கவோ, விற்பனை செய்யவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்திற்குள் அழித்து விட அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெரம்பலூர் கலெக்டர் தரேஸ்அஹமது எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
தமிழக அரசு உத்தரவுப்படி கடந்த 23ம் தேதி முதல், தமிழகத்தில் பொதுமக்களின் நலன் கருதி பான்மசாலா, குட்கா போன் றவை தயாரிப்பு, இருப்பு மற்றும் விற்பனை ஆகியவை உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த உத்தரவுப்படி வியாபாரிகள் அனைவரும் ஒருமாத காலத்திற்குள், அவர்களிடம் இருப்பில் உள்ள அனைத்து பொருட்களையும் அழித்துவிட அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கென மாவட்ட அளவிலான கமிட்டி, மாவ ட்ட கலெக்டர் தலைமையில், எஸ்பி, மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட சுகா தார பணிகள் துணை இயக்குநர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட சமூக நலத்துறை அலுவலர், நகராட்சி ஆணையர், வணிகவரி அலுவலர், வட்டார போக்குவரத்து துறை அலுவலர் மற்றும் நியமன அலுவலர் கொண்ட குழு அமைத்து கண்காணிக்கப்பட உள்ளது.உத்தரவை மீறும் நபர்களிடம் இருப்பு வைத்துள்ள பொருட்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படுவதுடன், கைப்பற்றப்பட்ட பொருட்கள் அழிக்கப்படுவதோடு, சம்மந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு கலெக்டர் தரேஸ்அஹமது தெரிவித்துள்ளார்.
நன்றி தினகரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக