Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 7 மே, 2013

கட்டாய திருமண பதிவுச் சட்டம்! முஸ்லிம்களின் கோரிக்கை பரிசீலிக்கப்படும்! அமைச்சர் அறிவிப்பு!


கட்டாய திருமணப் பதிவுச் சட்டத்தில் முஸ்லிம்களின் கோரிக்கையை ஏற்று திருத்தம் கொண்டு வருவது குறித்து அரசு பரிசீலிக்கும் என வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.வி. ரமணா தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற வணிகவரி மற்றும் பதிவுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது பேசிய மனிதநேய மக்கள்
கட்சியின் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா, “கடந்த திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட கட்டாய திருமணப் பதிவுச் சட்டத்தினால் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஹிந்து கோயில்களில் நடக்கும் திருமணங்களை, கோயில் நிர்வாகம் வழங்கும் சான்றிதழைக் கொண்டு பதிவு செய்ய முடிகிறது. அதுபோல தமிழக அரசின் தலைமை ஹாஜியால் நியமனம் செய்யப்பட்டவர்கள் மூலம் நடக்கும் திருமணங்களையும் பதிவு செய்து கொள்ள வேண்டும். அதற்கேற்ப கட்டாய திருமணப் பதிவுச் சட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்றார்.
இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் பி.வி. ரமணா; 2009-ஆம் ஆண்டு தமிழ்நாடு திருமணங்கள் பதிவுச் சட்டம் 24-11-2009 முதல் அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு தமிழகத்தில் நடைபெறும் அனைத்து திருமணங்களையும் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். திருமணங்களைப் பதிவு செய்ய ஆணுக்கு 21 வயதும், பெண்ணுக்கு 18 வயதும் நிறைவடைந்து இருக்க வேண்டும். அதற்கான அங்கீகரிக்கப்பட்ட வயது சான்றிதழ் அளித்தால் மட்டுமே திருமணங்களை பதிவு செய்ய முடியும். இந்த கட்டாய திருமணப் பதிவுச் சட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று முஸ்லிம் சமுதாயத்தினரிடம் இருந்து கோரிக்கை வந்துள்ளது. இது குறித்து பரிசீலித்து அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக