வீழ்ந்து விடாதே!
விடியல் கிட்டும் சோர்வு கொள்ளாதே!
விடியல் கிட்டும் சோர்வு கொள்ளாதே!
எழுந்து நின்றிடு!
ஏணிப்படிகள் காத்திருக்கின்றன தாழ்வு கொள்ளாதே !
ஏணிப்படிகள் காத்திருக்கின்றன தாழ்வு கொள்ளாதே !
ஒரு நாள் வரும்
உன் முகவரி உலகறிய
அதற்க்காவேனும் தோழா
ஒரு நிமிடம் !
உன் முகவரி உலகறிய
அதற்க்காவேனும் தோழா
ஒரு நிமிடம் !
ஒரு நிமிடம் முயன்று பார்
அது மாறும் ஒவ்வொரு நிமிடமாய்!
அது மாறும் ஒவ்வொரு நிமிடமாய்!
உன்னை வாசிக்க
ஓர் உலகம் உண்டு
அதற்க்காவே
நீ சுவாசிக்க வேண்டும் சோதனைகளை
முயற்சிகள் பல கொண்டு !
ஓர் உலகம் உண்டு
அதற்க்காவே
நீ சுவாசிக்க வேண்டும் சோதனைகளை
முயற்சிகள் பல கொண்டு !
வெற்றிகள் உண்டு உன்னில்
வெற்றுக் காகிதமாய் !
அதை நிரப்பிடு தோழனே
தன்னம்பிக்கை எனும் பேனாவில்
முயற்சி எனும் மை ஊற்றி !
வெற்றுக் காகிதமாய் !
அதை நிரப்பிடு தோழனே
தன்னம்பிக்கை எனும் பேனாவில்
முயற்சி எனும் மை ஊற்றி !
இலட்சியம் கைகொள்ள ஆவலுண்டு
சாதனையை வென்றெடுக்க முயற்சிகளுண்டு
பின் ஏன் இன்னும் அச்சம்
அதில் முந்தியவர்களை கண்டு !
சாதனையை வென்றெடுக்க முயற்சிகளுண்டு
பின் ஏன் இன்னும் அச்சம்
அதில் முந்தியவர்களை கண்டு !
அவ மதிப்புகளால்
மனத் தாழ்வுக்குள் அகப்படாதே
நீ தழைத்தோங்க
உன்னை தாங்கப் போகும்
ஆணி வேர்கள் அவை !
மனத் தாழ்வுக்குள் அகப்படாதே
நீ தழைத்தோங்க
உன்னை தாங்கப் போகும்
ஆணி வேர்கள் அவை !
பாறைகள் பல கடந்து
இடறுகள் பல தாண்டி
இரவு பகல் பற்பல கழித்து
பெரும் நெடிய பயணம் மேற்க்கொண்டே
நதிகள் வெல்லுகின்றன
கடலாய் மாறி !
இடறுகள் பல தாண்டி
இரவு பகல் பற்பல கழித்து
பெரும் நெடிய பயணம் மேற்க்கொண்டே
நதிகள் வெல்லுகின்றன
கடலாய் மாறி !
சிற்சிறு கற்களும்
பொடி பொடி மண் துகள்களும்
மெல்ல மெல்ல சேர்புகள் கொண்டே
உயர்ந்து நிற்கின்றன மலைத் தொடர்களாய் !
பொடி பொடி மண் துகள்களும்
மெல்ல மெல்ல சேர்புகள் கொண்டே
உயர்ந்து நிற்கின்றன மலைத் தொடர்களாய் !
செய்வதற்க்கு ஏதுமில்லையென
வெறுமை ஏமாப்பு கொள்ளாதே !
ஏதேனும் செய்திடு
வெற்றாய் கழிந்திடும் காலத்திற்க்கு
விருந்தளித்திடு
அது உனக்கு பரிசளித்திடும் !
வெறுமை ஏமாப்பு கொள்ளாதே !
ஏதேனும் செய்திடு
வெற்றாய் கழிந்திடும் காலத்திற்க்கு
விருந்தளித்திடு
அது உனக்கு பரிசளித்திடும் !
பெரும் புத்தகத்திற்க்கு தொடக்கம்
சிறு பொட்டு மை துளிகளே !
பெரும் சாதனைகளின் தொடக்கம்
தடுமாறி விழுவதிலேயே !
சிறு பொட்டு மை துளிகளே !
பெரும் சாதனைகளின் தொடக்கம்
தடுமாறி விழுவதிலேயே !
தடுமாறி தடுமாறி விழுந்திடு
ஆனால் தடம் மாறி மட்டும் எழுந்திடாதே !
ஆனால் தடம் மாறி மட்டும் எழுந்திடாதே !
வழிகள் இல்லையென கவலைகள்
களைந்திடு
நீ சென்றால் அதுவே மாறும்
பாதைகளாய் !
களைந்திடு
நீ சென்றால் அதுவே மாறும்
பாதைகளாய் !
தோழா !
ஒரு நிமிடம் முயன்று பார்
அது மாறும் ஒவ்வொரு நிமிடமாய் !
ஒவ்வொரு நிமிடமும் உருமாறும்
நாளைய சாதனைக் களமாய் !
ஒரு நிமிடம் முயன்று பார்
அது மாறும் ஒவ்வொரு நிமிடமாய் !
ஒவ்வொரு நிமிடமும் உருமாறும்
நாளைய சாதனைக் களமாய் !
ஷஹான் நூர்
கீரனூர்
கீரனூர்
நல்ல கருதுள்ள கவிதை
பதிலளிநீக்குஅஸ்ஸலாமு அலைக்கும்
பதிலளிநீக்குஅன்புள்ள சைட் நடத்துனருக்கு லப்பைகுடிகா ட்டின் மக்களின் நலன் கருதி அன்பான வேண்டுகோள் என்ன என்றால்
1 நீங்கள் உண்மையில் லப்பைகுடிகாடுதானா ?
2 நீங்கள் உண்மையில் முஸ்லிம் தானா ?
3 உங்கள் வீட்டின் பெயரை தகப்பனார் பெயரை தெளிவாக போடவும் ,
தயவு செய்து தெளிவான பதில்
இப்படிக்கு
பொது நலன் வேண்டி
அக்பர் பாஷா
துபாய்
இந்த LBK NEWS-ஐ நடத்துபவர்கள், ஊர் ஒற்றுமையில் நாட்டமுள்ள நமதூர் LBK GHSS-ல் படித்த,இஸ்லாமிய மாணவர் மன்றத்தில் பணியாற்றிய மற்றும் முன்னாள் TMMK,PFI(விடியல் வெள்ளி) உறுப்பினர்கள் என்பதும் தற்போது மருத்துவ(LAB,MEDICAL) துறையோடு (ஒரு சில நிருபர்கள்)சம்பந்தம் உள்ளவர்கள் என யூகிக்க முடிகிறது.
பதிலளிநீக்குதங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்.