Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வெள்ளி, 3 மே, 2013

பேபி பவுடரில் புற்றநோய் ஏற்படுத்தும் பொருள்: ஜான்சன் அன்ட் ஜான்சன் உரிமம் சஸ்பெண்ட்

மும்பை: பிரபல ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனத்தின் முலுந்த் தொழிற்சாலையில் அழகுசாதன பொருட்களை தயார் செய்யும் உரிமத்தை உணவு மற்றும் மருந்து நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து வைத்துள்ளது. ஜான்சன் அன்ட் ஜான்சன் குழந்தைகள் பவுடரின் 15 பேட்ச்களில் நச்சுத்தன்மை
வாய்ந்த் பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 2007ம் ஆண்டு ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனம் மீது வழக்கு தொடரப்பட்டது. குழந்தைகளுக்கு பயன்படுத்தப்படும் பவுடரை நச்சுத்தன்மை வாய்ந்த எதிலீன் ஆக்சடை கொண்டு ஸ்டெரிலைஸ் செய்யப்படுவதால் பவுடரில் நச்சுத்தன்மை கொண்ட பொருட்கள் இருந்துள்ளன. இதையடுத்து மும்பை முலுந்தில் உள்ள ஜான்சன் அன்ட் ஜான்சன் ஆலையில் அழகுசாதன பொருட்கள் தயாரிக்கும் உரிமத்தை உணவு மற்றும் மருந்து நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து வைத்துள்ளது. இந்த உத்தரவு வரும் ஜூன் மாதம் 24ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த விவகாரம் குறித்து உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் துணை கமிஷனர் கம்லேஷ் பி. ஷிண்டே கூறுகையில், புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய எதிலீன் ஆக்சைட் ஜான்சன் அன்ட் ஜான்சன் பேபி பவுடரில் அதிக அளவில் இருந்தது. அதனால் தான் உரிமத்தை சஸ்பெண்ட் செய்தோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி ஒன்இந்தியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக