Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 9 மே, 2013

தீன்யாத் வகுப்பு

தீன்யாத் வகுப்பு

 நமதூரில் கடந்த சில நாட்களாக பள்ளிவாசல்களில் கோடைகால சிறப்பு தீன்யாத் வகுப்பு நடைபெற்று வருகிறது. (மாஷா அல்லாஹ்)

கோடைவிடுமுறைகளை பயனுள்ளதாக கழிக்க நமது ஜமாத்துக்கள் மார்க்க
சிந்தனையோடு வளர இப்படி முயற்சி எடுத்து வருவது, இம்மை மறுமை வாழ்ககைக்கு பக்கபலமாக உருவாகும் என்பது நல்ல சிந்தனையாலர்கள் யாரும் மருக்க முடியாது.

நல்ல சிந்தனைகளை விதைத்தால் பிறகு நன்மையே நாம் அருவடை செய்யமுடியும் என்பதற்கான முயற்சியில் இமாம்கள் கலம் இரங்கி இருப்பது பார்த்தால், அன்று சுதந்திரத்திற்காக வித்திட்ட இமாம்கள்தான் இவர்களின் மூலம் தெரிகிறது.

இதன் பங்களிப்பு இமாம்களோடு நின்றுவிடாமல், பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை ஊக்குவிக்கும் விதமாக தங்கள் பங்களிப்பை காட்ட வேண்டும் என்பதுதான் நம்முடை ஆவல்.
இப்படிப்பட்ட பணிகள் மேன்மேலும் வலர இறைவனிடம் துஆ செய்வோம்.
மின்னஞ்சல் புகைப்பட உதவி
முஹம்மது யுனுஸ்

நமது நிருபர்.



1 கருத்து: