Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2014

சுரங்கத்தில் சிக்கிய 23 ஹமாஸ் வீரர்கள்: பேரீத்தம் பழத்தை உணவாக கொண்டு 2 வாரங்கள் கழித்து மீண்டு வந்த அதிசயம்!

இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக 25 மீட்டர் ஆழ சுரங்கத்தில் சிக்கிக்கொண்ட ஹமாஸின் 23 இராணுவ வீரர்கள் கொண்ட குழு, இரண்டு வாரங்கள் கழித்து உயிருடன் வெளியே வந்து ஆச்சரியத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் இந்த சம்பவம் பற்றி ஹமாஸின் ராணுவப் பிரிவான இஸ்ஸத்தீன் அல் கஸ்ஸாம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

காஸாவில் தரைவழி தாக்குதலை தொடர்ந்த இஸ்ரேலுக்கு பெரும் நெருக்கடியை தந்தது ஹமாஸின் ராணுவப் பிரிவான இஸ்ஸத்தீன் அல் கஸ்ஸாமின் சுரங்க வழி வீரர்கள் ஆவர். இவர்களின் கொரில்லா தாக்குதல் காரணமாகவும், தாக்குதலால் ஏற்ப்பட்ட பெரும் இழப்பின் காரணமாகவும் இஸ்ரேல் தனது தரைவழி தாக்குதல் திட்டத்தை கைவிட்டு வீரர்களை திரும்பப் பெற்றது இஸ்ரேல்.
காஸா தாக்குதலைன் போது சுரங்கங்களை அழிக்கும் தாக்குதல் திட்டத்தை இஸ்ரேல் மேற்க்கொண்டது. இந்த தாக்குதலில் தான் கராரா மாகாணத்தில் சுரங்கம் ஒன்றில் இருந்த கஸ்ஸாம் பிரிகேட்ஸின் வீரர்கள் 29 பேர் பூமிக்கு அடியில் சிக்கிக்கொண்டனர்.
அல்கராரா பகுதியில் நுழைந்த இஸ்ரேல் ராணுவம், சுரங்கங்கள் மீது ஆயிரத்திற்கும் அதிகமான ஏவுகணைகளை ஏவி தாக்குதலை நடத்தியது. இதனைத் தொடர்ந்து 27 போராளிகள் மறைந்திருந்த 25 மீட்டர் ஆழம் கொண்ட சுரங்கத்தின் நுழைவு வாயில் மூடிவிட்டது. ஜூலை 17-ஆம் தேதி இச்சம்பவம் நடந்தது. இதனைத் தொடர்ந்து காஸாவில் உள்ள கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.
தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டவுடன், சுரங்கங்கங்களில் தங்கியிருந்த 27 போராளிகளும் கொல்லப்படவோ, காணாமல் போகவோ செய்திருக்கலாம் என்று கருதப்பட்டது. போதிய உணவும், குடிநீரும், காற்றும் இல்லாமல் இரண்டு வாரத்திற்கும் மேலாக சுரங்கத்தில் போராளிகள் உயிரோடு இருப்பார்கள் என்று யாரும் கருதவில்லை.
தற்காலிக போர் நிறுத்தம் அமலுக்கு வந்தவுடன் மீட்பு ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை சுரங்கத்தின் நுழைவு வாயிலை தோண்டினர். அப்பொழுது 23 போராளிகள் சுரங்கத்திலிருந்து வெளியே வந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தினர். அவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு பெரிய பாதிப்பு ஏதுமில்லை.
தாங்கள் கைவசம் வைத்திருந்த பேரீத்தம்பழத்தை சாப்பிட்டு இத்தனை தினங்களையும் கழித்ததாகவும், சுரங்கத்தின் உள்ளே கண்ட சிறிய நீரூற்று குடிக்க உதவியதாகவும் அவர்கள் தெரிவித்தனர். ஒவ்வொருவரும் ஒரு நாள் ஒரு பேரீத்தம் பழம் வீதம் சாப்பிட்டுள்ளனர்.
மீதமுள்ள 6 பேரில் மூவர் இஸ்ரேல் ராணுவ வீரர்களுக்கு எதிராக பெரும் சேதம் ஏற்படும் வகையில் தாக்குதலை நடத்தியபோது மரணமடைந்துவிட்டனராம். 3 பேர் காணாமல் போய்விட்டனராம்.
இஸ்ரேல் தாக்குதலை துவக்கிய வேளையில் கஸ்ஸாம் பிரிகேட்ஸின் இந்த வீரர்கள் சுரங்கம் வழியாக போர்க்களத்திற்கு சென்று இஸ்ரேல் வீரர்களை திக்குமுக்காடச் செய்யும் தாக்குதல்களில் ஈடுபட்டிருந்தனராம். கொரில்லா தாக்குதல்கள் மூலம் எதிரிகளை அச்சமடையச் செய்து அற்பணிப்பு செய்வதே இவர்களின் முக்கிய பணியாம்.
கஸ்ஸாம் பிரிகேட்ஸின் கீழ் இயங்கும் சுரங்க யூனிட் முன்பே யாரும் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு ஏராளமான ரகசிய சுரங்கங்களை பூமிக்கு அடியில் அமைத்திருந்தது. இஸ்ரேல் தரைப்போரை துவக்கும் முன்பே பல சுரங்கங்களிலும் ஹமாஸ் வீரர்கள் தங்கியிருந்தனர். இஸ்ரேலுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் கடுமையான பதிலடி தாக்குதலை நடத்தி ஏராளமான இஸ்ரேலிய படைவீரர்களை கொலைச் செய்தவர்கள் இந்த சுரங்க வீரர்கள் ஆவர்.
சுரங்கங்களில் இருந்து திடீரென வெளியில் தோன்றி இஸ்ரேல் ராணுவத்தின் டாங்குகளை அழிப்பதிலும் இவர்கள் வெற்றிப் பெற்றனர். சுரங்க வீரர்களின் ஒவ்வொரு நகர்வும், கஸ்ஸாம் பிரிகேட்ஸின் காஸா கமாண்டிங் ஆபரேசன் அறையில் இருந்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக