Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 11 ஆகஸ்ட், 2014

துருக்கி அதிபர் தேர்தல் : எர்துகான் அபார வெற்றி!

துருக்கியில் முதன்முறையாக நேரடியாக நடைபெற்ற அதிபர் தேர்தலில் தற்போதைய பிரதமரான ரஜப் தய்யிப் எர்துகான் அபார வெற்றியை ஈட்டியுள்ளார்.அவர் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளார்.10 ஆண்டுகளாக பிரதமர் பதவியில் அமர்ந்திருக்கும் எர்துகான், இனி அதிபராக 5 ஆண்டுகள் தொடருவார். 
துருக்கியில் நேற்று நடைபெற்ற
முதல் அதிபர் தேர்தலில் பாதி வாக்குகளுக்கு மேல் எண்ணப்பட்ட நிலையில் தனக்கு அடுத்த வேட்பாளரை விட 13 புள்ளிகள் அதிகம் பெற்றும், எண்ணப்பட்ட வாக்குகளில் 52 சதவிகிதத்தினைப் பெற்றவருமான எர்டோகன் வெற்றி பெற்றுள்ளதாக நீதித்துறை அமைச்சர் பெகிர் போஸ்டாக் தனது இணையதள செய்தியில் குறிப்பிட்டுள்ளார். 
தீவிர மதச்சார்பற்ற கொள்கையை கொண்ட  முஸ்தபா கமால் அத்தாதுர்க்கால் கடந்த 1923ஆம் ஆண்டில் மதச்சார்பற்ற குடியரசாக நிறுவப்பட்ட துருக்கி, ஐரோப்பாவின் நோயாளி என்று அழைக்கப்பட்டது. இஸ்லாம் பின்னணி கொண்ட அரசுகள் பின்னர் ஆட்சிக்கு வந்தபோது அவை மதச்சார்பற்ற சிந்தனைக்கொண்ட ராணுவத்தினரால் கவிழ்க்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக சமயோஜித திறனுடனும், இஸ்லாத்தை பின்னணியாக கொண்டும் பிரதமர் பதவியை வகிக்கும் எர்துகானின் ஆட்சியில் துருக்கி பிராந்தியத்தில் ஒரு பொருளாதார சக்தியாக வளர்ந்துள்ளது. எர்துகானின் வெற்றி அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் என்பது உறுதி. 
நன்றி தூது ஆன்லைன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக