Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 17 ஆகஸ்ட், 2014

நம் குழந்தைகளை ஜங்க் புட், ப்ரைலர் சிக்கனிலிருந்து காப்பாற்றுங்கள்!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்….
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹூ 
துரித உணவுகளை தடை செய்ய பரிந்துரைக்கிறது சி.எஸ்.இ. (CSE)
இந்தியாவில் முன் எப்போதும் இல்லாத வகையில் குழந்தைகள் மரணமும், நீரிழிவு நோய்புற்று நோய்,இதய நோய்களும் அதிகரித்திருப்பது தெரியுமா?
சமீபத்தில் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் (Centre for Science and Environment) வெளியிட்டுள்ள 48பக்க ஆய்வு முடிவுகள் அத்தனையும் மிகமிக அதிர்ச்சி ரகம். எல்லாவற்றுக்கு காரணமாக விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுவது துரித வகை உணவுகளைத்தான். தொடர்ந்து நாடு முழுவதும் துரித வகை உணவுகளை (Junk Foods)  தடை செய்து குழந்தைகளை காப்பாற்ற வேண்டும் என்று அந்த மையம் மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பரில் துரித உணவுகளை உண்பதால் ஏற்படும் பாதிப்புகளை ஆய்வு செய்ய குழு அமைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் சுனிதா நரேன் மற்றும் சந்திர பூஷன் ஆகியோர் தலைமையிலான குழு இதுதொடர்பான விரிவான ஆய்வுகளை மேற்கொண்டது. அந்த ஆய்வில் இருந்து…
துரித உணவு என்றால் என்ன? (JUNK FOOD)
புரதம்வைட்டமின்கனிமச் சத்துக்கள் மிகக் குறைந்த அளவு அல்லது இல்லவே இல்லாத – மிகுந்த உப்பும்கொழுப்பும் கொண்ட உணவுகள் துரித உணவுகள் என்று வரையறுத்துள்ளது தேசிய சத்துணவு கழகம் (National Institute of Nutrition).
உதாரணமாக பிஸ்ஸா, பர்கர், சிக்கன் ஃபிறை, பிரெஞ்சு ஃபிரை, கே எப் சி, மக்டோனல்ட்ஸ் (PIZZA, KFC, McDONALDS, BROILER FRIED CHICKEN, BURGER, FRENCH FRY, PEPSI, COCA COLA)
இந்தியாவில் அதிகரிக்கும் இறப்பு சதவீதம்
துரித உணவுகளை உண்பதால் நீரிழிவுஉயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்கள் ஏற்படுகின்றன.
இந்தியாவில் 1990-ம் ஆண்டில் மேற்கண்ட நோய்களால் ஏற்படும் இறப்பு 29 சதவீதமாக இருந்தது. இது 2008-ம் ஆண்டு 53 சதவீதமாக உயர்ந்தது. 2020-ம் ஆண்டு இது 57 சதவீதமாக உயரும்.
மேலும் இந்தியாவில் இதய நோய்களால் ஆண்டுக்கு 35 சதவீதம் பேர் (35 – 64 வயதுக்குட்பட்டோர்) இறக்கின்றனர். தவிரவளர் இளம் குழந்தைகளின் மரணம்சிறு வயதிலேயே பூப்பெய்தல்தலை பெருத்தல்உடல் எடை அபரிதமாக அதிகரித்தல்மூளை வளர்ச்சி கோளாறுகள் ஆகியவை கடந்த 3ஆண்டுகளில் 28 சதவீதம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
உலகளாவிய நீரிழிவு நோய் கழகம் (International Diabetes Federation)  விடுத்துள்ள அறிக்கையில் தற்போது 40.9மில்லியனாக இருக்கும் இந்திய நீரிழிவு நோயாளிகள் எண்ணிக்கை வரும் 2025-ம் ஆண்டு 69.9 மில்லியனாக உயரும் என்று குறிப்பிட்டுள்ளது.
கடந்த 2013-ல் உலகளாவிய மருத்துவ ஆய்வு இதழான Epidemiology சென்னையில் இருக்கும் 400பள்ளிகளில் குழந்தைகளிடம் ஓர் ஆய்வை மேற்கொண்டது. இதில் 21.5 சதவீதம் பேருக்குகுறிப்பாக பெரும்பாலும் உடல் எடை அதிகம் கொண்ட குழந்தைகளுக்கு உயர் ரத்த அழுத்தம் இருப்பது தெரிந்தது.
உலகளாவிய அளவில் உணவுக்காக பயன்படுத்தும் உப்பின் அளவில் மூன்று சதவீதத்தை குறைத்தாலே50 சதவீதம் உயர் ரத்த அழுத்தமும், 22 சதவீதம் பக்கவாதமும், 16 சதவீதம் இதய நோய்களும் குறையும் என்கிறது உலக இதயக் கழகம் (World Heart Federation).  
ஆனால்,  துரித உணவுகளில் உப்பும் இனிப்பும் 50 சதவீதம் கூடுதலாக இருக்கின்றன. கூடவேசாயமும்,ரசாயனமும்.
அப்பாவிகளின் தேசமா இந்தியா?
துரித வகை உணவு விற்பனையில் உலகிலேயே அதிக அளவு கோலோச்சியது அமெரிக்காதான். அங்கு கடந்த 2010-ம் ஆண்டு இயற்றப்பட்ட சுகாதாரம் மற்றும் பசிக்கொடுமையிலிருந்து விடுபட்ட குழந்தைகளுக்கான சட்டம் கடந்த ஜூலை மாதம் நடைமுறைக்கு வந்துள்ளது. போதாக்குறைக்கு மிச்சேல் ஒபாமா துரித உணவுகளுக்கு எதிராக தீவிர பிரச்சாரம் செய்கிறார். இதனால் அங்கு துரித வகை உணவு வியாபாரம் மொத்தமாக படுத்து விட்டது. இவை தவிரசமீபத்திய ஆண்டுகளில் சுமார் 20-க்கும் மேற்பட்ட நாடுகள் பல்வேறு வகைகளில் துரித வகை உணவுகளை தடை செய்துள்ளன. அப்புறம் என்னஇருக்கவே இருக்கிறது இந்தியா. அப்பாவிகளின் தேசம். அணுவில் ஆரம்பித்து அத்தனை கழிவுகளையும் இங்கு வந்து கொட்டலாம். 2015-16-ம் ஆண்டு களில் இந்தியாவில் துரித வகை உணவுத் தொழில் தற்போது இருப்பதைவிட ஒன்றரை மடங்கு வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பரிந்துரைக்கும் விதிமுறைகள்
இந்த நிலையில் கடுமையான விதிமுறைகளை வகுத்து அதனை சட்டமாக்க வேண்டும் என்று எச்சரிக்கை மணி அடித்துள்ளது அறிவியல் மற்றும் சுற்றுச் சூழல் மையம். அதன் பரிந்துரைகள்:
கல்வி நிறுவனங்கள் மற்றும் அதன் 500 மீட்டர் தொலைவுக்குள் துரித வகை உணவு விற்பனை செய்யக் கூடாது.
*தொலைக்காட்சிசமூக வலைத்தளங்களில் வார நாட்களில் மாலை மணி முதல் இரவு 10 மணி வரையும்வார இறுதி மற்றும் விடுமுறை நாட்களில் காலை மணி முதல் இரவு 10 வரையும் துரித உணவு வகை விளம்பரங்களை தடை செய்ய வேண்டும்.
மேற்கண்ட விளம்பரங்களில் பிரபலங்கள் நடிக்கவும்துரித உணவு வகை விற்பனையை நோக்கமாக கொண்டு நடத்தப்படும் விழாக்களில் கலந்துகொள்ளவும் தடை விதிக்க வேண்டும்.
துரித வகை உணவின் கெடுதல் குறித்தும்பாரம்பரிய உணவுகளின் நன்மைகள் குறித்து பள்ளிகளில் பாடம் வைக்க வேண்டும்.
துரித வகை உணவுகளுடன் இலவசமாக பொம்மைகார்ட்டூன் படங்கள் போன்ற சிறுவர் விளையாட்டு சாதனங்கள் அளிப்பது தடைசெய்யப்பட வேண்டும்.
மேற்கண்ட அனைத்தையும் நடைமுறைப்படுத்த புதிய சட்டம் இயற்ற வேண்டும்.
தடை செய்த உலக நாடுகள்!
கனடாகாஸ்டாரிக்காலாட்வியாலூதியானாமெக்ஸிகோபெருபிலிப்பைன்ஸ்தென் கொரியா,இங்கிலாந்துஸ்காட்லாந்துஐக்கிய அரபு நாடுகள்அமெரிக்கா ஆகிய நாடுகள் துரித வகை உணவுகளை பள்ளிகளில் மட்டும் விற்பனை செய்ய தடை விதித்துள்ளன.
ஆஸ்திரேலியாகனடாபிரான்ஸ்லூதியானாநியூசிலாந்துநார்வேபெருபோலந்துரோமானியாதென் கொரியாஸ்வீடன்தாய்வான்இங்கிலாந்துஅமெரிக்காஉருகுவே ஆகிய நாடுகளில் துரித வகை உணவு விளம்பரங்களுக்கே தடை விதிக்கப்பட்டுள்ளது. பின்லாந்துபிரான்ஸ்ஹங்கேரிஅயர்லாந்துமெக்ஸிகோ,பெருஅமெரிக்கா ஆகிய நாடுகளில் துரித வகை உணவுக்கு கூடுதல் வரி விதிக்கப்படுகிறது.
ஆனால் இங்கே நமது குழந்தைகள் கொஞ்சம் கொஞ்சமாக இவைகளுக்கு அடிமையாகி கொண்டு இருக்கிறது. நம் குழந்தைகளுக்கு பொதுவாக சோறு ஊட்டுவதற்கே படாத பாடுபட வேண்டிருக்கும், ஆனால் ஜங்க் ஃபுட்டை அதாவது PIZZA, KFC, McDONALDS, BROILER FRIED CHICKEN, BURGER, FRENCH FRY, PEPSI, COCA COLA அவர்களாகவே அப்படியே சாப்பிடுவார்கள். நமக்கு ரொம்ப சந்தோஷம். விலை ரொம்ப அதிகமாக இருந்தாலும் சரி, எப்படியோ நம் பிள்ளை நமக்கு தொல்லை தராமல் தானாக சாப்பிட்டால் சரி.
இதனால் ஏற்படும் விளைவு உடல் எடையையும் நோயையும் விலை கொடுத்து வாங்கி கொள்கிறோம். நமது பணத்தையும் வீண் விரயம் செய்கிறோம். எத்தனையோ ஏழைக்கு உணவளிக்கலாம். வெளிநாட்டுக்காரனை வாழ வைக்கிறோம். இந்தியக்காரனை சாகடிக்கிறோம். நமது கலாச்சார உணவுகளான இட்லி, தோசை, பொங்கல், பூரி, வடை, சப்பாத்தி, கூழை மறக்க வேண்டாம்.
இன்று அவசரமான கால கட்டத்தில்சாப்பிடுவதில் கூட அவசரம்அரக்க பறக்க சாப்பிடுகிறோம். நொறுங்கத் தின்றால் (மென்று தின்றால்) நூறு வயது வாழலாம் என்ற பழமொழியை மறந்து விட்டு வாழ்கிறோம்.
குழந்தைகளுக்கு சிறிய வயது முதல் தரையில் உட்கார்ந்து, கை, கால், முகம், வாய் கழுவி சாப்பிட பழக்க வேண்டும். அறுசுவை உணவு சாப்பிடுமாறு பார்த்து கொள்ள வேண்டும். கீரை வகைகள், பயறு வகைகள், கேப்பங் கூழ், கம்பு கூழ் போன்றவற்றை மறந்து விட வேண்டாம்.
இறைவனை நினைவு கூர்ந்து இறைவன் பெயரை சொல்லி சாப்பிட ஆரம்பிக்க வேண்டும். சாப்பிடும் போது, தொண்டையில் ஏதாவது மாட்டினாலே தவிர, தண்ணீர் குடிக்கக் கூடாது. வாயை மூடி, நன்றாக மென்று, நிதானமாக உண்ண வேண்டும். உணவை அவசர அவசரமாக அப்படியே விழுங்கக் கூடாது, வேகமாக சாப்பிடக்கூடாது. ஏப்பம் வந்த பிறகு சாப்பிடக்கூடாது, போதும் என்றான பிறகு சாப்பிடக்கூடாது. சாப்பிட்ட பிறகு கையை கழுவி வாயை நன்றாக கொப்பளிக்க வேண்டும். கடைசியாக இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும்.

ஷாஜஹான் முஹம்மது உமர்
தகவல் தாருஸ் ஸலாம் LBK

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக