Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வெள்ளி, 1 ஆகஸ்ட், 2014

கல்வியில் காவிமயமாக்கல் தீவிரம்!தனியாக அரசு சாரா நிறுவனம் உருவாக்கம்!


கல்வியை காவிமயமாக்கும் முயற்சியை தீவிரப்படுத்தும் நோக்கில் சங்க்பரிவார் அமைப்பான சிக்ஷா பச்சாவோ அந்தோலான் மற்றும் வித்யா பாரதியின் தலைவரான தினநாத் பத்ரா தனியாக ஒரு அரசு சாரா நிறுவனத்தை துவக்கியுள்ளார்.
அரசு சாரா கல்வி கமிஷன் (என்.ஜி.இ.சி) என்ற பெயரில் துவக்கப்பட்டுள்ள இவ்வமைப்பின் அலுவலகம் மேற்கு டெல்லியில் திறக்கப்பட்டுள்ளது. 
பத்ரா உள்பட 31 பேர் இவ்வமைப்பில் இடம்பெற்றுள்ளனர். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் ப்ரோ வைஸ் சான்ஸ்லர் கபில் கபூர், ஹிமாயூன் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் பி.எஸ்.ராஜ்புத் ஆகியோர் இவ்வமைப்பில் இடம்பெற்றுள்ள பிரமுகர்கள் ஆவர்.மூன்று ஆண்டுகள் ஆய்வுச் செய்த பிறகு சிபாரிசுகளை அரசுக்கு சமர்ப்பிப்போம் என்று பத்ரா தெரிவித்தார்.
வேத கணிதம், பண்பாட்டுக் கல்வி, முழுமையான மனிதநேயம் ஆகிய விஷயங்களை பாடப்புத்தகங்களில் இடம்பெறச் செய்யவேண்டும் என்பது இவ்வமைப்பின் நோக்கமாகும்.ஜலந்தரில் பஞ்சாப் தொழில்நுட்ப  பல்கலைக் கழகத்தில் மேற்கண்டவை போதிக்கப்படுவதாக பத்ரா தெரிவித்தார்.
இவ்வமைப்பின் செயல்பாட்டிற்காக அரசு நிதியை பெறுவதில் கருத்து வேறுபாடில்லை என்ற கொள்கையும் அவர்களுக்கு உண்டு.
நன்றி தூது ஆன்லைன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக