Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 5 ஆகஸ்ட், 2014

இஸ்லாமியர்கள் குறித்த வலி மிகுந்த பதிவு வெளியாகியுள்ளது...


ஆனந்த விகடனில்
மாரி செல்வராஜ் எழுதிவரும்
'மறக்கவே நினைக்கிறேன்' தொடரில் இந்த வாரம்,

இஸ்லாமியர்கள் குறித்த வலி மிகுந்த பதிவு வெளியாகியுள்ளது.


மாரி செல்வராஜ் இப்படி தொடங்குகிறார்: 'கொஞ்ச நாட்களுக்கு முன் கிறிஸ்துவப் பாதிரியார் ஒருவர் என் இயக்குனரைப் பார்ப்பதற்காக எங்கள் அலுவலகத்துக்கு வந்திருந்தார். அவர் ஒரு தொடக்கப் பள்ளிக்குச் சென்று 100 குழந்தைகளிடம் க்ரேயோன் பென்சில்களைக் கொடுத்து அவரவர் விருப்பப்படி தீவிரவாதிகளை வரையச் சொன்னாராம். அப்போது அந்தக் குழந்தைகள் வரைந்த ஓவியங்கள் இவை என்று சொல்லி ஒரு ஆல்பத்தை எங்களிடம் நீட்டினார். அதைப் பார்த்ததும் அதிர்ச்சி. 100 குழந்தைகளும் 100 தீவிரவாதிகளை வரைந்திருந்தாலும், அந்த 100 தீவிரவாதிகளிடமும் சொல்லிவைத்து வரைந்ததுபோலக் காணப்பட்ட ஒற்றுமைகள் தான் அதிர்ச்சிக்குக் காரணம். ஆம், அத்தனை தீவிரவாதிகளும் இஸ்லாமியர்கள் அணியும் குல்லா அணிந்திருந்தார்கள்; தாடி வளர்த்திருந்தார்கள். சில தீவிரவாதிகள் முழங்கால் வரை வேட்டி கட்டியவர்களாகக் கூட இருந்தார்கள்.'

இஸ்லாமிய சமூகம் சந்திக்கும் நெருக்கடிகள், இஸ்லாமியர்களைப் பற்றிய பொதுச்சமூகத்தின் பார்வைகள், இஸ்லாமியர்களின் மனநிலைகள் என விரியும் கட்டுரையின் ஒவ்வொரு வரியையும் படிக்கும்போது இதயம் கனக்கிறது.

குழந்தைகள் வரைந்த 100 தீவிரவாதிகளும் இஸ்லாமியராகவே இருந்தது கண்டு, தான் பெரும் அதிர்ச்சிக்குள்ளானதகாக தோழர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இதைப் படிக்கும் எந்த இஸ்லாமியரும் துளிகூட அதிர்ச்சியடைய மாட்டார்கள். ஏனெனில் அவர்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு அசைவிலும் இதை அனுபவப்பூர்வமாக தினம்தினம் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்திய விடுதலைக்காக வீர மரணமடைந்த திப்பு சுல்தானின் உண்மை வரலாற்றை, 'கற்பனைக் கதை' 
என்ற முன்னறிவிப்புடன் தேசிய ஊடகமே ஒளிபரப்பினால் வேறு என்ன நடக்கும்?

ரோஜா முதல் விஸ்வரூபம் வரை திரையில் விரியும் காட்சிகளிலெல்லாம் முஸ்லிம்களை கொத்திக் குதறினால் வேறு என்ன நடக்கும்?

எங்கே குண்டுவெடிப்பு நடந்தாலும் காவல்துறையின் விசாரணைக்கு முன்னரே, ஊடகங்கள் முந்திக்கொண்டு இந்தியன் முஜாஹிதீனை நோக்கி கைநீட்டினால் வேறு என்ன நடக்கும்?

அதிரை தமீம் அன்சாரி, பயங்கரவாதி என்று சொல்லி கைது செய்யப்பட்டபோது முதல்பக்க செய்தி வெளியிட்டவர்கள், அவர் குற்றமற்றவராக விடுதலையானதை கடைசிப் பக்கத்தின் கடைசி வரியில்கூட சொல்லாமல் விட்டால் வேறு என்ன நடக்கும்?

விஸ்வரூபத்துக்கு எதிரான போராட்டங்களை போட்டி போட்டுக் கொண்டு படம்பிடித்து பரபரப்பை பற்ற்வைத்தவர்கள், அப்பாவி முஸ்லிம் சிறைவாசிகளின் விடுதலைக்கான போராட்டங்களை இருட்டடிப்பு செய்தால் வேறு என்ன நடக்கும்?

முஸ்லிம்களுக்கு எதிரான ஊடக பயங்கரவாதம் தொடரும் வரை இதுதான் நடக்கும்.

சிறுபான்மை முஸ்லிம்களைப் பற்றிய நல்ல பதிவைச் செய்யும் மாரி செல்வராஜ் போன்ற மனிதநேயர்கள், ஊடகங்களில் சிறுபான்மையினராக இருக்கும் வரை இதுதான் நடக்கும்.

மாரி செல்வராஜுக்கும், விகடனுக்கும் நன்றி
கட்டுரைக்கு நன்றி-ஆளூர் ஷாநவாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக