Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 25 ஆகஸ்ட், 2014

ஆலுக்கொரு போஸ்ட்டர் - ஜமாய்



இவர்கள் இது போன்ற போதனைகளை மறந்ததினால் தான் இப்படி எல்லாம் நடைபெறுகின்றன - ஆசிரியர் குழு

அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் மறைவு முஸ்லிம்களின் மனங்களில் சில கணங்கள் வெறுமையை ஏற்படுத்தியது
. எனினும் சிறிதும் தாமதிக்காமல் அதிலிருந்தும் விடுபட்ட முஸ்லிம்கள் தங்களை வழிநடத்திச் செல்ல புதிய தலைவரைக் தேர்ந்தெடுத்தார்கள்.
இறைத்தூதரின் மறைவுக்குப் பின்னால் முஸ்லிம்கள் பலவீனமாகிவிடுவார்கள் என்று காத்திருந்த சிலர் , தருணம் பார்த்து சமூகத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு முயற்சிகள் எடுத்துக் கொண்டிருந்தார்கள்.
இஸ்லாத்திலிருந்து பலர் வெளியேறும் செய்திகள் நாலாபுறங்களிலிருந்தும் வந்து கொண்டிருந்தன . முஸைலமாவைப் போன்ற பொய்யர்கள் தங்களை நபி என்று பிரகடனப்படுத்தி பிளவுகளை ஏற்படுத்த களம் இறங்கினார்கள்.
முதலாம் கலீஃபாவாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அபூபக்கர் (ரலி) அவர்களுக்கு இத்தகைய மிகக் கடினமான சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.
உமர் (ரலி) , உதுமான் (ரலி) , அலீ (ரலி) போன்ற பெரும் நபித்தோழர்களை அழைத்து அபூபக்கர் (ரலி) அவர்கள் ஆலோசனை நடத்தினார். இஸ்லாத்திற்கு துரோகம் இழைப்பவர்களை சிறிது காலம் ஒன்றும் செய்ய வேண்டாம் என்பதாக இருந்தது அவர்களின் கருத்துக்கள்.
உமர் (ரலி) அவர்கள் இவ்வாறு கூறினார் “ அல்லாஹ்வின் தூதரின் பிரதிநிதியாக இருக்கும் தாங்கள் மக்களுக்கெதிராக எதிர் நடவடிக்கைகள் எடுக்க வேண்டாம் . அவர்களுடன் நல்ல உறவுகளை ஏற்படுத்துவது நல்லது.”
ஆனால் , அபூபக்கர் (ரலி) அவர்களின் பதில் இவ்வாறாக இருந்தது
“ நான் தங்களின் உதவிகளை எதிர்பார்த்திருந்தேன் . ஆனால் , தாங்கள் என்னைக் கைவிட்டு விட்டீர்கள் . இஸ்லாத்திற்கு முன்பு தீரராக இருந்த தாங்கள் இஸ்லாத்திற்குப் பின்னால் பலவீனராக ஆவதா ? நான் யாருக்காக அஞ்ச வேண்டும் ? அல்லாஹ்வின் வேதத்தைப் புறக்கணித்து இட்டுக்கட்டப்பட்ட கவிதைகளையும் , இலக்கியங்களையும் வைத்துக்கொண்டு நான் மக்களைக் கவர வேண்டும் என்றா கூறுகிறீர்களா ? ஒரு பொழுதும் முடியாது . அல்லாஹ்வின் தூதர் விடை பெற்று விட்டார்கள். ஆனால் , அவர்கள் கொண்டு வந்த இறைச்செய்தி இங்கே நிலை பெற்று விட்டது . இறைச்சட்டங்களில் இனி மாற்றம் இல்லை . ஜக்காத்தின் பாகமாக அவர்கள் எனக்கு ஓர் ஒட்டகக் கயிறைத் தர மறுத்தால் கூட என் கைகளில் வாள் பிடிக்க சக்தியுள்ளவரை நான் அவர்களுடன் போராடுவேன் .”


நமது நிருபர்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக