Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2014

வதந்திகளை பரப்பாதீர்...: ஆண்ட்ராய்டு,ஆப்பிள் போன்களுக்கான ஐடியை பயன்படுத்தி அவற்றின் செயல்பாடுகளை கண்காணிக்க முடியுமா..??


சமீபத்தில் வாட்சப் வழியாக ஒரு ஆடியோ கிளிப் பலருக்கும் பரபரப்பாக பகிரப்பட்டது.

ஆன்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் போன்களை முதன் முதலாக திறப்பதற்கு பயன்படுத்தப் படும் ஜிமெயில் ஐடி,ஆப்பிள் ஐடி போன்றவற்றை பயன் படுத்தி (பாஸ்வேர்ட் தேவையில்லை) குறிப்பிட்ட அந்த தொலைபேசியில் இருந்து பேசப்படும் கால்கள்,பயன்படுத்தப்படும் அப்ளிகேசன்கள்,பிரவுசிங் பதிவுகளை இன்னொருவர் மிக எளிதாக கண்காணிக்க முடியும்...,


இது குறித்து சமீபத்தில் வெளியான ஸலாலா மொபைல் எனும் மலையாள திரைப்படத்தில் காட்சிப் படுத்தப் பட்டுள்ளது எனவும் தாம் அவ்வாறே செய்து பாரத்து உறுதி செய்து கொண்டதாக அந்த ஆடியோவில் பேசிய நபர் குறிப்பிட்டிருந்தார்.

தொலைபேசியை ஒட்டுக் கேட்பது சர்வசாதாரணமாக நடைபெற்று வருவதை நாம் பார்க்கிறோம். ஆயினும் இந்த வாட்ஸப் ஆடியோவில் சொன்னது போல ஆண்ட்ராய்ட் ஜிமெயில் ஐடி,ஆப்பிள் ஐடி போன்றவற்றை பயன்படுத்தி குறிப்பிட்ட தொலைபேசியின் ஒட்டுமொத்த செயல்பாடுகளை கண்காணிக்க முடியுமா என்பது தெரியவில்லை.

அந்த ஆடியோவில் குறிப்பிட்ட ஸலாலா மொபைல் என்ற மலையாள திரைப்படத்தில் அத்தகைய காட்சிகள் எதுவும் இடம்பெறவில்லை.

*உங்கள் மொபைல் போனை தொழில் நுட்பம் தெரிந்தவர்கள் கையில் கொடுக்காதீர்..

*இணையதளத்தை பயன்படுத்தி முடிந்ததும் DATA அல்லது WIFI இணைப்பை துண்டித்து விடுங்கள்..

என்பதாக ஏகத்துக்கும் அக்கறை தொனித்த குரலில் அறிவுரை சொல்லியிருந்தார் அந்த குரல் பதிவாளர்..!

தொலைபேசிகளை பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும் என்று அறிவுரை கூறுவதில் தவறேதும் இல்லை..

ஆனால் இது போன்ற ஆதாரமற்ற தவறான பதிவுகளை வெளியிட்டு தேவையற்ற குழப்பங்களை நம்மில் பலர் செய்து வருகின்றனர்.

இது உண்மையான தகவலா என்று உறுதிப் படுத்தாமல் உடனேயே நமது வாட்சப்,டெலிகிராம் தொடர்பில் இருக்கும் அணைவருக்கும் அடுத்த நொடியே அதை அனுப்பி விடுகிறோம்.

இதை கேட்ட மறுகணமே ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கு பரப்பி விடுகின்றனர்.

தயவு செய்து தவறான தகவல்களை பரப்புவோர் இந்த இறை வசனத்தை ஒரு முறை நினைவில் கொள்ளுங்கள்...

முஃமின்களே! ஃபாஸிக் (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள்; (இல்லையேல்) அறியாமையினால் (குற்ற மற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம்; பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப் படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள். (அல்குர்ஆன் : 49:6)

தகவல் :ரிஃபாயி‬

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக