Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2014

முஸ்லிம்கள் தொழுகைக்கு இடம் ஒதுக்கிய திருச்சி விமான நிலையம்..!!!

முஸ்லிம்கள் தொழுகைக்கு இடம் ஒதுக்கிய திருச்சி விமான நிலையம்..!!!
திருச்சி விமான நிலையத்திற்கு அதிகமான தஞ்சை நாகை திருச்சி மற்றும் அதன் சுற்றியுள்ள மாவட்டங்களை சார்ந்த பல வெளிநாட்டினவரும் இந்த விமான நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

இங்கு செல்லும் பயனிகளின் அதிகமானவர்கள் மூஸ்லிம்கள் அரபுநாடுகளுக்கு பயனிப்பதால், பயனிகள் தொழுகை இடமின்றி தவித்துவந்தனர்.
இந்நிலையில் தற்போது விமான நிலையத்தின் உள்பகுதியில் தொழுகைக்காக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.


எமிகிரேசன் இடது புறமாக இந்த அறை அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் திருச்சி விமான நிலையத்திற்கு அனுப்பிவைக்க அல்லது அழைத்து செல்ல வரும் பயனிகளுக்கும் இது போன்ற வசதிகளையும், நிகழ் குடையையும் அமைத்தால் பொதுமக்கள் அனைவருக்கும் வசதியாக இருக்கும்.


1 கருத்து:

  1. இது ஒரு நன்ற்க்குறிய விஷமில்லயா!! சகோதரர் களே ! அல்லாஹ்வுக்கு நன்றி கூற்ம் இவ்வேலையில், விமான நிலைய அதிகாரிகளையும் பாராட்டுங்கள்.

    பதிலளிநீக்கு