Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 11 ஆகஸ்ட், 2014

வேலைவாய்ப்பற்றோருக்கு உதவித்தொகை விண்ணப்பிக்க அழைப்பு!

பெரம்பலூர்,:  வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாமென பெரம்பலூர் கலெக்டர் தரேஸ்அஹமது தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பள்ளியில் எஸ்எஸ்எல்சி பயின்று தேர்ச்சியடையாதவர்கள் முதல் பட் டதாரிகள் வரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து தொடர்ந்து ஐந்து வருடங்களுக்கு மேலாக வேலைவாய்ப்பின்றிக் காத்திருக்கும் பதிவுதாரர்களுக்கு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் பெரம்பலூரிலுள்ள மாவட்ட
வேலைவாய்ப்புத்துறை அலுவலகத்தால் விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது. இதற்காக விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் தங்களது கல்வித்தகுதியை பதிவு செய்து ஐந்து வருடங்கள் முடிவடைந்தவராக இருக்க வேண்டும். அதாவது 2009 ஜுன் மாதம் 30ம்தேதி க்கு முன்ன தாக பதிவு செய்தவராக இருக்க வேண்டும். மனுதாரர் தனது வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டையை தவறாது தொடர்ந்து புதுப்பித்து வந்திருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியினத்தவர்கள் 2014 ஜுன் 30ம் தேதியில் 45 வயதைக் கடந்தவராக இருத்தல் கூடாது. மற்ற வகுப்பினர், அதே போன்று 40 வயதைக் கடந்தவராக இருத்தல் கூடாது. மனுதாரருடைய குடும்ப ஆண்டு வருமானம் ரூ.50ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். மனுதாரர் எந்த ஒரு கல்விநிறுவனத்திலும் சேர்ந்து கல்விபயிலும் மாணவ, மாணவியராக இருத்தல் கூடாது. ஆயினும் தொலைதூரக்கல்வி பயிலுபவராக இருக்கலாம். மனுதாரர் சுயமாகத் தொழில் செய்பவராகவோ, சுயமாக சம்பாத்தியம் செய்ப வராக வோ இருத்தல்கூடாது. புதிய விண்ணப்பப்படிவம் வழங்கப்பட்டு பூர்த்திசெய்த படிவங்கள் ஆகஸ்ட் 24ம் தேதிவரை அலுவலக வேலைநாட்களில் பெறப் படும். மனு தாரர் விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக்கொள்வதற்கு அனைத்து கல்வி சான்றிதழ் கள், மாற்றுச்சான்றிதழ், வேலைவாய்ப்புத்துறை அலுவலக அடையாளஅட்டை போன்ற அசல்ஆவணங்களுடன் வருகைதர வேண்டும் எனத்தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக